India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶நவ. 2 (ஐப்பசி 16) ▶ சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 12:15 AM – 1:15 AM, 9:30 PM – 10:30 PM▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: பிரதமை ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ நட்சத்திரம்: விசாகம் ▶சந்திராஷ்டமம்: ரேவதி.
‘Breaking Bad’ வெப் சீரிஸில் வருவது போல், கனடாவில் இந்தியர் போதைப் பொருள் ஆய்வகத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து 54KG ஃபென்டனைல், 390KG மெத்தபெட்டமைன், 35KG கொக்கைன், 15KG MDMA, 6KG கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் ககன்பிரீத் ரந்தாவா கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஐஸ்வர்யா ராய் இன்று தனது 51ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஆனால் கணவர் அபிஷேக் பச்சன் இதுவரை வாழ்த்து கூறாதது பேசுபொருளாகியுள்ளது. இருவரும் நேரில் பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கலாம் எனவும், அதனால் கூட சமூக வலைதளத்தில் அவர் வாழ்த்தை பதிவிடாமல் இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் விவாகரத்து விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அபிஷேக் வாழ்த்து கூறாததையும் ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள், பிற பெண்களின் குரலை கேட்க தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறை உத்தரவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், பெண்கள் பிற பெண்களின் குரலை கேட்கக் கூடாது, பேசக்கூடாது எனத் தடை விதித்துள்ளதாக நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சனாதன் ஜாக்ரன் மஞ்ச் இயக்கத்தை சேர்ந்த இந்துக்கள் 18 பேர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. சிட்டகாங்கில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி, இழப்பீடு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேசியக் கொடி மீது காவிக் கொடியை உயர்த்திப் பிடித்த புகாரில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது.
➤மேஷம் – வரவு
➤ரிஷபம் – முயற்சி
➤மிதுனம் – நன்மை
➤கடகம் – பக்தி
➤சிம்மம் – மேன்மை
➤கன்னி – பாராட்டு
➤துலாம் – நலம்
➤விருச்சிகம் – சிக்கல்
➤தனுசு – சினம் ➤மகரம்- செலவு
➤கும்பம் – பாசம் ➤மீனம் – பணிவு
ஜப்பானில் உள்ள ஃப்யூஜி என்ற எரிமலைச்சிகரம் 130 ஆண்டுகளுக்குப் பின் பனிப்பொழிவின்றி காணப்படுகிறது. இது உலக காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ஆண்டு ஜப்பானில் நிலவும் அதிகப்படியான வெப்பம் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சூழலியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த மாற்றம் சூழலியலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘அமரன்’ படம் தமிழ் வீரனுக்கான சிறந்த சமர்ப்பணமாக அமைந்ததில் பெருமை கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘அமரன்’ திரைப்படத்தை அறிவித்த போது, இந்த படம் அனைவருக்கும் பெருமை தேடித் தரும் என தான் சொன்னதாகவும், 1000 நாள்களுக்கும் மேலான உழைப்பிற்கு கிடைத்திருக்கும் வெற்றி, ‘மக்கள் நல்ல படத்தை கொண்டாடுவார்கள்’ எனும் தனது நம்பிக்கையை உறுதி செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இரவு ஒருமணி வரை இடியுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், தருமபுரி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உ.பி., முன்னாள் ஷியா வக்பு தலைவராக இருந்த வாஸிம் ரிஸ்வி என்பவர், இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி, 2021-ல் இந்துவாக மதம் மாறி, ஜிதேந்திரா நாராயண் தியாகி எனப் பெயர் சூட்டிக் கொண்டார். இவர் தற்போது பிராமண சாதிக்கு மாறிவிட்டதாகவும், பெயரை தாக்கூர் ஜிதேந்திர நாராயண் சிங் செங்கார் என மாற்றிவிட்டதாவும் அறிவித்துள்ளார். இவரது பிராமண நண்பர் இவரை மகனாக தத்தெடுத்துக் கொண்டதால், இவரும் பிராமணராகி விட்டாராம்.
Sorry, no posts matched your criteria.