India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் உள்ள 4 ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் Platform டிக்கெட் விற்பனையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. Central, Egmore, Tambaram, Perambur ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் முதியோர், மருத்துவத் தேவைக்காக செல்வோருக்கு சலுகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. தீபாவளி கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது சதவீதம் அடிப்படையில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் எடுக்கும் அதிகபட்ச சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி IND அணி அதிகபட்சமாக 74.56% எடுக்கும் என கணித்துள்ளது. IND அணிக்கு 6 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 4-ல் வெற்றி பெற வேண்டும்.
பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. என்னதான் இலவசம் என்றாலும், பஸ் டிக்கெட்டை பெண்கள் வாங்க வேண்டியது கட்டாயம். நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இலவச பஸ்ஸில் பயணித்த இளம்பெண் ஒருவர், டிக்கெட் வாங்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கான நிறுத்தத்தில் இறங்கிய போது, அங்கு நின்றிருந்த டிக்கெட் பரிசோதகர், அவரிடம் ரூ.200 அபராதம் வசூலித்தார்.
➤ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. ➤பாகிஸ்தானில் போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. ➤துருக்கியின் அடானா மாகாணத்தில் 5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ➤பிலிப்பைன்ஸில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது. ➤காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,000-ஐ கடந்தது.
மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சளி, தலைவலி, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் அமுக்கரா தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அமுக்கரா பொடி, சுக்கு, திப்பிலி, மிளகு, கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10.30 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கும் இந்த படத்தை நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “கில்” படத்தின் தமிழ் ரீமேக் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ள முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். விஜய்யின் உரை குறித்து கருத்துக் கூறிய அவர், பாசிசம், பாயாசம் என பேசியது சினிமா வசனம் போல்தான் தெரிகிறது என்றார். விஜய் பேசியதில் சில கருத்துகள் மகிழ்ச்சி தருவதாகவும், ஆனால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் வியாழன் காலை 5 மணிக்கு திறக்கப்படும். இந்நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜை நவ. 16ஆம் தேதி தொடங்குகிறது.
➤ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணிக்கு சலிமா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ➤ரஞ்சி கிரிக்கெட்: சத்தீஷ்கருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ➤ஜப்பான் பாரா பேட்மிண்டன் தொடரில் இந்திய குழு 6 தங்கம் உட்பட 24 பதக்கங்களை வென்றது. ➤U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆடவருக்கான பிரீ ஸ்டைல் 57 kg பிரிவில் சிராக் சிக்காரா தங்கப் பதக்கம் வென்றார்.
‘மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது என தலாய்லாமாவிடம் கேட்க, “பணம் சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து, உடல்நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். சம்பாதித்தபின் உடல்நலனுக்கு செலவிடுகின்றனர். அதேபோல எதிர்காலம் பற்றிய பதற்றத்தில், நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள். இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர்களாகவே இருந்து இறந்து போகிறார்கள்” என்றார்.
Sorry, no posts matched your criteria.