news

News October 30, 2024

கமலை விட சிறப்பு: விஜய்யை பாராட்டிய செல்லூர் ராஜு

image

விஜய்யின் பேச்சை ADMK Ex.அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி ஒன்றில் பாராட்டியுள்ளார். கட்சியின் கொள்கைகளை அறிவித்துள்ள தவெகவின் செயல்பாடுகள் போகப்போக தான் தெரியும் என்ற அவர், மதுரையில் மாநாடு நடத்திய கமலை விடவும், விஜய் தெளிவாக பேசியதாக கூறினார். மேலும், திமுகவில் இருக்கும் 60% இளைஞர்கள் தவெகவிற்கு சென்றுவிட்டதால் தான், அவர்கள் குத்துதே குடையுதே என்கிறார்கள் எனவும் அவர் விமர்சனம் செய்தார்.

News October 30, 2024

23 மாவட்டங்களில் மிக கனமழை

image

23 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ( இரவு 7 மணி) மிக கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, சேலம், அரியலூரில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News October 30, 2024

ICC Ranking: முன்னேறிய ஜெய்ஸ்வால்; சறுக்கிய கோலி

image

ICC வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அஸ்வின் 4வது இடத்திலும், ஜடேஜா 8வது இடத்திலும் உள்ளனர். பேட்டிங் தரவரிசையில் டாப்-10ல் இந்திய சார்பில் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பண்ட் 11வது இடத்திற்கும், கோலி 14வது இடத்திற்கும் சரிந்துள்ளனர்.

News October 30, 2024

மாநாட்டில் விஜய் பெற்ற வாளின் சிறப்புகள் தெரியுமா?

image

மாநாட்டில் தவெக தலைவர் விஜய்க்கு, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வாள் ஒன்றைப் பரிசளித்தார். அவ்வாளின் சிறப்புகள் தெரியுமா? *சோழர் கால முறையில் பஞ்சலோகத்தில் வாள் செய்து வெள்ளி முலாம் பூசப்பட்டுள்ளது. *கைப்பிடியில் யாளி, தவெக கொடியில் உள்ள யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலைஞர்களான ராதாகிருஷ்ணன், அவரது மகன் சதாசிவம் இந்த வாளை தயாரித்துள்ளனர்.

News October 30, 2024

ஆங்கிலம் அறிவோம்: Tumbler Vs Glass

image

கண்ணாடியால் செய்யப்பட்ட டம்ளரை Glass என்றும், எவர்சில்வர் (அ) வெள்ளியால் உருவானதை Tumbler என்றும் பலர் குறிப்பிடுகிறார்கள். இது சரிதானே என்ற கேள்விக்கு ஆங்கில அறிஞர்கள் இல்லை என்றே பதிலளிக்கின்றனர். லத்தினிலிருந்து கிளைத்த Tumble என்ற சொல்லில் இருந்து உருவானது Tumbler. அதற்கு எளிதில் உருள்வது எனப் பொருள். Tumbler-ஐ பக்கவாட்டில் படும்படி வைத்தால் கீழே விழுந்து உருளும். Glassயிலும் Tumblers உண்டு.

News October 30, 2024

சாய் பல்லவியின் சம்பளம் இவ்வளவா!

image

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் அமரன் படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News October 30, 2024

படம் பார்த்து பெண்ணை புதைத்த கொடூரம்

image

உத்தரபிரதேசத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் 4 மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் மனைவியின் உடல் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், ‘திரிஷ்யம்’ படம் பார்த்து, நீதிபதியின் வீட்டிற்கு அருகில் அந்த பெண்ணை புதைத்ததாக ஜிம் பயிற்சியாளர் விமல் சோனி வாக்குமூலம் அளித்துள்ளார். ‘திரிஷ்யம்’ படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அடியில் ஹீரோ ஒருவரை புதைப்பார்.

News October 30, 2024

அமரன் vs பிரதர் vs பிளடி பெக்கர் – ஒரு பார்வை!

image

தீபாவளியன்று SK’வின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் படங்கள் ரிலீசாகின்றன. கமல் தயாரித்து ராஜ்குமார் இயக்கி மேஜர் முகுந்த்தின் பயோபிக்காக உருவாகியுள்ளது அமரன். SMS, Ok Ok போல ஜெயம் ரவியுடன் ஹிட் கொடுப்பாரா ராஜேஷ் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது பிரதர். நெல்சன் தயாரித்துள்ள பிளடி பெக்கர் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீங்க எந்த படத்துக்கு போறீங்க?

News October 30, 2024

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா?

image

மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிக்கும் மத்திய அரசின் Fame-II E-scooter சப்சிடி பட்டியலில் இருந்து ஒக்கினாவா நிறுவனம் பிளாக்லிஸ்ட் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான விதிமுறைகளை ஒக்கினாவா மீறியதாகவும், தரமில்லாத, சோதனை செய்யப்படாத, அதிகமான உதிரிபாகங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆகவே, மின்சார வாகனம் வாங்கும்முன் நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள்.

News October 30, 2024

மகத்தான மனிதரை வணங்கிப் போற்றுவோம்..!

image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைக்காக காத்திரமாக களமாடியவர் என தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது அறிக்கையில், ‘மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!