India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவியின் ‘அமரன்’ படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இப்படம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் நம்பர்-1 இடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. மொத்தம் 14 நாடுகளில் டாப்-10 பட்டியலில் உள்ளது. மலேசியா, மாலத்தீவு, நைஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 2வது இடத்திலும், கத்தாரில் 3வது இடத்திலும், பாகிஸ்தானில் 5வது இடத்திலும் நீடிக்கிறது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தான் வலியுறுத்தியதாகவும், அதுபற்றி பரிசீலிப்பதாக அவரும் உறுதியளித்தாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். PM மோடி ஆட்சியில் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும் என அண்ணாமலை மேலும் குறிப்பிட்டார். இன்று சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக சிறப்பு தீர்மானம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
20 வருஷம் முன் எண்ட்ரி கொடுத்தாலும், தமிழில் தற்போது வரை 10 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். மொட்டைமாடி கல்பனாவாக, இன்னும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி, ஆமீர் கான், சல்மான் கான் என பாலிவுட் தலைகளையும் ஈர்த்தவர், 25 படத்துடன் ஒதுங்கிவிட்டார். செல்போன் கம்பெனி ஓனரை திருமணம் செய்து ஒதுங்கியவர், இப்போதும் என்ன பண்ணுகிறார் என தெரியவில்லை. கண்டுபிடிச்சிடீங்களா…கமெண்ட்ஸ் சொல்லுங்க
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமார் 1.27 லட்சம் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளது RTI மூலம் தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபர் வரை புதுப்பிக்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியிலிருந்து 1.14 கோடியாகக் குறைந்துள்ளது. இறப்பு, அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசுப் பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்காகப் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லிஸ்ட்ல உங்க பேர் இருக்கா Check பண்ணிக்கோங்க.
பனிப்பாறைகள் உருகினால், சென்னை கடலில் மூழ்கும் என்பார்களே, அதுவே Buttefly Effect. சிரியாவில் உள்நாட்டு பிரச்னை வெடித்துள்ளது. இது சீனாவின் கனவு திட்டமான ‘Belt and Road’ல் மண் அள்ளி போட்டுள்ளது. பண்டைய காலத்தில், சீனா ‘சில்க் ரோடு’ மூலம் ஐரோப்பா நாடுகளுடன் வணிகம் செய்தது. அது போன்ற திட்டம் தான் ‘Belt and Road’. இந்த பாதையின் பெரிய பகுதி சிரியாவின் வழியாகவே போவதால் தற்போது சிக்கல் உண்டாகியுள்ளது.
Deputy Collector, DSP உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 மெயின்ஸ் தேர்வு நாளை முதல் 13ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த ஜூலை 13இல் நடந்த பிரிலிம்ஸ் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் அதன் முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியானது. மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு Interview மூலம் பணி வழங்கப்படும். தேர்வுக்கு மின்னணு பொருள்களுடன் வந்தால் வழக்கு பாயும் என TNPSC எச்சரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தவெகவில் கோஷ்டி பூசல் உச்சமடைந்துள்ளதாக நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையே தற்போது தான் நடந்து வருகிறது. அதற்குள், நீ பெரியவனா, நா பெரியவனா என இரு தரப்பு பிரிந்து செயல்படுகிறதாம். ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர் சேர்க்கை என அனைத்தும் ஒரே மாவட்டத்தில் இருமுறை நடப்பதால், எந்த தலைமையின் கீழ் செயல்படுவது எனத் தெரியாமல் தொண்டர்கள் குழம்பியுள்ளனராம்.
10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்பது பெரிய தோல்வி தான். ஆஸி. அணிக்கு எதிராக 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை என விமர்சிக்கிறார்கள். ஆனால், ஒரு வீரரும் 50 பந்துகளை கூட எதிர்கொள்ளவே இல்லை தெரியுமா? அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 47 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டி, ஆகாஷ் சோப்ரா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அட கடவுளே..
CBI, ED செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதிகோரி காங்., கொறடா மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், அஜித் பவார், சந்திரபாபு நாயுடு மீதான மோசடி வழக்குகளை CBI, ED முடித்து வைத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு பதிலளிக்குமாறு கோரியுள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ.7,000 உதவித் தொகை அளிக்கும் புதிய திட்டத்தை PM மோடி இன்று ஹரியானாவில் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டம் முதல்கட்டமாக ஹரியானாவில் தற்போது செயல்படுத்தப்படுகிறது. பிறகு விரிவுபடுத்தப்படும். LIC பீமா சகி என்ற அந்தத் திட்டத்தின்கீழ் பெண்கள் முகவர்களாக நியமிக்கப்படுவர். அவர்களுக்கு முதலாண்டு ரூ.7,000, அடுத்தாண்டு ரூ.6,000, பின்னர் ரூ.5,000 உதவித்தொகை அளிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.