news

News December 11, 2024

பும்ராவை ஓவர் டேக் செய்த பாக்.வீரர்

image

நவம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் கைப்பற்றியுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. கடந்த மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் பும்ரா, பாக். வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், SA ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், பாக்., வீரர் விருதை வென்றுள்ளார்.

News December 11, 2024

GOOD NEWS.. அரசின் புதிய திட்டம்!

image

SWIGGY, ZOMATO உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு மத்திய அரசு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது. இதுவரை இந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை தவிர, வேறு எந்தவித பலன்களும், எதிர்கால பாதுகாப்பும் இல்லாத சூழல் இருந்தது. இந்நிலையில், இந்த ஊழியர்களுக்கு பென்சன், மருத்துவக் காப்பீடு போன்ற பலன்களை கொடுக்கும் வகையிலான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை செயலர் சுமிதா தவ்ரா அறிவித்துள்ளார்.

News December 11, 2024

கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் திருப்பம்!

image

கோவில்பட்டியில் சிறுவன் கருப்பசாமி (10) ஆசனவாயில் காயத்துடன் இறந்துகிடந்த நிலையில், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது குறித்து சிறுவனின் தாயார் சில வாரங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல், சிறுவனை கொலை செய்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 11, 2024

பாரதியை ஏன் கொண்டாட மாட்றீங்க? தமிழிசை ஆவேசம்

image

பாரதியார் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழிசை மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பாரதியை, திமுக அரசு ஏன் கொண்டாடுவதில்லை என ஆவேசமாக கேள்வியெழுப்பினார். மேலும், பெண்ணுரிமைக்கு அடையாளமாக பெரியாரை கொண்டாடும் இந்த அரசு, அவருக்கு முன்பே பெண்ணுரிமை பாடிய பாரதிக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

News December 11, 2024

மொடாக்குடியில் இருந்து மீண்ட மக்கள்

image

தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த பெரும்பான்மையான மக்கள், அதிலிருந்து மீண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்பு கூட்டம் நிரம்பி வழிந்த பார்கள், தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. குடிப்பழக்கத்தை மக்கள் கைவிடுவதற்கு, அந்நாட்டின் நீண்டகால பணவீக்கம்தான் காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பான்மையானோர் கடனாளிகளாக இருப்பதால், குடிக்கு பணம் செலவு செய்ய யோசிக்கின்றனர்.

News December 11, 2024

ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

image

விஸ்வகர்மா திட்டத்தை காப்பி அடித்து, கலைஞர் கைவினை திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக அரசு திட்டத்தில் 35 வயதிற்கு மேல் உள்ளவர்களே இணைய முடியும். எனவே, இத்திட்டத்தை கைவிட்டு, விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று கூறினால், ஆதாரத்தை வெளியிட தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.

News December 11, 2024

நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறையா? இல்லையா?

image

நாளை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், இதுவரை எந்த மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. கனமழையின்போது முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க பள்ளிகளுக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை விடுமுறை அப்டேட் வெளியாகவில்லை. இதனால் நாளை விடுமுறையா? இல்லையா? என மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

News December 11, 2024

பொது இடத்தில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களுக்கு தடை? HC

image

பொது இடத்தில் கட்சிக் கொடிக்கம்பங்கள் அமைக்கப்படுவதை ஏன் தடை செய்யக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலை அனுமதிக்க முடியாது என்றார். கட்சி கொடிக் கம்பங்களால் இதுவரை நிகழ்ந்த விபத்துகள் எத்தனை? பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

News December 11, 2024

மூளையில் கட்டி உள்ளதா..? இதுதான் அறிகுறி

image

மூளையில் சிலருக்கு கட்டி வளரும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் சரிசெய்துவிடலாம். இல்லையென்றால், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கும். 1) அடிக்கடி தலைவலி வருதல் 2) வலிப்பு 3) மங்கலான பார்வை 4) தலைசுற்றல் – வாந்தி 5) ஞாபக மறதி 6) அடிக்கடி கோபம் 7) பேச்சு இடர்பாடு 8) காது கேட்காமல் போவது ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். SHARE IT.

News December 11, 2024

இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

image

இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய AUS, 298/6 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சதர்லேண்ட் (110) சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய IND அணி 45.1 ஓவரில், 215 ரன்களில் ஆட்டமிழந்தது. ஸ்மிருதி மந்தனா சதம் (105) அடித்தார். ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய AUS, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

error: Content is protected !!