news

News October 30, 2024

Tech Talk: AC-க்கும் Inverter AC-க்கும் என்ன வித்தியாசம்?

image

Inverter AC என்றதுமே, அவை இன்வெர்ட்டரில் இயங்கும் என எண்ணத் தோன்றும். உண்மையில், Inverter ACக்கும், Inverter Power-க்கும் எந்த தொடர்பும் இல்லை. பொதுவான A.C, ஆன் செய்தவுடனே 100% இயக்க ஆற்றலுடன் இயங்கும். அதனை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. ஆனால், Inverter ACஇல் 30% வரை மின் ஆற்றலை சேமிக்க முடியும். அதே போல இயக்க ஆற்றலை கூட்டலாம் (180%) (அ) குறைக்கலாம் (30%). இதுதான் Inverter AC-இன் ஸ்பெஷாலிட்டி.

News October 30, 2024

இலவச பஸ்ஸில் பெண்ணுக்கு அபராதமா? உடனடி ஆக்சன்

image

அரசு இலவச பஸ்களில் பெண்கள் பயணித்தாலும், அதற்கும் டிக்கெட் உண்டு. இந்நிலையில், திருப்பூரில் நேற்று, டிக்கெட் வாங்காமல் இலவச பஸ்ஸில் சென்ற பெண்ணுக்கு, ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, டிக்கெட் பரிசோதகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

News October 30, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (அக்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 30, 2024

60,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம் விலை!

image

வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. நேற்றைய தினம், சவரனுக்கு ₹480 உயர்ந்த நிலையில், இன்று மேலும் ₹520 உயர்ந்து நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹59,520க்கும், கிராமுக்கு ₹65 உயர்ந்து ஒரு கிராம் ₹7,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News October 30, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) வாணவெடிகள் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? 2) எந்த காலத்தில் குயில் கூவுவது இல்லை? 3) Pathology என்றால் என்ன? 4) உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 5) நாஜிக்களின் விமானப்படையின் பெயர் என்ன? 6) DGP என்பதன் விரிவாக்கம் என்ன? 7) கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவி எது? 8) உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 30, 2024

கங்கா ஸ்நானம் என்றால் என்ன?

image

தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்ய அனைவரும் கங்கை செல்ல முடியாது. ஆதலால் தீபாவளியில் ஒவ்வொரு தேவதைகளும் ஒவ்வொரு பொருளில் எழுந்தருளுகிறார்கள். கங்கா தேவி, காலை 3- 5.30 மணி வரை சுடுநீரில் வாசம் செய்கிறாள். நல்லெண்ணெயில் மகாலட்சுமி, சீயக்காயில் தேவர்கள் வாசம் செய்கிறார்கள். ஆதலால் காலையில் கங்கா ஸ்நானம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்ந்து, மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

News October 30, 2024

“ஆட்சியில் பங்கு இல்லை என்றால் எதற்கு கூட்டணி?”

image

திமுகவும், அதிமுகவும் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலை வரும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 99% கட்சிகள் கூட்டணி ஆட்சியை விரும்புவதாகக் கூறிய அவர், ஆட்சியில் பங்கு இல்லை என்றால் எதற்கு கூட்டணி என்றும் கேள்வி எழுப்பினார். இனி கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது என்றும், முதல்முறையாக ஆட்சியில் பங்கு என வெளிப்படையாக விஜய் கூறியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

News October 30, 2024

தீபாவளி: உங்க மொபைலில் விளக்கேற்றுங்கள் ❤️❤️

image

தீபாவளி நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உங்கள் மொபைலிலும், கணிணியிலும் தீபம் ஏற்ற Google சூப்பர் ஏற்பாடு செய்துள்ளது. கூகுளில் Diwali என டைப் செய்யுங்கள். அப்போது தோன்றும் தீபத்தை க்ளிக் செய்தால் ஸ்க்ரீன் முழுவதும் தீபங்கள் தோன்றும். பின்னர் ஒவ்வொரு தீபமாக தொட்டால் அதில் விளக்கெரிந்து மொபைலே பிரகாசிக்கும். X பட்டனை அழுத்தினால் தீபங்கள் மறைந்துவிடும். Share It.

News October 30, 2024

பட்டாசு வெடிக்க போறீங்களா..? இத படிச்சிட்டு போங்க!

image

1) பட்டாசு வெடிக்கையில் காட்டன் உடைகளையும், காலணியையும் அணியுங்கள். 2) பாதுகாப்புக்காக ஒரு வாளியில் நீர் அல்லது மணலை வையுங்கள். 3) பெரியவர்கள் முன்புதான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். 4) நீர் நிரப்பிய வாளியில் எரிந்த கம்பி மத்தாப்புகளை போடுங்கள். 5) நீண்ட ஊதுபத்திகளை பயன்படுத்துங்கள். 5) தீக்காயம் ஏற்பட்டால் அதன் மீது மை ஊற்றாமல், நீரை ஊற்றிய பின், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

News October 30, 2024

‘கங்குவா’ பட எடிட்டர் காலமானார்

image

கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் (43) காலமானார். அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் உள்ள தனது குடியிருப்பில் அவர் இறந்து கிடந்துள்ளார். இவர் கங்குவா மட்டுமின்றி, டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த தல்லுமாலா உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அவரது திடீர் மறைவால் கங்குவா படக்குழுவினர் உள்பட திரைத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!