India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சில எண்ணெய்களை வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மூட்டு வலிக்கு கற்பூரம் கொண்டு தயாரிக்கப்படும் கற்பூராதி தைலம் தேய்த்துக் குளிக்கலாம். இடுப்பு வலிக்கு ஆமணக்கு எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய்யை சூடு பறக்கத் தேய்த்துக் குளிக்கலாம். நரம்பு மண்டலம் வலுபெற, மன அழுத்தம் நீங்க ஒரு மடங்கு ஆலிவ் எண்ணெயுடன் 3 மடங்கு நல்லெண்ணெய் கலந்து குளித்தால் பயனளிக்கும் என்கிறார்கள்.
1) உலகின் மிக ஆழமான கடல் பகுதி எது? 2) DPI என்பதன் விரிவாக்கம் என்ன? 3)இந்தியாவின் மாக்கியவல்லி என அழைக்கப்படுபவர் யார்? 4)எந்த ஆண்டில் தமிழ்நாட்டில் +2 தேர்வு அறிமுகமானது? 5) அட்டைப்பூச்சிக்கு எத்தனை பற்கள் உள்ளன? 6)Anthropology என்றால் என்ன? 7) Cartoon என்பதற்கான தமிழ் சொல் என்ன? 8) வெப்பநிலையை அளவிட பயன்படுத்தப்படும் கருவி எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்ளூர் வங்கி அதிகாரி பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Any Bachelor’s Degree. வயது வரம்பு: 20-30. சம்பளம்: ₹48,480 – ₹85,920. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு , குழு கலந்துரையாடல், நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.13. கூடுதல் விவரங்களுக்கு <
தவெக மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்தக் கட்சியையும் பெரிதாக சீண்ட மாட்டார் என பேசப்பட்ட நிலையில், திமுகவையும், பாஜகவையும் விளாசித் தள்ளினார் விஜய். இந்நிலையில், மாநாடு முடித்த கையோடு, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். டிச. 27 முதல் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என தெரிகிறது. கோவையில் முதல் பயணம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நவ. 1 தமிழகத்துக்கு இழப்பு ஏற்பட்ட நாள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். நவ. 1ஐ தமிழ்நாடு நாளாக ஏன் கொண்டாடக்கூடாது என விளக்கம் அளித்த அவர், 1956 நவ. 1ஆம் தேதி மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் அண்டை மாநில மக்கள் மாநிலம் உருவான நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதாகக் கூறினார். ஆனால், அந்நாளில் சென்னை மாகாணத்தில் இருந்து பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்ததாகத் தெரிவித்தார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவ. 5ஆம் தேதிக்குள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என எச்சரித்துள்ளது. இதனால், நவம்பர் 2ஆவது வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும், சில பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு மூலக்காரணமான ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு இன்சுலினை அதிகரிக்க செய்யும் ஆற்றலைக் கொண்டது சங்குப்பூ தேநீர். சங்குப் பூக்களை நீரில் கழுவி இடித்து, வெந்தயம், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான சங்குப்பூ டீ ரெடி. இந்த டீ வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே குடிக்கலாமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
இன்று (நவ.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
உடலில் இரும்புச்சத்து குறையாமல் இருக்க கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டுமென ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நான் ஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்த்து இரும்பு பாத்திரங்களில் சமைக்க வேண்டும். உணவு உட்கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்கக் கூடாது. உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை சாறு குடிக்கலாம் என்கிறார்கள்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.463 பில்லியன் சரிந்து $684.805 பில்லியனாக உள்ளது. இது அதற்கு முந்தைய வாரம் $2.163 பில்லியன் குறைந்து $688.267 பில்லியனாக இருந்தது. அக். 25ஆம் தேதி கணக்கெடுப்பின்படி, தங்கத்தின் கையிருப்பு $1.082 பில்லியன் குறைந்து $68.527 பில்லியனாக இருக்கிறது. சிறப்பு வரைதல் உரிமம் (SDRs) பொறுத்தமட்டில் $52 மில்லியன் குறைந்து $18.219 பில்லியனாக சரிந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.