India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாழ்வு மனப்பான்மை உள்ளுக்குள் இருந்து கொல்லும் கொடிய விஷயமாகும். உலகத்தில் எல்லா உயிர்களும் ஒன்றுதான். எதற்கும் லாயக்கற்றவர், ராசியில்லாதவர் என்ற எண்ணத்தைத் தூக்கிப் போடுங்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை, நேர்மறையான விஷயங்களை அடையாளம் கண்டு, வெளிப்படுத்துங்கள். இப்படி பழகிவிட்டாலே உங்களுக்கு வாழ்க்கை ஈஸியாக மாறும். வெற்றி – தோல்வியை கையாள்வதும், எதிர்கொள்வதும் எளிதாகும்.
சீனிக்கிழங்கின் தோலை நீக்கி, சிப்ஸ் வெட்டும் பலகையில் வைத்து சீவிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் சீவி வைத்திருக்கும் சிப்ஸ்களை போட்டு, இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அதை டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் வடிந்த பிறகு சிப்ஸுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி தூவி விடவும். அவ்வளவுதான் சுவையான சீனிக்கிழங்கு சிப்ஸ் ரெடி.
ஒடிசா மாநிலத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பு ‘Z’ பிரிவில் இருந்து ‘Y’ பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்த 22 போலீசார் திரும்ப பெறப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஹவில்தார் நிலையில் இருவர் உட்பட 8 போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இந்த நடவடிக்கைக்கு BJD எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதை டிரம்ப் கண்டித்துள்ளார். பைடனும், கமலா ஹாரிஸும் USA மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துக்களை புறக்கணிப்பதாகவும், தான் அதிபரானால் USA-வில் தொழில் செய்யும் இந்துக்களுக்கு வரிச்சலுகை, கட்டுப்பாடுகளில் தளர்வு அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். நவ.5ல் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்துக்களின் வாக்குகளை கவர அவர் இப்படி கூறுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கமலின் அண்ணனும், பிரபல நடிகருமான சாருஹாசன் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரின் மகள் சுஹாசினி, தீபாவளிக்கு முந்தைய இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனே மருத்துவமனையில் சேர்த்தோம். தீபாவளி முழுக்க இங்கேதான் கழிந்தது. ஆனால், அவர் தற்போது நலமுடன் இருக்கிறாா். அறுவை சிகிச்சை செய்தால் அவர் குணமாகிவிடுவார் என டாக்டர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் NZ அணி 10 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்துள்ளனர். IND அணியில் ரவீந்திர ஜடேஜா 65 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் 81 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
1956ஆம் ஆண்டு நவ.1 அன்று மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு அப்போது மெட்ராஸ் மாநிலமாக இருந்தது. இப்பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்ற, ஜூலை 18, 1968-ல் அண்ணாதுரை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். தனி மாநிலம் அமைந்த நாளான நவ.1 தான் முதலில் தமிழ்நாடு நாளாக இருந்தது. ஆனால், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18, இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.
ஜீவா நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான ‘பிளாக்’ அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டர்களில் சக்கைபோடு போட்ட ‘லப்பர் பந்து’ படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம். சதீஸ் நடித்த ‘சட்டம் என் கையில்’ படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது. விதார்த் நடித்த ‘அஞ்சாமை’ மற்றும் ஹன்சிகா நடித்த ‘கார்டியன்’ ஆகிய படங்கள் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது.
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளான இன்று <<14504872>>தவெக தலைவர் விஜய்<<>> வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இன்றைய நாளை (நவ.1) ‘தமிழ்நாடு தினம்’ ஆகப் போற்றி மகிழ்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளது அரசியல் செய்தியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஐ தமிழ்நாடு தினம் ஆக திமுக அரசு மாற்றிய நிலையில், விஜய் இப்படி கூறியுள்ளார். விஜய்யின் இந்த நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் இண்டெர்நெட் பயன்பாடு அதிகரித்து உள்ளதற்கு முக்கிய காரணம், மலிவான கட்டணத்தில் இங்கு டேட்டா கிடைப்பது தான். ஆம், 7, 8 ஆண்டுகளுக்கு முன் 1GB டேட்டாவுக்கு ₹254 செலவானது. இப்போது வெறும் ₹8 தான். மற்ற நாடுகளை பொறுத்தவரையில் சுவிட்சர்லாந்தில் தான் அதிகம் (1GB, 7.29 டாலர் – ₹612). அடுத்து அமெரிக்கா ($6.00), நியூசிலாந்து($5.89), கனடா ($5.37), மற்றும் தெ.கொரியா ($5.01) உள்ளன. SHARE IT
Sorry, no posts matched your criteria.