news

News December 8, 2024

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் சிறை பிடித்தது. ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடற்படை, மீனவர்களை படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

News December 8, 2024

நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க..காலையில் எழுந்தவுடன்

image

காலை செய்யும் சில நடவடிக்கைகளை நம்மை நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்க உதவிடும் * காலை கடனை செய்யுங்கள், உடல் புத்துணர்ச்சி பெரும் * ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுங்கள், செரிமான பிரச்சனையை சரிப்படுத்தும் * சோம்பேறி தனமாக அமர்ந்திருக்காமல், எழுந்ததுமே சில வேலைகளை செய்யுங்கள், அது ஒரு உத்வேகத்தை கொடுக்கும் * காலையில் ஊட்டச்சத்து மிக்க உணவை தேர்ந்தெடுக்க அதனை பழக்க படுத்துங்கள்.

News December 8, 2024

மத்திய அரசின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் மாலேகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள 234 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. நிரந்தர அடிப்படையிலான அந்த வேலைகள், நான் எக்ஸ்யூடிவ்ஸ் பணிகள் ஆகும். இந்த வேலையில் சேர விரும்புவோர் <>www.mazagondock.in <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள் டிசம்பர் 16ஆம் தேதி ஆகும். இந்தத் தகவலை வேலை தேடும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News December 8, 2024

20 AAP எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை?

image

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் 20 எம்எல்ஏக்களுக்கு ஆம் ஆத்மி வாய்ப்பு வழங்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015 முதல் டெல்லி தேர்தலில் அடுத்தடுத்து ஆம் ஆத்மி வெற்றி பெற்று வருகிறது. எனினும், இந்த முறை 20 எம்எல்ஏக்களுக்கு எதிராக அவர்கள் தொகுதியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதை மனதில் அவர்களுக்கு பதிலாக புதியவர்களை ஆம் ஆத்மி களத்தில் இறக்கலாம் என சொல்லப்படுகிறது.

News December 8, 2024

வரலாறு திரும்புகிறதா?

image

அடிலெய்டில் 2020இல் நடந்த டெஸ்ட் பாேட்டியில் ஆஸி அணியிடம் அடைந்த படுதோல்விக்கு இந்தியா இம்முறை பதிலடி கொடுக்கும் என ரசிகர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்சில் 180 ரன்களில் சுருண்ட இந்திய அணி, 2ஆவது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை மளமளவென இழந்து தடுமாறிக் கொண்டுள்ளது. இதை பார்த்து ஏமாற்றமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள், வரலாறு திரும்புகிறதா என கேள்வி எழுப்புகின்றனர்.

News December 8, 2024

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைகிறது

image

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடையக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், இது அதே திசையில் நகர்ந்து 11 – ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் MET குறிப்பிட்டுள்ளது.

News December 8, 2024

நேருவின் பொன்மொழிகள்

image

* இன்றைய குழந்தைகளிடம் இருந்து தான் நாளைய இந்தியா தீர்மானிக்கப்படுகிறது
*குழந்தைகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை யோசிப்பதில்லை
*ஒரு நிகழ்வைப் பற்றி அதிகம் பேச நினைக்கிறோம், அதை செயல்படுத்துவதை விட்டுவிட்டு
*மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக நாம், நமது உண்மைத் தன்மையை இழந்து விடக்கூடாது.

News December 8, 2024

பிரைம் OTTஇல் ரிலீஸ் ஆனது கங்குவா

image

சூர்யா நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படம் நவ.14இல் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், தமிழில் முன்னெடுக்கப்பட்ட நல்ல முயற்சியாக இது கூறப்படுகிறது. இப்படம், அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் அப்படம் பார்த்து விட்டீர்களா? படம் எப்படி இருக்கு? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.

News December 8, 2024

இவர் யார் தெரிகிறதா?

image

மேலே நீங்கள் காணும் புகைப்படங்களில் இருக்கும் சிறுமி, தற்போது மிகப்பெரும் நடிகை ஆவார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகக் கூறப்படும் அவர், படங்களில் காட்டும் பல்வேறு முகப் பாவனைகளுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. தற்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள படம், பல கோடிகளை குவித்து வருகிறது. அவர் யாரென கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படியெனில், கீழே அவர் பெயரை பதிவிடுங்கள்.

News December 8, 2024

கேரள பாதிரியாருக்கு கார்டினல் பட்டம்

image

கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப்புக்கு (51) கார்டினல் பட்டத்தை வழங்கி போப் பிரான்சிஸ் கவுரவித்துள்ளார். ரோம் செயின்ட் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேருக்கு இப்பட்டத்தை போப் அளித்தார். கேரள மாநிலம், சங்கனாச்சேரியை சேர்ந்த ஜேக்கப், இந்தியாவில் இருந்து தேர்வான 6ஆவது கார்டினல் ஆவார். அவருக்கு கேரள CM பினராயி விஜயன், PM மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!