news

News October 28, 2024

ஜப்பான்காரன், ஜப்பான்காரன் தான்!

image

ஜப்பானில் அலுவலக பார்க்கிங் தொடர்பான ஒரு விதி, அவர்கள் ஏன் முன்னேறி இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. அலுவலகத்துக்கு பணியாளர்கள், வேலை நேரத்துக்கு முன்பே வந்தால், அவர்கள் தங்கள் வாகனத்தை பார்க்கிங் இடத்தில் தொலைவில் நிறுத்த வேண்டும். ஏன் தெரியுமா? தாமதமாக வரும் பணியாளர்கள், பார்க்கிங்கில் முன்புறம் காலியாக உள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நேரத்துக்கு பணிக்கு வர இந்த ஏற்பாடாம்.

News October 28, 2024

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தேதி மாற்றம்

image

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் தேதியை மாற்றி EC அறிவித்துள்ளது. நவ.9,10இல் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளி மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய நவ.9ஆம் தேதி வேலை நாளாக TN அரசு அறிவித்தது. இதன் காரணமாக, நவ.16,17இல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.

News October 28, 2024

ஈரான் தலைவருக்கு எதிராக X எடுத்த ஆக்ஷன்…

image

ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கமேனியின் கணக்கை X தளம் முடக்கியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக கடும் விமர்சனங்களை, அடிக்கடி ஹீப்ரு மொழியில் பதிவிடுவது இவரின் வழக்கம். அண்மையில், ஈரானின் பலம் என்னவென்று தெரியாமல் இஸ்ரேல் தப்புக் கணக்கு போட்டதாக இவர் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், விதிகளை மீறியதாக அவரின் X கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமையை ஆதரிப்பவர் X ஓனர் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 28, 2024

விஜய்க்கு ஆதரவாக 4 கட்சிகள், எதிராக 2 கட்சிகள்

image

விஜய்யின் அரசியல் பேச்சுக்கு DMK, BJP எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் VCK, காங்., புதிய தமிழகம் வரவேற்றுள்ளன. அதேபோல், விஜய்யின் கொள்கையும், ADMKவின் கொள்கையும் ஒன்றுதான் என EX மினிஸ்டர் மாஃபாவும் கூறியுள்ளார். தற்போதுவரை விஜய்க்கு எதிராக 2 கட்சிகளும், ஆதரவாக 4 கட்சிகளும் உள்ளன. இது 2026 தேர்தலில் எதிரொலிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

News October 28, 2024

முதல் தீபாவளியில் அயோத்தியின் உலக சாதனை

image

ஜனவரி மாதம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தனது முதல் தீபாவளியை கொண்டாடவுள்ளது. திருவிழா நாளில் சாகேதபுரி மற்றும் சரயு கடற்கரையில் 28 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன. விளக்கினால் மாசு ஏற்படாமல் இருக்க சிறப்பு விளக்குகளும் தயாராகின்றன. 30,000 தன்னார்வலர்கள் 55 கட்டடங்களில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுவது உலக சாதனையில் இடம்பெறும்.

News October 28, 2024

இருமொழிக் கொள்கைக்கு அண்ணாமலை எதிர்ப்பு

image

இருமொழிக் கொள்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் கூட மாணவர்கள் 3ஆவது மொழி படிக்க வேண்டாம் என நினைப்பதாக தவெகவை மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் என்ன செய்தார்களோ, அதையே புதிதாக களத்திற்கு வருபவர்களும் செய்கிறார்கள் என்றார்.

News October 28, 2024

கண்களை காக்கும் 20-20-20 விதி

image

கணினி, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு நாள்பட்ட தலைவலி, கழுத்து & முதுகுவலி, பார்வை மங்குதல், கண் எரிச்சல் & சிவத்தல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகம். இதைத் தடுக்க 20-20-20 விதி உதவும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 விநாடிகள் ஓய்வெடுத்துக் கொண்டு 20 அடி தொலைவில் இருக்கும் (பசுமை) பொருட்களை பார்க்க வேண்டும். இது கண் தசைகளுக்கு இளைப்பாறல் அளித்து வலுப்படுத்தும்.

News October 28, 2024

அமெரிக்காவுக்கே ஆயுதம் விற்கும் இந்தியா

image

மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா, உலகின் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக தற்போது மாறியுள்ளது. 2023-24ல் மட்டும் ரூ.21,083 கோடி அளவுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவின் டாப் 2 கஸ்டமர்களாக உள்ளன. பிரம்மோஸ், ஆகாஷ் ஏர் டிபென்ஸ் ஏவுகணைகள், பினாகா மல்டி லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம், 155 mm பீரங்கிகள் ஏற்றுமதி ஆகிறது. Share It!

News October 28, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை

image

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ( மாலை 6 வரை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் (Orange Alert), சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் (Yellow Alert) பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News October 28, 2024

விஜய்க்கு ஆந்திர Dy CM வாழ்த்து

image

தவெக தலைவர் விஜய்க்கு, ஆந்திர Dy CM பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் X பதிவில், “துறவிகள் & சித்தர்களின் பூமியான தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!” என பதிவிட்டுள்ளார். பாஜகவை விமர்சித்தாலும், கடவுள் மறுப்பு இல்லை என்றும், திமுகவை அரசியல் எதிரி எனவும் குறிப்பிட்டார் விஜய். இது பவனை ஈர்த்திருக்குமோ என பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

error: Content is protected !!