news

News November 2, 2024

‘லக்கி பாஸ்கர்’ 2 நாள்களில் ₹26.2 கோடி வசூல்

image

உலகளவில் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 2 நாள்களில் ₹26.2 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வெங்கி அட்லுரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடிப்பில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அதேபோல, நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு 1980 காலக்கட்டத்தை படம்பிடித்துக் காட்டுகிறது.

News November 2, 2024

திருமா அந்த தப்பை செய்யவே மாட்டார்: சீமான் உறுதி

image

தவெக தலைவர் விஜய்யை சீமான் இன்று கடுமையாக விமர்சித்தார். அப்போது திருமாவளவன் விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சீமான், “திருமாவளவன் அண்ணன் என் ஆசான். அவர் என்னிலும் மூத்தவர், எனக்கு பாடம் நடத்தியவர்; அவர் நிச்சயம் விஜய்யுடன் கூட்டணி வைக்க மாட்டார். சிந்தித்து தெளிவான முடிவை எடுப்பவர் அவர். ஒருபோதும், இதுபோன்ற தவறை அவர் செய்யவே மாட்டார்” எனக் கூறினார்.

News November 2, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14510307>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) மரியானா அகழி 2) Directorate of Public Instruction 3) கௌடில்யர் 4) 1979 5) 270 பற்கள் 6)மக்கள் & பண்பாடுகள் பற்றிய ஆய்வு 7) கேலிச்சித்திரம் 8)Thermometer. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News November 2, 2024

ஹிரித்திக் குறித்து ராஜமெளலி சர்ச்சை பேச்சு

image

பிரபாஸ் முன் ஹிரித்திக் ரோஷன் எல்லாம் ஒன்றுமே கிடையாது என ராஜமெளலி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், 2006இல் ‘தூம் 2’ படத்தை பார்த்தபோது ஹரித்திக் போன்ற ஹீரோக்கள் ஏன் தென்னிந்தியாவில் இல்லை என வியந்ததாகக் கூறினார். ஆனால், பில்லாவின் டிரெய்லரைப் பார்த்த பிறகு, ஹிரித்திக் ஒன்றுமே இல்லையென புரிந்ததாகவும், பாலிவுட்டை விட தெலுங்கு சினிமா சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

News November 2, 2024

இந்தியா ஆல் அவுட்.. 28 ரன்கள் முன்னிலை

image

NZ அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் IND முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்சில் NZ 235 ரன்கள் எடுத்த நிலையில், IND அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 28 ரன்கள் முன்னிலை பெற்றது. கில் 90 ரன்களும், பண்ட் 60 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 38 ரன்கள் எடுத்தார். NZ சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்காக அபாரமாக விளையாடினார்.

News November 2, 2024

முடி கொட்டுகிறதா? அப்போ இதை பயன்படுத்துங்க…

image

மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கின்ற ஆற்றல் தேயிலை மர எண்ணெய்க்கு உள்ளதாக Drug Design Development & Therapeutics இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட அதில் உள்ள ரிசினோலிக், ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் E உங்களின் முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த எண்ணெய்யை வாரத்திற்கு 2 நாட்கள் தடவி வந்தால் நாளடைவில் முடி நன்கு வளருமென ஆய்வுகள் கூறுகின்றன.

News November 2, 2024

முன்னிலை பெற்றது இந்தியா

image

நியூசி.,க்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 12 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் நிலைத்து ஆடிய கில், பண்ட் இருவரால் மீண்டது. தற்போது 8 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி ஆடிவருகிறது. அஷ்வின் -6 ரன்களுக்கு அவுட் ஆனார். வா.சுந்தர் -22, ஆகாஷ் தீப் களத்தில் உள்ளனர். குறைந்தது 100 ரன்களாவது கூடுதலாக எடுத்தால், வெற்றிபெற வாய்ப்புள்ளது.

News November 2, 2024

ஆங்கிலம் அறிவோம்: Gotcha என்றால் என்ன?

image

ஆங்கில காமிக்ஸ், மீம்ஸ்களில் Gotcha என்ற சொல் இடம்பெறுவதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அமெரிக்க வழக்கில் பயன்படுத்தப்படும் இதற்கு என்னதான் பொருள்? எனக் கேட்பவர்களுக்கான விளக்கம் இதோ: I have got you அல்லது I have caught you என்ற வாக்கியத்திற்கு பதிலாக இந்த சொல்லை நாம் கூறலாம். முக்கியமாக ஒருவர் தவறு இழைக்கும்போது, அதை மற்றவர் கையும் களவுமாக கண்டுபிடித்து பயமுறுத்தும்போது Gotcha என சொல்லலாம்.

News November 2, 2024

நான் செத்துப் பொழச்சவண்டா… ஷாக் கொடுத்த இளைஞர்

image

உ.பி., மாநிலம் மீரட்டில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர், மீரட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கைவிரித்தனர். பின், போஸ் மார்ட்டம் செய்ய மார்ச்சுவரிக்கு அவரது உடலை எடுத்துச் சென்றபோது லேசாக அசைவு தெரிந்தது. விழித்துக்கொண்ட இளைஞர், நான் இன்னும் சாகவில்லை எனக் கூற, இப்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News November 2, 2024

சிஎஸ்கே அணியில் மீண்டும் அஷ்வின்?

image

நீண்டகாலத்துக்கு பின் CSK அணியில் ஒரு தமிழக வீரர் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம், ஐபிஎல் மெகா ஏலத்தில் அனுபவமிக்க ஆல்ரவுண்டரான ஆர்.அஷ்வினை வாங்க CSK திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவர் 2009-15 காலகட்டத்தில் CSK-வில் விளையாடினார். கடந்த ஆண்டுவரை RR அணியில் விளையாடி வந்த அஷ்வினை, RR விடுவித்துள்ள நிலையில், அவரை CSK குறிவைத்துள்ளது. அதேபோல, டேவன் கான்வேயை RTM-ல் வாங்கவும் திட்டமிட்டுள்ளதாம்.

error: Content is protected !!