India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னையில் நாளை முதல் இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூரில் இன்று கனமழையும், காஞ்சி திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை முதல் இரு நாட்களுக்கு கனமழையும் பெய்யக்கூடும் எனவும் IMD தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கமல் குறித்து பழம்பெரும் இயக்குநர் S.P. முத்துராமன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், கமலுக்கு இப்போ 70 வயசாகுது. ஆனால், இந்த வயசுலேயும் AI பற்றி படிப்பதற்காக அவர் அமெரிக்கா போறாரு. ஆனால், நீங்க 17 வயசுலேயே சிகரெட் பிடிக்கிறீங்க.. தண்ணி அடிக்குறீங்க.. வாழ்க்கை முழுவதும் படிக்கலாம். படிக்க ஆரம்பிச்சீங்கனா நேரமே பத்தாது. அப்புறம் போதையில் விழ மாட்டீங்க என அறிவுரை கூறினார்.
திருச்சி மணப்பாறை சுற்று வட்டாரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது. உடனே சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், இது பூகம்பம் அல்ல, இடி சத்தம் காரணமாகவே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
கேரளாவின் ஆலப்புழாவில் ஆல்யா சொந்தமாக ₹2 கோடிக்கு போட் ஹவுஸை ஒன்றை வாங்கியுள்ளாராம். இப்படகில் பெரிய ஹால், பெட்ரூமுடன் மிதந்து கொண்டே ஜாலியாக நேரத்தை கழிக்க DJ அறையும் உள்ளதாம். நேரத்தை செலவிட பலரும் இது போன்ற போட் ஹவுஸை தேர்ந்தெடுப்பதால், அந்த தொழிலில் முதலீடு செய்துள்ளாராம். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் “பேங்க் லோன் எடுத்துதான் வீடு கட்டினேன்” என்றார், அப்புறம் எப்படி ₹2 கோடிக்கு போட்?
2024-25 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில், நாடு முழுவதும் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வியை பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் தரவுகள் அடிப்படையில், உ.பி.யில் மட்டும் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வியை பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதேபோல ஜார்க்கண்ட் 65,000, அசாமில் 63,000 குழந்தைகளும் பள்ளிக் கல்வியை பெறவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
கோலி பின்னடைவில் இருந்து மீண்டு, விரைவில் கம்பேக் கொடுப்பார் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 3ஆவது டெஸ்டில் அவர், ஆஸி. பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ள பேக் புட் பயிற்சி எடுத்து வருவதாகவும், அடுத்த போட்டி நடக்கும் காபா மைதானத்தில் கோலிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அடுத்த டெஸ்டில் கோலியிடம் மிகச் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கதாநாயகி ஆவேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என நடிகை மீனாட்சி செளத்ரி தெரிவித்துள்ளார். அவர், “என் தந்தை ராணுவ வீரர் என்பதால் என்னை கட்டுப்பாடுகளோடு வளர்த்தார். அனைத்து விளையாட்டுகளிலும் என்னை பங்கேற்க வைத்தார். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவர் என்னை ஒரு விளையாட்டு வீராங்கனையாக்க விரும்பினார் ஆனால் காலம் என்னை நடிகையாக மாற்றிவிட்டது” என்றார்.
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக திடீர் திருப்பமாக, அதானி விவகாரத்தில் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதானி முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை (அ) வேறு எந்த விசாரணையோ அனைத்தையும் ஆதரிக்கத் தயார் என அறிவித்த அன்புமணி, அதானி குழுமத்திடம் தமிழ்நாடு மின்வாரியம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முதல்வரின் பதில் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
TN சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் நடந்த சிறப்புக் கூட்டத்தில் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, அதானியை சந்தித்ததாக எழுந்த சர்ச்சை, 10.5% வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்துக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக முன்னாள் எம்பி மோகன் உடலுக்கு உதயநிதி கண் கலங்க நேரில் அஞ்சலி செலுத்தினார். 1980இல் கோவை MPயாகவும், 1989ல் சிங்காநல்லூர் MLAவும் தேர்வு செய்யப்பட்டார். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், கொங்கு மண்டலத்தில் திமுக வளர காரணமாகவும் இருந்தார். அவரது மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பு எனக் குறிப்பிட்ட உதயநிதி, குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.