news

News October 30, 2024

தீபாவளி: உங்க மொபைலில் விளக்கேற்றுங்கள் ❤️❤️

image

தீபாவளி நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உங்கள் மொபைலிலும், கணிணியிலும் தீபம் ஏற்ற Google சூப்பர் ஏற்பாடு செய்துள்ளது. கூகுளில் Diwali என டைப் செய்யுங்கள். அப்போது தோன்றும் தீபத்தை க்ளிக் செய்தால் ஸ்க்ரீன் முழுவதும் தீபங்கள் தோன்றும். பின்னர் ஒவ்வொரு தீபமாக தொட்டால் அதில் விளக்கெரிந்து மொபைலே பிரகாசிக்கும். X பட்டனை அழுத்தினால் தீபங்கள் மறைந்துவிடும். Share It.

News October 30, 2024

பட்டாசு வெடிக்க போறீங்களா..? இத படிச்சிட்டு போங்க!

image

1) பட்டாசு வெடிக்கையில் காட்டன் உடைகளையும், காலணியையும் அணியுங்கள். 2) பாதுகாப்புக்காக ஒரு வாளியில் நீர் அல்லது மணலை வையுங்கள். 3) பெரியவர்கள் முன்புதான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். 4) நீர் நிரப்பிய வாளியில் எரிந்த கம்பி மத்தாப்புகளை போடுங்கள். 5) நீண்ட ஊதுபத்திகளை பயன்படுத்துங்கள். 5) தீக்காயம் ஏற்பட்டால் அதன் மீது மை ஊற்றாமல், நீரை ஊற்றிய பின், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

News October 30, 2024

‘கங்குவா’ பட எடிட்டர் காலமானார்

image

கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் (43) காலமானார். அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் உள்ள தனது குடியிருப்பில் அவர் இறந்து கிடந்துள்ளார். இவர் கங்குவா மட்டுமின்றி, டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த தல்லுமாலா உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அவரது திடீர் மறைவால் கங்குவா படக்குழுவினர் உள்பட திரைத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

News October 30, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 30, 2024

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மல்லி தேநீர்

image

கொத்தமல்லி விதை & தழைகளில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் ரசாயனம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மாரடைப்பு போன்ற பிரச்னைகளை குறைப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கொத்தமல்லி விதை & தழை, சுக்கு, மிளகு, மஞ்சள், நட்சத்திரப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான மல்லி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News October 30, 2024

அரசுப் பேருந்தில் ஒரே நாளில் 2.31 லட்சம் பேர் பயணம்!

image

தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசுப் பேருந்து மூலம் 2,31,363 பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,967 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. அதன்படி, 4,059 பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த 2 நாள்களை காட்டிலும், இன்று அதிகளவில் மக்கள் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

News October 30, 2024

குடிக்க தண்ணீர் கேட்டவருக்கு ஆசிட் கொடுத்த போலீசார்!

image

உ.பி. மாநிலம் மீரட்டில் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலை தர்மேந்திர சிங் (38) என்பவர் விலக்கி விட்டுள்ளார். அங்கு போலீசார் வந்த போது, மாணவர்கள் ஓடிவிட, தர்மேந்திர சிங்கை அவர்கள் பிடித்துச் சென்றனர். பின்னர் அவரை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் அவர் தண்ணீர் கேட்ட போது, ஆசிட்டை போலீசார் கொடுத்துள்ளனர். ஆசிட்டை குடித்த தர்மேந்திர சிங், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

News October 30, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நயீம் காசிம் நியமிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ➤உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. ➤சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு காய் சூஷே தலைமையிலான ஷென்சோ-19 என்ற குழுவை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. ➤ஜப்பான் சென்ற விமானத்தின் விமானி அறை கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

News October 30, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நயீம் காசிம் நியமிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ➤உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. ➤சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு காய் சூஷே தலைமையிலான ஷென்சோ-19 என்ற குழுவை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. ➤ஜப்பான் சென்ற விமானத்தின் விமானி அறை கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

News October 30, 2024

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்கிறீர்களா? இதைப் படிங்க!

image

வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளால் உருவாக்கப்படும் சட்டவிரோத மின்னணு பண பரிமாற்ற தளங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு எச்சரித்துள்ளது. தனிநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை ரகசியமாக சேகரித்து சைபர் குற்றவாளிகளுக்கு சில செயலி நிறுவனங்கள் வழங்குவது தெரியவந்துள்ளது. அதன்படி, PeacePay, RTX Pay, PoccoPay, RPPay உள்ளிட்டவை சட்டவிரோத பணப்பரிமாற்ற தளங்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!