news

News November 1, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அரசியலமைப்புக்கு எதிரானது என ஜப்பான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ➤இங்கிலாந்தின் கம்பிரியாவில் உள்ள அணுசக்தி கப்பல் கட்டுமான தளத்தில் பெரும் தீவிபத்து நேரிட்டது. ➤பொலிவியா அதிபர் லூயிசு கட்டகோராவுக்கு எதிராக லா பாசிலில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். ➤உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட வடகொரிய வீரர்கள் 10,000 பேர் ரஷ்யா சென்றடைந்தனர்.

News November 1, 2024

காய்ச்சலை விரட்டி அடிக்கும் ஆடாதொடை தேநீர்

image

மழைக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சளி, தலைவலி, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோர் ஆடாதொடை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆடாதொடை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான ஆடாதொடை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News November 1, 2024

ஆரம்பத்திலேயே அட்டாக்கில் இறங்கிய ஆகாஷ்

image

இந்தியா – நியூசி., இடையேயான 3-வது மற்றும் இறுதி டெஸ்டில் பேட்டிங்கில் இறங்கிய நியூசி., 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. 3-வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் lbw முறையில் கான்வே அவுட்டானார். இந்திய அணியில் ரோகித், ஜெய்ஸ்வால், கில், கோலி, சர்ப்ராஸ், பண்ட், சுந்தர், அஷ்வின், ஆகாஷ் தீப், சிராஜ் இடம்பெற்றுள்ளனர். 2-0 என தொடரை நியூசி., கைப்பற்றி உள்ள நிலையில், இந்தியா ஆறுதல் வெற்றிபெறுமா?

News November 1, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது? 2) CIA என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு யார் ?4) அமெரிக்க விடுதலைப் போராட்டத்திற்கு காரணமாக இருந்த நூல் எது? 5) அணில் இனங்களில் மிகப்பெரியது எது? 6) Epidemiology என்றால் என்ன? 7) Interview என்ற சொல்லை நேர்காணல் என்று தமிழாக்கம் செய்தவர் யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News November 1, 2024

FLASH: தங்கம் சவரனுக்கு ₹560 குறைந்தது

image

தங்கம் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ஒரு சவரன் ₹59,080க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ஒரு கிராம் ₹7,385க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் குறையாதா என்ற எதிர்பார்ப்பு நடுத்தர மக்களிடையே எழுந்துள்ளது.

News November 1, 2024

தனக்கு தானே தண்டனை கொடுத்து கொண்ட பிரபலம்!

image

தமிழ்நாட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா. பாலிவுட்டில் அறிமுகமான ‘LIGER’ படத்திற்குப் பின் அவர் தனது திரைப்படம் குறித்து பொதுவெளியில் பேசுவதில்லை. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “‘இனி என் படங்கள் வெளியாவதற்கு முன்பும், பின்பும் அதை பற்றிய எந்த விஷயத்தையும் பேசப்போவதில்லை. அது எனக்கு நானே கொடுத்துக்கொண்ட தண்டனை” என்றார்.

News November 1, 2024

எல்லைக்காத்த வீரர்களை நினைவில் ஏந்துவோம்!

image

<<14502071>>மொழிவாரி<<>> மாநிலங்கள் பிரிந்தபோது, சகோதர மாநிலங்களால் தமிழ்நாட்டின் நிலங்கள் (சென்னை, குமரி, பீர்மேடு) உரிமைக் கோரப்பட்டன. இனவெறியர்களால் அங்கிருந்த தமிழர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தன. அப்போது புலி போல் புறப்பட்ட மபொசி, விநாயகம், குஞ்சன் நாடார், நேசமணி, ஷெரீப் போன்றோர் களத்தில் இறங்கினர். அவர்களது போராட்டமும், உழைப்பும் தமிழர் தாயகத்தை காத்தது, மீட்டது. இந்நாளில் அவர்களை நினைவில் ஏந்துவோம்!

News November 1, 2024

ஐப்பசி அமாவாசை: கட்டாயம் இதை செய்ய வேண்டும்

image

முன்னோர்களை வழிபடக்கூடிய உன்னதமான நாளாக ஐப்பசி மாத அமாவாசை உள்ளது. நாம் இவ்வுலகிற்கு வர காரணமாக இருந்த முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்நாளில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. முன்னோர்கள் முக்தி அடையவும், அவர்களது ஆசியை முழுமையாக பெறவும் இன்று அன்னதானம் செய்யலாம். எள் விதைகள், பழங்கள் தானம் செய்யலாம். இதனால், முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து தங்கள் சந்ததியை ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது.

News November 1, 2024

விளையாட்டு துளிகள்

image

➤சேலஞ்சர் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் – மைனேனி ஜோடி முன்னேறியது. ➤புரோ கபடி தொடர்: 28வது லீக் போட்டியில் தபாங் டெல்லி அணியை பாட்னா பைரேட்ஸ் வென்றது. ➤U19 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மகளிர் 51 Kg பிரிவு அரையிறுதியில் நிஷா (IND), லைலாவை (USA) வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தார். ➤AFC சேலஞ்ச் கால்பந்து தொடரில் ஈஸ்ட் பசுந்தரா அணியை (BAN) பெங்கால் அணி (IND) வீழ்த்தியது.

News November 1, 2024

தீராத நோய்களை தீர்க்கும் திருவதிகையீஸ்வரர்

image

சிவபெருமானின் அஷ்ட வீர தலங்களில், திரிபுரத்தை எரித்து வீரச்செயல் புரிந்த தலம் கடலூரை அடுத்துள்ள திருவதிகை வீரட்டேஸ்வரர் கோயிலாகும். திலகவதியாருக்கு சிவபதவி அளித்து, அப்பரின் சூலை நோய் நீக்கிய தலம் இது என சிவமகா அதிகாபுரி புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்குச் சென்று, வீரதீஸ்வரர் – பெரியநாயகிக்கு அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி, சரங்கொன்றை மலர் சாற்றி வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!