India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோபமாக கொந்தளித்தான் அரசியல் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது என்று விஜய் தெரிவித்துள்ளார். அறவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமா?, அரசியலும் மாற வேண்டும் எனக் கூறிய அவர், தற்போதைய தேவை என்ன என்று மக்களிடம் எடுத்துக் கூறினால்போதும், நம் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் தற்போதைய பிரச்னை, தீர்வு என்ன என்பதை பற்றி மட்டுமே சிந்திக்கப் போகிறோம் என்றார்.
விஜய் பேசுகையில், “இவ்வளவு பேசிய நான், இந்த விஜய், ஏன் அரசியல் எதிரிகள் யார் பேரையும் சொல்ல மாட்றான்னு சில அரசியல் விஞ்ஞானிகள் நையாண்டி செய்வார்கள், கேலி செய்வார்கள் என்று தெரியும். நாங்க யாரையும் தாக்கி அரசியல் செய்ய வரவில்லை. அரசியல் எதிரியாக இருந்தாலும் சரி, ஐடியாலஜி எதிரியாக இருந்தாலும் சரி, டீசண்ட் அட்டாக், டீசண்ட் அப்ரோச், ஆனால் டீப்பா இருக்கும் என்றார். டீசண்ட் அரசியல் சாத்தியமா?
மக்களை மத அடிப்படையில் பிரித்தாளும் பிளவுவாதிகள் என்று வலதுசாரிகளை ஒருபக்கம் விளாசிய விஜய், பாசிசம் பாயாசம் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் கூட்டம் என்று எதிர்த் தரப்பினரையும் தாக்கினார். பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள், ஆனால் ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள் . நம்மை ஆள்வது கரெப்ஷன் கபடதாரிகள் என்றார். யாரை சொல்கிறார் விஜய்?
தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பவர்களுக்கு விஜய் பதிலளித்துள்ளார். திராவிடம் வளர்ந்ததே கூத்தை வைத்து தான். ஆந்திராவில் NTR, தமிழகத்தில் MGR அரசியலுக்கு வந்தபோதும் இப்படித்தான் விமர்சித்தனர் என்ற அவர், கூத்தாடி என்றால் கேவலமான சொல்லா என்று கேள்வி எழுப்பினார். கூத்து என்பது தமிழ் கலாசாரத்தின் ஆதி வடிவம் என்றும், தான் உழைத்து முன்னேறிய கூத்தாடி எனவும் அவர் தெரிவித்தார். உங்க கருத்து என்ன?
மாற்றுச்சக்தி என்று சொல்லிக் கொண்டு நான் இங்கு அரசியலுக்கு வரவில்லை. திராவிடம், தமிழ்த்தேசியம் ஆகியவை தான் எங்களின் இரு கண்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார். நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று கூட்டணிக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ள விஜய், 2026இல் ஆட்சியமைக்கும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில், இந்திய – சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைப் பிரச்னையில் இருநாடுகளுக்கும் இடையே தீர்மானம் எட்டப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங்கின் வருகை அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இருநாட்டு வீரர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபடும் பகுதியாக தவாங் உள்ளது.
தவெக மேடையில் முதலில் நார்மலாக பேசிய விஜய், அரசியல் மேடையில் பேச்சு என்றதும், வழக்கமாக தலைவர்கள் பேசுவது போன்று அவர்களே, இவர்களே என பேசினார். பின்னர், இளம் தலைமுறைக்கு எளிமையாக புரியும்படி, நேரடியாக பேசி அரசியல் செய்ய வந்துள்ளதாக கூறினார். புள்ளி விவரங்களை ஒப்பிக்க போவதில்லை என்றும், பழைய பாணியில் அரசியல் பேச்சுக்களை பேசப்போவதில்லை என்றும் இயல்பான மொழியில் பேச்சை தொடர்ந்தார்.
பிளவுவாத சக்திகள், கரப்ஷன் கபடதாரிகள் தான் தவெகவின் எதிரிகள் என விஜய் கூறியுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசிய அவர், மக்களுக்காக களத்தில் நிற்பதே மகத்தான அரசியல் என்றார். மேலும், அரசியலில் தான் மாற்று சக்தியாக வரவில்லை; முதன்மை சக்தியாக வந்துள்ளதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 2026 தேர்தலில் TVKக்கு ஓட்டு போடுவீர்களா? கமெண்ட் பண்ணுங்க.
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சிதான் தவெக என விஜய் உறுதி அளித்துள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டில் தனது தங்கை நித்யாவின் இழப்பை நினைவுகூர்ந்த அவர், நீட் தேர்வால் அனிதா மரணமடைந்த நிகழ்வையும் குறிப்பிட்டார். அப்போது முடிவு செய்த நான், ஒரு மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வொரு பெண்ணிற்கும் துணையாக இருந்து கடைசி வரை போராட வேண்டும் என உறுதியேற்றதாகவும் தனது நிலைப்பாட்டை அவர் கூறினார்.
இறங்கி அடிக்க வேண்டும் என்றே வந்துவிட்டேன். இனி பின்வாங்க மாட்டேன் என்று விஜய் சூளுரைத்துள்ளார். என் மீது பாசிச சாயத்தை பூச, இங்கு இருப்பவர்கள் முயற்சி செய்கின்றனர். இந்த மோடி மஸ்தான் வேலைகளை எல்லாம் என்னிடம் செய்ய முடியாது என்று தெரிவித்தார். மேலும், தவெகவை ஏ டீம், பீ டீம் என்று அவதூறு பரப்புரை செய்து எங்களை வீழ்த்த முடியாது என்றும் எச்சரித்தார்.
Sorry, no posts matched your criteria.