news

News November 1, 2024

முகூர்த்த டிரேடிங்: ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை

image

பங்குச்சந்தைகளில் இன்று நடந்த முகூர்த்த நேர டிரேடிங், பாசிடிவ் மோடில் முடிந்துள்ளது. மும்பை BSE Sensex 335.06 pts உயர்ந்து 79,724.12 ஆகவும், தேசிய பங்குச்சந்தை (Nifty50) 99 pts உயர்ந்து 24,304.35 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. தீபாவளி நாளில் இந்து புத்தாண்டு தொடங்குவதால் முதலீட்டாளர்களுக்கு செல்வம், செழிப்பு & அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையில் மாலையில் 1 hour ‘முகூர்த்த’ நேர வர்த்தகம் நடைபெற்றது.

News November 1, 2024

இது உண்மையல்ல.. அஜித் மறுப்பு!

image

நடிகர் அஜித் புதியதாக தொடங்கியுள்ள தனது கார் ரேஸிங் பந்தய அணிக்கு http://ajithkumarracing.com என்ற இணையதளத்தை தொடங்கியதாகத் தகவல் வெளியானது. ஆனால், இது முற்றிலும் தவறான தகவல் என அஜித்தின் மேனேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், வெரிஃபைடு சேனல்கள் மூலமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்றும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தை புறக்கணிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 1, 2024

மூலிகை: ஈரல் பாதிப்புகளைத் தடுக்கும் மணத்தக்காளி

image

செரிமானப் பாதையில் உண்டாகும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் மணத்தக்காளிக்கு இருப்பதாக நவீன ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சொலாசொடின், கூமரின்ஸ், பைட்டோஸ்டெரால்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் பழங்களை உலர வைத்து வற்றலாக்கி, தேனில் ஊறவைத்து 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால், ஈரல் பாதிப்புகள் தீரும் என சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.

News November 1, 2024

கர்நாடகா CM, DCM-ஐ ரைடு விட்ட கார்கே..!

image

செயல்படுத்த சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே கூற வேண்டும் என கர்நாடகா CM, DCM-ஐ கார்கே பொதுவெளியில் கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிச்சுமையால் கர்நாடகாவில் மகளிர் இலவச பஸ் பயணத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக DCM சிவக்குமார் தெரிவித்ததால், கார்கே இவ்வாறு கடுமையாகப் பேசியுள்ளார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் சாடியுள்ளார்.

News November 1, 2024

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் கவனத்திற்கு

image

தீபாவளியையொட்டி, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களுக்காக நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. நாளை மறுநாளுடன் லீவ் முடிவதால், தனியார், அரசு ஊழியர்கள் பணிக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் திரும்பவுள்ளனர். இதனையொட்டி, நவ.2 – 4 வரை சென்னை, பல்வேறு நகரங்களுக்கு 12,486 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. www.tnstc.in மற்றும் tnstc APP மூலம் முன்பதிவு செய்யலாம்.

News November 1, 2024

போர்களின் பின்னணி இதுதான்

image

இயற்கை வளம் & மூலப் பொருள்களின் தேவையே வல்லரசுகளின் போர்களுக்கு பின்னணி காரணமாகும். உலகில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள நாடுகள் (இயற்கை வள மதிப்பு): *ரஷ்யா -$75 trillion *USA: $45 trillion *சவுதி அரேபியா: $34 trillion *கனடா: $33 trillion *ஈரான்: $27 trillion *சீனா: $23 trillion *பிரேசில்: $22 trillion *ஆஸ்திரேலியா: $20 trillion *ஈராக்: $16 trillion *வெனிசுலா : $14 trillion *இந்தியா $0.11 trillion.

News November 1, 2024

தமிழ்நாடு பாரதத்தை வடிவமைத்துள்ளது: ஆளுநர்

image

தமிழ்நாடு மாநிலம் உருவான தினத்தையொட்டி ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை தமிழ்நாடு வடிவமைத்துள்ளதாகவும், இந்த புனித பூமியின் முனிவர்கள், வீரம் மிக்க ஆட்சியாளர்கள் பாரதத்தின் ஆன்மாவை வளப்படுத்தியுள்ளதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். மேலும், இந்த மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம், துடிப்பான ஜனநாயகத்துக்கு வழிவகுத்துள்ளதாகவும் வாழ்த்தியுள்ளார்.

News November 1, 2024

வேட்டையனை முந்திய அமரன்

image

டிக்கெட் புக்கிங்கில் ரஜினியின் ‘வேட்டையன்’ சாதனையை முந்தியுள்ளது ‘அமரன்’. ‘Book My Show’ தளத்தின் மூலம் முதல் நாளில் ‘அமரன்’ படத்திற்கு 4.78 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் அதிகபட்சமாக ‘கோட்’ படத்திற்கு 5.78 லட்சம் பேரும், ‘வேட்டையன்’ படத்திற்கு 4.7 லட்சம் பேரும் முன்பதிவு செய்திருந்த நிலையில், வேட்டையன் சாதனையை அமரன் முந்தியது.

News November 1, 2024

இதுவரை பெய்த மழையை விட அதி கனமழை.. மக்களே அலர்ட்

image

இம்மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று IMD எச்சரித்துள்ளது. நவ., முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தமிழ்நாடு – ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக வரும் 7 – 11ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை பெய்த மழையை விட அதி கனமழை வெளுக்கப்போகிறதாம்.

News November 1, 2024

GST வரி வசூல் ரூ.1.87 லட்சம் கோடி

image

இந்தாண்டு அக்டோபர் மாதம் நாட்டின் மொத்த GST வரி வசூல் ₹1.87 லட்சம் கோடி. கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான வரியை காட்டிலும், இது 8.9% அதிகமாகும். அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் ரூ.11,188 கோடியும், புதுச்சேரியில் ரூ.252 கோடியும் GST வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2024ஆண்டில் இதுவரை GSTவரி ₹12.74 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 9.4% அதிகம்.

error: Content is protected !!