India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டாசு துகள்கள் பட்டவுடன், கண்களை தேய்க்கக் கூடாது. குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவதன் மூலம் கண்ணுக்குள் விழுந்த பட்டாசு துகள்கள் வெளியேறிவிடும். கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள், லென்ஸை கழற்றிவிட்டு கண்ணாடி அணிந்தபடி பட்டாசு வெடிக்கலாம். குறைந்தபட்சம் 5 மீட்டர் இடைவெளியில் நின்றபடி வெடிக்கலாம். வெடிகளை கையில் கொளுத்தி விளையாடுவதை தவிர்த்தால், கண்களை காக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என CM ஸ்டாலினுக்கு காங்., மாநில பொதுச் செயலாளர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார். தவெக தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என பேசியுள்ளார். ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். உங்கள் (ஸ்டாலின்) தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது என தமிழக மக்களும் எதிர்பார்ப்பதாக சூசகமாக செக் வைத்துள்ளார்.
திமுகவை தூக்கி எறிய இளைய சமுதாயம் தயாராகி விட்டதை விஜய் கட்சியின் மாநாடு பிரதிபலிப்பதாக ADMK Ex மினிஸ்டர் உதயகுமார் கூறியுள்ளார். தவெக மாநாடு சிறந்த துவக்கம் எனக் குறிப்பிட்ட அவர், வாரிசு அரசியலை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்றார். மேலும், தவெக கொள்கைகளை வரவேற்ற அவர், விஜய் கட்சியால் அதிமுகவுக்கு எள் முனையளவுகூட பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்தார். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? Cmt Here.
விஜய்யின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர், சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி குறித்து பேசியது தனக்குப் பிடித்திருந்ததாக கூறியுள்ளார். ‘பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணிக் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வழங்கப்படும்’ என விஜய் கூறியிருந்தார். ஏற்கெனவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்., VCK கட்சிகள் விஜய் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் உலகில் நமக்கு தெரியாமல், பிரைவசியை மீறுவதை தடுக்க ஜெர்மனியின் பில்லி பாய் நிறுவனம் ‘Camdom’ என்ற ஆப்பை உருவாக்கியுள்ளது. இதையே டிஜிட்டல் காண்டம் என்கின்றனர். நம்முடன் இருப்பவர்களே நமக்கு தெரியாமல், கேமராவில் பதிவுச் செய்வது, உரையாடலை ரெக்கார்ட் செய்வது, இவற்றை மற்றவர்களுக்கு பகிர்வது போன்றவற்றை, புளூடூத் அடிப்படையில் செயல்படும் இந்த ஆப் தடுப்பதுடன், உங்களை எச்சரிக்கவும் செய்யும்.
டிஜிட்டல் காண்டம் என்று அழைக்கப்படும் comdom ஆப், புளூடூத் அடிப்படையில் செயல்படுகிறது. உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா, மைக் போன்றவற்றை, உங்கள் ஒப்புதல் இல்லாமல், மற்றவர்கள் ரகசியமாக ஆக்சஸ் செய்வதை தடுக்கிறது. பயனர்கள் தங்கள் போன்களை அருகருகே வைத்து ஆப்பின் விர்ச்சுவல் பட்டனை ஆன் செய்து பிரவசியை பிளாக் செய்ய வேண்டும். யாராவது அத்துமீறினால், உடனே அலாரம் ஒலித்து மற்றவருக்கு காட்டிக் கொடுத்துவிடும்.
நெருக்கமாக இருக்கும் அந்தரங்க தருணங்களை, ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர் பதிவுச் செய்வதை, பகிர்வதை தடுக்க comdom app உதவுகிறது. குறிப்பாக உறவு கசந்தபின் பலரும் பழிவாங்க பயன்படுத்தும் ரிவெஞ்ச் போர்ன் வீடியோக்கள் எடுப்பதை, பகிர்வதை தடுக்கிறது. இதனால் தேவையற்ற மனச்சோர்வு, பதற்றம் உள்ளிட்ட மனப் பாதிப்புகளை தடுக்கலாம். நன்றாக பழகிய பின்னர், பழிவாங்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் தடுக்க முடியும்.
கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலையில் பசுமை பட்டாசுகள் விற்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு அங்காடிகளில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுவதாகவும், அதிரசம், முறுக்கு தயாரிக்க தேவையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு ₹190க்கு விற்கப்படுவதாகவும் கூறினார். மேலும், குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை மகளிர் வரவேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். VAO, பில் கலெக்டர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. 20 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.
ரஜினி அரசியலுக்கு வராததால், பாஜகதான் விஜய்யை களம் இறக்கியிருக்கிறதோ என சபாநாயகர் அப்பாவு சந்தேகம் எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், வருமான வரி சோதனையில் சிக்கியபோது விஜய்க்கு திமுகதான் ஆதரவு குரல் கொடுத்ததாகக் கூறினார். மேலும், மற்றவர்களை குறை சொல்லும் விஜய் உண்மையானவராக இருக்க வேண்டும் என்றார். திமுகவை அரசியல் எதிரி என விஜய் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.