news

News October 29, 2024

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?

image

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்க் டீலர் கமிஷனை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன. இதன்காரணமாக பெட்ரோல், டீசல் விலை ₹2 முதல் ₹4 வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒடிசாவில் பெட்ரோல் லிட்டருக்கு ₹4.69 காசுகள் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிவிட்டுள்ளார்.

News October 29, 2024

ஹிஸ்புல்லாவுக்கு புதிய தலைவர்

image

பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நசருல்லா, அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை அடுத்து தலைவராக வரக்கூடிய நபர்களையும் இஸ்ரேல் அடுத்தடுத்து கொலை செய்தது. இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவராக நயிம் காஸிம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லாவின் லட்சியத்தை இவர் முன்னெடுத்துச் செல்வார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

News October 29, 2024

பெண்களே, இதை கவனியுங்க…

image

பெண்களின் நலன் என்பது உடற்பயிற்சியும் சத்தான உணவும் மட்டுமல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்படும் உணவும் சேர்த்துதான். வேலை, குழந்தை பராமரிப்பு, இல்லக் கடமைகள் என்று இருப்பதால், பெண்களால் சரியான நேரங்களில் உணவு எடுக்க முடிவதில்லை. தாமதமாக உண்பதும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரியான அளவில், சத்தான உணவு பெண்கள் உடல்நலம் காக்க அவசியமாகும்.

News October 29, 2024

தக்கவைக்கும் வீரர்கள்.. CSK கொடுத்த ஹிண்ட்

image

டிசம்பரில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், நாளை மறுநாளுக்குள் ( அக்.31) ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் 6 வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இந்நிலையில், CSK அணி தக்கவைக்கும் 5 வீரர்களுக்கான ஹிண்ட் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் CSK தக்கவைக்கும் வீரர்களை ரசிகர்கள் கணித்து வருகின்றனர். ஹெலிகாப்டர் அடையாளம் அதில் இருப்பதால் தோனி இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. உங்கள் Guess என்ன?

News October 29, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: நாகேந்திரன் வாக்குமூலம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ரவுடி நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மகன் அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வராமல் இருக்க ஆம்ஸ்ட்ராங் தான் காரணம். இதனால், வழக்கறிஞர் அருள் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததன் அடிப்படையில் அவரை கொலை செய்தோம். அவரை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம். அனைத்து செலவையும் தான் பார்த்துக் கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

News October 29, 2024

என்னை கொல்ல முயற்சி: எலான் மஸ்க்

image

அமெரிக்காவின் அதிகார தரகர்கள் ஆட்டுவிக்கும் பொம்மையாக கமலா ஹாரிஸ் உள்ளதாக எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். அதனால் தான் அவரை கொல்ல யாரும் முயல்வதில்லை என்ற மஸ்க், டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவளிப்பதால், தான் கொல்லப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார். அதிகார தரகர்கள் உன்னை கொல்ல முயலலாம் என என் நண்பர்கள் சொன்னாலும், அவர்கள் முயன்று பார்க்கட்டும் பதிலளித்ததாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

News October 29, 2024

தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு

image

மறுஅறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர்களை, தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. தயாரிப்பு செலவு தொடர்பாக நடிகர் சங்கம் மற்றும் பெப்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் சில சங்கங்களுடன் பேச உள்ளதால் புதிய படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

News October 29, 2024

அதிமுகவை பற்றி விஜய் பேசாதது ஏன்? கடம்பூர் ராஜூ

image

தவெக மாநாட்டில் விஜய் பேசிய அனைத்தும் அதிமுகவின் கொள்கைகள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். விஜய் அதிமுகவை குறை கூற எந்த முகாந்திரமும் இல்லை என்பதால்தான், அவர் தங்களை பற்றி எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார். திமுகவை தவிர அதிமுகவை யாரும் குறைகூற மாட்டார்கள் என்ற அவர், தங்களிடம் குறைகள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News October 29, 2024

இந்திய மகளிர் அணி அபார வெற்றி

image

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 3வது ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. NZ நிர்ணயித்த 233 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, 44.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 100, ஹர்மன் ப்ரீத் 59*, யாஸ்திகா பாட்டியா 35 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

News October 29, 2024

முற்றுப்புள்ளி வைத்த மந்தனா!

image

நியூசி., மகளிர் அணிக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 42 ஓவர்களில் 221 ரன்களை எடுத்துள்ளது. இந்திய ஸ்டார் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, நிலைத்து நின்று ஆடி 122 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஓபனராக ரன் எடுப்பதில்லை என்ற விமர்சனத்துக்கு இந்த சதம் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மந்தனா.

error: Content is protected !!