India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Text neck syndrome-ஐ சரிசெய்யவில்லை எனில் நாள்பட்ட வலி, தசை தடுமாற்றம், தண்டுவட விலகல், டிஸ்க் பாதிப்பு, நரம்பு அழுத்தம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இதற்கு பிசியோதெரபி, கைவைத்தியம், மசாஜ், கழுத்து- மேல்முதுகை வலுப்படுத்தும் exercises உதவும். தலையை நேரான நிலையில் வைத்திருப்பது, குனியாமல், பார்வைக்கு நேராக தெரியும் நிலையில் போன், கணினி பயன்படுத்தல், அடிக்கடி சில stretches செய்வதன் மூலம் தடுக்கலாம்.
*ஒரு அணி வீரர்களுக்காக அதிகபட்சம் ரூ.120 கோடி வரை செலவிடலாம். *5 வீரர்களை தக்கவைக்கலாம் (வீரர் 1-₹18 கோடி, வீரர் 2-₹14 கோடி, வீரர் 3- ₹11 கோடி, வீரர் 4-₹18 கோடி, வீரர் 2- ₹14 கோடி) *அன்கேப்ட் பிளேயருக்கு ரூ.4 கோடி *ரிட்டென்ஷன் டிடக்ஷன் தொகையாக ரூ.75 கோடி நிர்ணயம். வீரர்களை வாங்கிய தொகை 75 கோடிக்கு அதிகமானால், அந்த தொகை கழிக்கப்படும். 75 கோடிக்கு குறைவாக செலவானால், ரூ.75 கோடி கழிக்கப்படும்.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவையும், அக்டோபர்-2024 இம்மாதம் 53% அகவிலைப்படியுடன் ஊதியமும் ஒரே தொகையாக அரசு ஊழியர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால், ஊதியத்தில் வித்தியாசம் வரலாம். களஞ்சியம் செயலியில் ( KALANJIYAM APP) அவரவர் சம்பள பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
சாட் உணவோ, அசைவ சைட் டிஷ்ஷோ, மயோனைஸ் சேர்த்தால் அதன் ருசியே தனிதான். ஆனால், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது தெலங்கானா அரசு. முட்டையை பச்சையாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸால் உணவு நஞ்சாகும் ஆபத்து இருப்பதால் அவ்வகை மயோனைஸுக்கு தடை விதித்துள்ளது. மயோனைஸ் அளவுக்கதிகமாக சாப்பிட்டால், பிபி, இதயநோய் ஆபத்தும் உண்டு. தமிழக அரசும் இதுகுறித்து ஆய்வு நடத்துமா?
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. இனி ஒவ்வொரு வாரமும் சரவெடி அப்டேட்கள் கொடுக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனமான AGS Entertainment அறிவித்துள்ளது. ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் மிஷ்கின் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வெயில், மழை, பனி என மாறுபட்ட தட்பவெப்ப நிலையால், பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு ஆண்டிபயாடிக் போன்ற தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொண்டால் காய்ச்சல் குறைகிறது. ஆனால், சளி, இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது என்றும் ஆர்.எஸ்.வி.,-ஏ என்ற சுவாச தொற்று வைரஸால் 65% பேர் பாதிக்கப்படுவதாகவும் பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது
IPL 2025’ஐ முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் retention செய்யப் போகும் வீரர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சனுடன் சேர்த்து இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், ரியான் பராக் தக்கவைக்கப் படுகிறார்களாம். இவர்களுடன் Uncapped Player ஆக சந்தீப் சர்மாவும் அணியில் நீடிப்பாராம். ஸ்டார் வீரர்களான அஸ்வின், பட்லர் மற்றும் யுஸ்வேந்தர் சாஹல் விடுவிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய Mac mini கணினி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது M4 மற்றும் M4 Pro சிப் கொண்ட இரண்டு Versions-ல் கிடைக்கும். மேக் மினி சாதனத்தில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும். மானிட்டர், கீபோர்ட், மவுஸ் உள்ளிட்ட மற்ற விஷயங்களை நீங்கள் தனியே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். நவ.08 முதல் விற்பனைக்கு கிடைக்கும். விலை: M4 chip ₹59,900, M4 Pro chip ₹1,49,900.
நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு முந்தைய ஹல்தி நிகழ்ச்சிகள் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அப்படங்கள் வெளிவந்து வைரலான நிலையில், இந்த ஜோடியின் திருமண நாள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நாக சைதன்யா- சமந்தா இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், சமந்தா சிங்கிளாக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி குஜராத் சாது பெட் தீவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் IAF Flypast, ஆயுதப்படைகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றது. படேலின் பிறந்தநாளை நினைவுக்கூரும் விதமாக ராஷ்ட்ரீய ஏக்தா திவாஸ் கொண்டாடப்படுகிறது. 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நேற்று ரூ.284 ருபாய் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
Sorry, no posts matched your criteria.