India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அயனாவரத்தில் மனநிலை குன்றிய கல்லூரி மாணவியை 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார். கல்லூரி மாணவியை 7 பேர் பல மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். பிற மாநில குற்றச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஸ்டாலின், இதுகுறித்து ஏன் பேசாமல் இருக்கிறார்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு சிரியா வழியாகவே ஈரான் ஆயுதம் அனுப்பி வந்தது. அதை வைத்தே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். ஈரானின் நெருங்கிய நண்பராக கூறப்பட்ட சிரியா அதிபர் ஆசாத், நாட்டை விட்டு வெளியேறி விட்டதால் இனி ஆயுதங்களை ஈரானால் அனுப்ப முடியுமா என்பது தெரியவில்லை. ஆயுதம் அனுப்பவில்லையேல், இஸ்ரேலுக்கு கிடைத்த வெற்றியாக அது கருதப்படும்.
விஸ்கர்மா திட்டத்தை தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி ஒன்றுதான் நிலையானது என்பதை அறிந்தே, அனைவரும் கல்வி கற்பதற்காக பல திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்வி கற்க செல்வோரை தடுத்து, குடும்பத் தொழிலில் ஈடுபட வைக்க விஸ்வகர்மா திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.
*மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வமாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை
*உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் உச்சம்
*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானம்
*வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணமல்ல, தீய வாழ்க்கையை வாழ்வதே
*எல்லா போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன.
ஓடிசா- ஆந்திராவுக்கு சுமார் 1,220 கி.மீ. தூரத்துக்கு சரக்கு ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. நிலக்கரி எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் இந்த ரயில், 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மேலும் 364 சரக்கு பெட்டிகள் உடையதாகும். 3 என்ஜின்களை கொண்டு மணிக்கு 25-30 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது. பயணத்துக்கு 8 நாள் எடுக்கும் இந்த ரயில்தான், இந்தியாவிலேயே மிக நீள ரயில் என்ற சாதனையை புரிந்துள்ளது.
இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
களறி, சார் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சம்யுக்தா. இதையடுத்து மோகன்லாலின் ராம் படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். திரைப்பட படப்பிடிப்பின் இடையே மஞ்சள் நிற சேலையில் அழகாக புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் திரைப்பட ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. நீங்களும் அந்தப் படங்களை காண வேண்டுமா? மேலே கிளிக் செய்து பாருங்கள். கீழே கமெண்ட் பண்ணுங்க.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு இன்று முதல் தமிழக அரசு சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக அரசின் கல்வி டிவியில் இன்று முதல் 13ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. இதை பயன்படுத்தி தேர்வுக்கு தயாராக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுவர் விளம்பரம், டி.வி. விளம்பரம் பார்த்து இருப்போம். இதற்கு முற்றிலும் வித்தியாசமாக, மனிதர்கள் தங்கள் உடலில் போர்டை மாட்டிக் கொண்டு விளம்பரம் செய்த விநோதம் நடந்துள்ளது. பெங்களூரில் 10 நிமிட உணவு டெலிவரி செயலிக்காக இதுபோல 3 பேர் உடலில் போர்டை இரவில் மாட்டிக் கொண்டு நடந்து சென்றனர். யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து இக்காட்சியை வெளியிட, அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.