news

News November 2, 2024

ரூ.60,000 கோடிக்கு தீபாவளி வர்த்தகம்

image

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் ரூ.60,000 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்காக அக்டோபர் மாதத்தில் ஜவுளி உள்ளிட்டவற்றின் விற்பனை களை கட்டியிருந்தது. அதன்படி, இனிப்பு, காரம் ஆகியவை ரூ.10,000 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாகவும், தங்கம், வைரம் ரூ.5,000 கோடி, பட்டாசு ரூ.6,000 கோடி, டாஸ்மாக் மது ரூ.438 கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

News November 2, 2024

முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு டிடிவி எதிர்ப்பு

image

முத்திரைத்தாள் கட்டணத்தை TN அரசு உயர்த்தியிருப்பதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தத்தெடுத்தல், பிரமாணப் பத்திரம், உடன்படிக்கை, சங்கம் பதிவு என பெரும்பாலான முத்திரைத்தாள் கட்டணத்தை கடந்த ஆண்டே TN அரசு பலமடங்கு உயர்த்தி விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் மீண்டும் கட்டணத்தை அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது, அதை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

News November 2, 2024

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

image

19 இந்திய நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு உதவுவோர் மீது அமெரிக்கா தடை விதித்து வருகிறது. அந்த வரிசையில், ரஷ்யாவுக்கு மின்னணு சாதனங்களை விற்பனை செய்து உதவியதாகக் கூறி, அசென்ட் அவிடேசன், மஸ்க் ட்ரான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மேலும் நாடுகளின் நிறுவனங்கள் மீதும் தடை விதித்துள்ளது.

News November 2, 2024

FLASH: இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை

image

பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. *இன்று: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை *நாளை: குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள்

News November 2, 2024

வேற்றுக் கிரக ஆராய்ச்சிக்கு மையம்.. இஸ்ரோ தொடங்கியது

image

வேற்றுக் கிரக ஆராய்ச்சிக்காக இஸ்ரோ தனி மையத்தை தொடங்கியுள்ளது. ககன்யான் திட்டத்தின்கீழ், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது. இதற்காக 6 வீரர்களை தேர்வு செய்து இஸ்ரோ பயிற்சி அளிக்கிறது. இந்த வரிசையில், லடாக்கின் லே பகுதியில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. அங்கு வேற்று கிரகங்களில் இருப்பது போன்ற சூழல் கொண்ட கலன்களை அமைத்து ஆய்வுகளை இஸ்ரோ ஆரம்பித்துள்ளது.

News November 2, 2024

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் உத்தரவு?

image

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கோமெனி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.26இல் இஸ்ரேலின் போர் விமானங்கள் தங்கள் நாட்டில் நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கோமெனி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், நவ.5இல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

News November 2, 2024

UPI புதிய உச்சம்.. ரூ.23 லட்சம் கோடி பரிவர்த்தனை

image

நாடு முழுவதும் UPI பரிவர்த்தனை அக்டோபர் மாதத்தில் எண்ணிக்கை அடிப்படையில் 1,658 கோடி நடைபெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது பணத்தின் அடிப்படையில் ரூ.23.5 லட்சம் கோடி ஆகும். அக்டோபரில் நாளொன்றுக்கு 53.5 கோடி பரிவர்த்தனையும், ரூ.75,801 கோடியும் பரிவர்த்தனையும் நடந்துள்ளது. செப்டம்பர் மாத எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 10%ம், மதிப்பு அடிப்படையை ஒப்பிடுகையில் 14%ம் அதிகமாகும்.

News November 2, 2024

அமெரிக்காவுடன் நேரடி போர்.. ரஷ்யா திடீர் எச்சரிக்கை

image

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நேரடி போர் ஏற்படும் சூழல் உருவாகி வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ எச்சரித்துள்ளார். பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லாவ்ரோவ், அமெரிக்காவில் ரஷ்யாவுக்கு எதிரான மனப்பான்மையை அதிபர் பைடன் அதிகரிக்கச் செய்து விட்டதாகவும், இதனால் 2 நாடுகள் இடையே நேரடி போருக்கான சூழல் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 2, 2024

தேவையானி நாயகியாக நடிக்கும் படம்

image

6 ஆண்டுகளுக்குப் பிறகு தேவையானி நாயகியாக நடித்துள்ள ‘நிழற்குடை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெளிநாட்டு மோகத்தால் தடம் மாறும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை திரில்லர் பாணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவா ஆறுமுகம் இப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் தேவையானி நடிப்பதால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 2, 2024

பென் ஸ்டோக்ஸ் வீட்டில் கொள்ளை

image

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவி, குழந்தைகள் வீட்டில் இருந்தபோது நுழைந்த மாஸ்க் போட்ட கொள்ளையன், தனது மெடல் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருள்களை திருடிச் சென்றதாக ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிக்காக தான் பாகிஸ்தான் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். திருடன் தற்போது ஜாமினில் உள்ளான்.

error: Content is protected !!