India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதவெறி பிடித்தவர்களும், (பாஜக), சாதியை வைத்து ஊழலில் மலிந்து முகமூடியை அணிந்துகொண்டு நம்மை ஆள்பவர்களே (திமுக) நமது எதிரி என்று விஜய் சூளுரைத்துள்ளார். சிறுபான்மை, பெரும்பான்மை எனக் கூறி, இங்கு ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது. திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரம் செய்கிறது என்று திமுகவை நேரடியாக தாக்கினார்.
நடித்தோமா, பணம் சம்பாதித்தோமானு இருந்திடலாம் என்று தான் முதலில் தோன்றியது என்று தொடங்கிய விஜய், “ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்த்து என்ன செய்யப் போகிறோம் என ஒரு கட்டத்தில் தோன்றியது. நம்மள இந்த உயரத்தில் வைத்திருக்கும், வாழவைக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. இதை தீவிரமாக யோசித்ததன் விளைவாக மனதில் தோன்றிய எண்ணம் தான் ‘அரசியல்’, மக்களுக்கான அரசியல்!” என்றார்.
பெரியார் பயணத்தில் பெண் கல்வி உள்ளிட்டவற்றை ஏற்கிறோம். ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் உடன்பாடு இல்லை என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா சொன்னதுபோல ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே எங்களின் நிலைப்பாடு எனக் கூறிய அவர், பெரியார் என்றதும் ஒரு கூட்டம் பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசி பெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார்.
விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றுவரும் தவெக மாநாட்டில் மேடையில் ஐந்து இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதில் தவெக தலைவர் விஜய்யுடன் நான்கு பேர் அமர்ந்தது கவனத்தை ஈர்த்தது. அவர்கள் தவெக கொள்கை பரப்பு துணை செயலாளர் தாஹிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், பொருளாளர் வெங்கட்ராமன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆகியோர்தான் அந்த 4 பேர்.
தவெக மாநாட்டு மேடையில் அதன் தலைவர் விஜய்க்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. வாளை கையில் ஏந்தி, தொண்டர்கள் மத்தியில் தூக்கிப்பிடித்து காண்பித்தார். இதன்பின் ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் அரசியல் சானம், இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை, இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆன், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் உள்ளிட்ட நூல்கள் பரிசாக விஜய்க்கு வழங்கப்பட்டது.
*தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. *வர்ணாசிரம வழக்கங்களுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். *தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என்ற நிலை உறுதி செய்யப்படும். *ஆண், பெண், 3ஆம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சமமாக நடத்தப்படுவர். *தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் தண்டனை. *லஞ்ச, ஊழலற்ற நிர்வாகம் உறுதி.
தவெக மாநாட்டை இரவு 7 மணிக்குள் முடிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும், வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு முன்னரே தொடங்கியுள்ளதால் 7 மணிக்குள்ளாகவே மாநாடு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில, மாவட்ட அளவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் விருதுகள் வழங்கி வருகிறது விஜய் மக்கள் இயக்கம். 2023 கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், “பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை படியுங்கள்” என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டு இதே நிகழ்வில், நீட் தேர்வு குறித்தும், காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும் எனவும் விஜய் பேசினார்.
*நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற சட்ட திருத்தம். *போதைப் பொருளை ஒழிக்க சிறப்பு சட்டம். * விவசாயிகள் – நுகர்வோர் இடைவெளியை குறைக்க நடவடிக்கை. *எல்லோருக்கும் எல்லாமும் ஆன சமுதாயத்தை உருவாக்குதல். *மாவட்டந்தோறும் மகளிர் SP நியமிக்கப்படுவர். *மாவட்டந்தோறும் அரசு பன்னோக்கு ஹாஸ்பிட்டல். *சாதி ஒழிக்கப்படும் வரை அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம்.
Sorry, no posts matched your criteria.