news

News December 7, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

▶பாகிஸ்தானின் சவுத் வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த 8 தீவிரவாதிகளை அந்நாட்டின் ராணுவம் சுட்டு கொன்றது. ▶ரூபாய் நோட்டுகளில் இருந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை நீக்க, வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. ▶2027இல் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பேன் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார். ▶கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.

News December 7, 2024

சூரிக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மி

image

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி. தமிழில் ஜகமே தந்திரம், PS 1 & 2, தக் லைப் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், ‘விலங்கு’ வெப் தொடர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கவுள்ள புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் அவர் சூரிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

News December 7, 2024

அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய CCI

image

இந்தியா சிமெண்ட்ஸை கையகப்படுத்துவது தொடர்பாக அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு இந்திய சந்தை போட்டி ஆணையம் (CCI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ₹1,900 கோடி மதிப்பில், இந்தியா சிமெண்ட்ஸின் 23% பங்குகளை அல்ட்ராடெக் வாங்கியுள்ளது. இந்நிலையில், நிறுவன கையகப்படுத்தல் நடவடிக்கை குறித்து ஏன் விசாரணை நடத்தக்கூடாது என CCI கேட்டுள்ளது. நோட்டீஸூக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்க இரு நிறுவனங்களும் பதிலளிக்க வேண்டும்.

News December 7, 2024

கிரியேட்டினின் அளவு குறைக்கும் மூக்கிரட்டை குடிநீர்

image

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை மூக்கிரட்டையில் உள்ள போயரவினோனுக்கு இருப்பதாக நவீன மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. எரிச்சலைப் போக்கி சிறுநீரைப் பெருக்கும் மூக்கிரட்டை தாவரத்தை நீரிலிட்டு, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான, மூக்கிரட்டை டீ ரெடி. இந்த டீயை பருகினால், ரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவு குறையுமென என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News December 7, 2024

ஸ்டம்பை குறிவைத்து பந்துவீசும் பும்ரா: டிராவிஸ்

image

இந்திய அணியின் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து ஆஸி., வீரர் டிராவிஸ் ஹெட் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “பும்ரா ஸ்டம்புகளை குறிவைத்து துல்லியமாக பந்துவீசுகிறார். மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதை நினைத்து அதிகம் கவலைப்படவில்லை. அவர் பேட்டர்களின் கால்களை குறிவைத்தே அதிகம் பந்துவீசுவார்” என்றார்.

News December 7, 2024

₹1.6 லட்சத்தில் மத்திய அரசின் வேலை!

image

கெயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 261 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் இன்ஜினியர், சீனியர் அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் பணியாற்ற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-45. கல்வித்தகுதி: BA, B.Sc, B.Com, BE, B.Tech., MA, CA, MBA, LLB . சம்பளம்: ₹50,000 – ₹1,60,000/-. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.11. கூடுதல் தகவலுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

News December 7, 2024

அதானியை மோடி பாதுகாக்கிறார்: காங்கிரஸ்

image

அமெரிக்க வங்கிகள், முதலீட்டாளர்களிடம் முறைகேடாக முதலீடு பெற்ற அதானியை மத்திய அரசும், பிரதமர் மோடியும் பாதுகாப்பதாக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “இந்திய, அமெரிக்கச் சட்டங்களை மீறிய அதானியை, உடனடியாகக் கைதுசெய்திருக்க வேண்டும். ஆனால், அது குறித்து நாடாளுமன்றத்தில் பேச முடியாத அளவுக்கு கெடுபிடிகள் செய்கிறார்கள்” என்றார்.

News December 7, 2024

டிசம்பர் 7 வரலாற்றில் இன்று!

image

➤1732 – லண்டனில் ராயல் ஓபரா திறக்கப்பட்டது. ➤1842 – நியூயார்க் பில்ஹார்மோனிக்கில் முதல் இசை நிகழ்ச்சி நடந்தது. ➤1928 – மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கி பிறந்த நாள். ➤1941 – பேர்ள் துறைமுகம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. ➤1988 – யாசர் அரபாத் இஸ்ரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார். ➤1995 – நாசா அனுப்பிய கலிலியோ விண்கலம் வியாழனை அடைந்தது. ➤2010 – மனித உரிமை செயற்பாட்டாளர் பான் இயூ தெங் மறைந்த நாள்.

News December 7, 2024

விஜய் குடும்பத்துடன் படம் பார்த்த ரஷ்மிகா

image

நடிகை ரஷ்மிகா மந்தனா தான் கதாநாயகியாக நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை நடிகர் விஜய் தேவரகொண்டா குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல மாலில் தேவரகொண்டாவின் அம்மா மாதவி, சகோதரர் ஆனந்த் ஆகியோர் அவருடன் சேர்ந்து வந்ததைக் கவனித்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கூச்சல் போட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

News December 7, 2024

அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி

image

ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப்பின் லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி ஜப்பானிடம் தோல்வியடைந்தது. டெல்லியில் நடந்த இறுதி லீக் போட்டியில் IND அணி, ஜப்பானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜப்பானிடம் IND அணி 15-48 என்ற கணக்கில் வீழ்ந்தது. இதுவரை நடந்த 3 போட்டியில் ஒன்றில் மட்டும் வென்று, புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம்பிடித்த இந்திய அணி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

error: Content is protected !!