news

News November 1, 2024

ரயில் டாய்லெட் ‘கப்’ அடித்ததால் பயணிக்கு ₹30,000 இழப்பீடு

image

ரயிலில் கழிவறை சுத்தமாக இல்லை என புகாரளித்தவருக்கு ₹30,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்தது ஆந்திர மாநிலத்தில். திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததோடு, ஏசியும் முறையாக இயங்கவில்லை என மூர்த்தி என்பவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில், விசாகப்பட்டினம் நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.

News November 1, 2024

வங்கதேசத்திற்கு பவர் கட் செய்த அதானி

image

வங்கதேசத்திற்கான மின் விநியோகத்தை அதானி நிறுவனம் பாதியாக குறைத்துள்ளது. $846 மில்லியன் நிலுவை தொகையை செலுத்தாததால், நேற்றிரவு 1,600MW மின் விநியோகத்தை குறைத்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அக்.31க்குள் தொகையை செலுத்த வேண்டும் என அக்.27ஆம் தேதியே அந்நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது. கட்டணத்தை உயர்த்தியதால், தொகையை செலுத்துவதில் தாமதமாவதாக அந்நாட்டின் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

News November 1, 2024

பூமியை விட 5 மடங்கு பெரிய கோளை கண்டுபிடித்த இந்தியா!

image

பால்வெளியில் பூமியை விட சுற்றளவில் 5 மடங்கு பெரிய கோளை இந்தியாவின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை போன்ற நட்சத்திரமாக உள்ள இதில் 87% பாறை, இரும்பு தாது மூலம் நிறைந்துள்ளது. இதற்கு ‘TOI-6651b’ என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது தவிர ஹைட்ரஜனும், ஹீலியமும் உள்ளது. சூரிய குடும்பத்தை தவிர, வேறு கோள்கள் உள்ளனவா என்ற ஆய்வில்இதுவொரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

News November 1, 2024

‘நிறங்கள் மூன்று’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

சரத்குமார், ரகுமான், அதர்வா முரளி நடித்துள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘துருவங்கள் பதினாறு’, ‘மாறன்’ படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் Hyperlink த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சில பிரச்னைகளால் ரிலீஸ் தாமதமான நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News November 1, 2024

தீபாவளி: டாஸ்மாக் கடைகளில் வசூல் எவ்வளவு?

image

தீபாவளிக்கு அக்.30, 31 டாஸ்மாக் கடைகளில் ₹438.53 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட ₹29.10 கோடி குறைவாகும். ஆனால், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு மதுவிற்பனை என்பது இதுவரை சஸ்பென்ஸாக இருக்கிறது. ஆண்டுதோறும் டாஸ்மாக் வசூல் குறித்த தகவல் வெளியாகி விவாத பொருளாகும். இதனால், வசூல் விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுப்பதால், உண்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

News November 1, 2024

சாமானியன் கனவை நசுக்கும் திமுக அரசு: இபிஎஸ்

image

முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத்துறையின் 20 வகை சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியதாக செய்திகள் வருகிறது. சொத்து என்ற சாமானியன் கனவை சாத்தியப்படுத்த துணையாக இருக்க வேண்டிய அரசே முத்திரைத்தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போட்டுள்ளது என்று சாடிய அவர், அரசு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News November 1, 2024

இந்த நாட்டில் 94% விவாகரத்து விகிதம்?

image

சமீபத்திய ஆய்வின்படி, போர்ச்சுகல் நாட்டில் 94% தம்பதியினர் விவாகரத்து பெறுவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஸ்பெயின் (85%), ரஷ்யா (73%), உக்ரைன் (70%), பிரான்ஸ் (51%), நெதர்லாந்து (48%), கனடா (47%), அமெரிக்கா (45%), சீனா (44%), இங்கிலாந்து (41%), ஜெர்மனி (38%), துருக்கி (25%), ஈரான் (14%) ஆகிய நாட்டினர் அதிகம் விவாகரத்து பெறுகின்றனர். இந்தியாவில் 1% மட்டுமே விவகாரத்து பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

News November 1, 2024

நேற்று ஒரே நாளில் 347 வழக்கு பதிவு

image

தீபாவளி நாளான நேற்று அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடித்ததாக சென்னையில் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று தமிழகம் முழுவதும் 232 தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், 544 பேர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

News November 1, 2024

EB கட்டணம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமா?

image

*TV-யை ஆஃப் செய்து, Set-top box-ஐ அப்படியே விடுதல் *ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்துவிட்டு, ஸ்விட்சை ஆஃப் செய்யாதது *AC remote-ஐ மட்டும் ஆஃப் செய்துவிட்டு, Stabilizer-ஐ அப்படியே விடுதல் *பயன்பாடு இல்லாமல் ஸ்விட்ச் போட்ட நிலையில், போன் சார்ஜர் இருத்தல் -இந்த செயல்பாடுகள் மின்சார விரயத்தை ஏற்படுத்தும். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்காக ஆண்டுக்கு ரூ.1000 வரை கூடுதலாக செலவாகிறது.

News November 1, 2024

காங்கிரஸ் லட்சணம் மக்கள் முன் அம்பலம்: PM

image

கர்நாடகாவில் மகளிர் இலவச பஸ் பயணத்தை மறுபரிசீலனை செய்ய போவதாக அம்மாநில DCM தெரிவித்ததற்கு, கார்கே பொதுவெளியில் கடிந்து கொண்டார். இந்நிலையில், காங்., மக்களை ஏமாற்றியது தற்போது அம்பலமாகியுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். அக்கட்சி ஆளும் மாநிலங்களின் நிதிநிலை அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!