news

News December 11, 2024

சத்தமே இல்லாமல் சாதித்த ஸ்மிருதி மந்தனா

image

ஆஸி. அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஸ்மிருதி மந்தனா (105) புதிய சாதனை படைத்துள்ளார். ஒரே ஆண்டில் 4 சதமடித்த முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்றை அவர் படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 9 சதம் விளாசியுள்ள அவர், இந்தியாவில் அதிக சதமடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளார். 2ஆவது இடத்தில் 7 சதங்களுடன் மித்தாலி ராஜ் உள்ளார்.

News December 11, 2024

பாரதியை வணங்குகிறேன்: PM மோடி நெகிழ்ச்சி

image

மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த தினமான இன்று, அவரது நூல் தொகுப்பை வெளியிட்டு பேசிய PM மோடி, மாபெரும் கவிஞன் பாரதியை பயபக்தியுடன் வணங்குகிறேன் என்றார். பாரதத்தின் தேவையை மனதில்கொண்டு பாடுபட்டவர் பாரதி என்று புகழ்ந்த மோடி, அந்தக் காலத்திலேயே அவருக்கு இருந்த விசாலமான பார்வை தனக்கு வியப்பை தருவதாகவும், தன் ஒவ்வொரு மூச்சையும் பாரதத்திற்காக அர்ப்பணித்த மகான் எனவும் புகழாரம் சூட்டினார்.

News December 11, 2024

ஜியோ புதிய ஆஃபர்.. உங்க காசு உங்களுக்கே வந்திடும்..!

image

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ புதிய ரீசார்ஜ் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. ₹2025-க்கு ரீசார்ஜ் செய்தால், 200 நாள்கள் வேலிடிட்டியில், தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் மெசேஜ் வசதியை வழங்குகிறது. அதோடு Azio, ஸ்விக்கி என ₹2,150 மதிப்புள்ள பல்வேறு தள்ளுபடி கூப்பன்களும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இன்று முதல் 2025 ஜனவரி 11க்குள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News December 11, 2024

கண்ணீரில் இருந்து கரண்ட் தயாரிப்பு..!

image

கண்ணீர் துளிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். கண்ணீரில் ‘Nacre’ என்ற நுண் படிகம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த படிகத்தை அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது மின்சாரம் தயாரிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வருங்காலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்க இது பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 11, 2024

காதல் வாரத்தில் வெளியாகும் தனுஷ் படம்

image

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரெட் ஜெயண்ட் மூவிஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரியா வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

News December 11, 2024

ரயில் பயணிகளுக்கு சுத்தம் கியாரண்டி!

image

மதுரை- சென்னை இடையே பயணிக்கும் பாண்டியன் Exp ரயிலில், துணி உறையுடன் கம்பளி போர்வை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, ரயில்களில் வழங்கப்படும் போர்வைகள் மாதம் ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் கூறியது பயணிகள் இடையே அதிருப்தி ஏற்படுத்தியது. இதையடுத்து, மாதத்திற்கு 2 முறை துவைப்பதாக ரயில்வே நிர்வாகம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

News December 11, 2024

ஒரே தேர்தல் போதும்: சிவராஜ் சிங் செளகான் ஐடியா

image

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் வெளியிட்ட X பதிவில், தேர்தல்கள் மாறி மாறி நடப்பதால் PM, CM, MLA, MP என அனைவரது நேரமும் வீணாவதுடன், மக்கள் நலத் திட்டங்கள் கிடப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, நாடு முழுவதும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே தேர்தல் நடத்தப்படவும், இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

News December 11, 2024

என் பாட்டை யூஸ் பண்றது எனக்கு பெருமைதான் ❤️❤️

image

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களுக்கே டஃப் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. கானா, மெலடி, பிஜிஎம் என அனைத்திலும் புகுந்து விளையாடியவர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும் போது, எனது பாடல்களை இப்ப உள்ள படங்களில் பயன்படுத்துறாங்க. இந்த காலத்து பசங்களுக்கும் என் பாட்டு ரீச் ஆகுது. அதனால என் பாட்டை பயன்படுத்த கூடாதுனு நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன். அது எனக்கு பெருமைதான் என்றார்.

News December 11, 2024

இபிஎஸ் மீது தனிமனித தாக்குதல்: ஆர்.பி.உதயகுமார்

image

திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த இபிஎஸ் மீது தனிமனித தாக்குதல் நடத்துவதா என்று ஆர்.பி.உதயகுமார் கொந்தளித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கும், மத்திய அரசின் சிறப்பு மண்டலத்திற்கும் கூட அமைச்சருக்கு வித்தியாசம் தெரியவில்லை என ரகுபதியை விமர்சித்த அவர், மத்திய அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை வெளியிட திமுக அரசுக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 11, 2024

ஆசையை தூண்டிய பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்..!

image

ஒருத்தர ஏமாத்த, ஆசையை தூண்டணும் என ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஒரு வசனம் வரும். அதற்கேற்றார்போல், ஆப்பில் டிரேடிங் செய்தால் பணமழை கொட்டும் என முன்பின் தெரியாத ஒரு பெண் கூறியதை கேட்டு, ₹4.05 கோடியை இழந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஒருவர். தனியார் நிதிநிறுவனத்தின் பிரதிநிதி என கூறி, அப்பெண் வாட்ஸ்அப்பில் அந்நபரை தொடர்பு கொண்டு, APP-ஐ டவுன்லோடு செய்ய சொன்னது தெரியவந்துள்ளது. உஷாரா இருங்க மக்களே..

error: Content is protected !!