India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1962ஆம் ஆண்டு கர்நாடக மேல்சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி அரசியலுக்குள் நுழைந்தார் SM கிருஷ்ணா. பின்னர், 1967ஆம் ஆண்டு பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தேர்தலில் தோல்வி கண்டார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு இந்தியா மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிகளில் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்.
1999ஆம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று தேர்தலில் வென்று முதல்வரானார் SM.கிருஷ்ணா. 5 ஆண்டுகால முதல்வர் பொறுப்பு முடிந்தவுடன் மகாராஷ்டிர ஆளுநராக இவரை நியமித்தது மத்திய காங்கிரஸ் அரசு. பின்னர், மன்மோகன் ஆட்சியிலும் மத்திய அமைச்சராக இருந்தவர், 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன்பின், 2023ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வால் பெங்களூருவில் காலமானார். இவர், 1999 முதல் 2004 வரை கர்நாடகத்தின் முதல்வராகவும் 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிர ஆளுநராகவும் பதவி வகித்தார். பின்னர், 2009 முதல் 2012 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருதளித்து கௌரவித்தது.
இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசால் அமைக்கப்பட்ட குழு ஏற்கெனவே தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதை வைத்து ஏற்கெனவே உள்ள சட்டங்கள், அரசியலமைப்பை திருத்த 6 மசாேதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ராகுல் காந்தியை காமெடி கிங் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானியை கிண்டலடிக்கும் வகையில் டெல்லியில் அவர்களின் உருவ பொம்மையுடன் ராகுல் போராட்டம் நடத்தினார். இதை பிரதான், ராகுல் காந்தி தனக்கு வருவதை சிறப்பாக செய்துள்ளார் எனவும், அதுதான் ஸ்டாண்ட் அப் காமெடி எனவும் சாடியுள்ளார். இந்த விமர்சனம் குறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.
ராஜஸ்தானில் 150 அடி நீள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உள்ளே விழுந்து சிக்கிக் கொண்டான். இதுகுறித்த தகவலின்பேரில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், உள்ளூர் நிர்வாகத்தினரும் விரைந்து சென்று அவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுவனை காப்பாற்ற உள்ளே கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ், லியோ படத்தை இயக்கினார். பின்னர் ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து மீண்டும் கமல், லோகேஷ் கனகராஜ் ஜோடி மீண்டும் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது விக்ரம் படத்தின் 2ஆவது பாகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்திய எல்லையைக் காக்கும் பணியில் உள்ள BSFஇல் காலியாக உள்ள 275 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதில் 127 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கானது. எஞ்சிய 148 இடங்கள் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர விரும்புவோர் வருகிற 30ஆம் தேதி வரை https://rectt.bsf.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு பகிரலாமே.
1878: முன்னாள் முதல்வர் சி. ராஜகோபாலசாரி (படத்தில் வலதுபுறம் இருப்பவர்) பிறந்தார்
1896: டைனமைட்டை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் காலமானார்
1952: நடிகை சுஜாதா பிறந்தார்
1985: டிகை காம்னா ஜெத்மலானி பிறந்தார்
1901 – ஸ்டாக்ஹோமில் முதல் நோபல் பரிசு நிகழ்ச்சி நடைபெற்றது
*1932 – தாய்லாந்து அரசியல்சட்ட முடியாட்சி அரசானது.
* சர்வதேச மனித உரிமைகள் தினம்.
பல்கலைக்கழக மானியக் குழு(UGC) நடத்தும் Ph.D, பேராசிரியர், விரிவுரையாளர், JRF ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வுக்கு(NET) விண்ணப்பிக்க, இன்றே (டிச.10) கடைசி நாள் ஆகும். வரும் ஜன.1 முதல் ஜன.19 வரை, வெவ்வேறு பாடப்பிரிவுகளுக்கான NET தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில், தகவல்களை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை பகிருங்கள்.
Sorry, no posts matched your criteria.