India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*வெந்நீர் அருந்துவதால்: நாசி அடைப்பு நீங்கும், ஜீரணம் எளிதாகும், மலச்சிக்கல் தீரும், stress குறையும், ரத்தவோட்டம் சீராகும், கொழுப்பு கரையும், உடல் நச்சுகள் நீங்கும்.
*குளிர்ந்த நீர் (ஐஸ் தண்ணீரை தவிர்க்கவும்) அருந்துவதால்: உடல்சூடு, எடை குறையும், சருமம் நலம் பெறும், எனர்ஜி அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*ஒருவரின் உடல்நிலை, காலநிலையை பொறுத்து எதை அருந்துவது என முடிவுசெய்யவும்.
இந்திய ஸ்பின் பவுலிங்கில் சிக்கி நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவருகிறது. நியூசி., அணி இரண்டாவது இன்னிங்ஸில் சற்று முன்பு வரை 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 135 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் 43*, சோதி 1* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 2, அஷ்வின் 2, வாஷிங்டன் சுந்தர் 1, ஆகாஷ் தீப் 1 விக்கெட்டுகளை சாய்த்தனர். நியூசி., 107 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப தலைமுடியை பராமரிப்பது அவசியம். மழைக்காலத்தில் பின்வரும் யோசனைகளை பின்பற்றலாம்: ➤முடிக்கு வண்ணம் பூசுவதை தவிர்க்கவும் ➤எண்ணெய்யை லேசாக சூடேற்றி, முடி வேர்க்கால்களை மசாஜ் செய்யவும் ➤தலைக்கு குளிக்க வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும் ➤ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் பனையூரில் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக மாநாடு, அரசியல் கட்சிகளின் விமர்சனம், சுற்றுப் பயணம் உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசிக்கிறார். விஜய்யை திமுக, விசிக, நாதக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்க திராவிட இயக்கம்தான் காரணம் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். கேரளாவில் மலையாள மனோரமா நடத்தும் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், திராவிட இயக்கம் பகுத்தறிவையும், அறிவியல் கருத்துகளையும் வளர்த்து வருவதாகக் கூறினார். மேலும், தமிழகமும், கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்ததில்லை என்றார்.
➤வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது. ➤எந்த விதமான சூப் செய்தாலும் கொஞ்சம் அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாக வரும். ➤சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் மொறுமொறுப்பாக இருக்கும். ➤வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காயம் கடுகு வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டால், குழம்பின் ருசி கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இந்நிலையில், நாளை (நவ.3) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். NZ-க்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெறும் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேகமாக அரை சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் ஜெய்ஸ்வாலின் (புனேவில் 41 பந்துகளில்) முந்தைய சாதனையை முறியடித்தார்.
சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்கு 2.7 கி.மீ. தூரத்திற்கு ரோப்வே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதிக்கட்ட கூட்டம் நடைபெற்றது. இதில், சபரிமலையில் ரோப்வே திட்டப் பணிகள் 2027 சீசனுக்குள் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. ரோப்வே பணிகளை விரைவில் தொடங்க ஏதுவாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஜய் மீண்டும் திரை பயணத்தை தொடர வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ‘தளபதி 69’ தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். ஆனால், இதே வார்த்தைகளை 2018இல் கமல்ஹாசன் தெரிவித்ததை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், அவர் தொடர்ந்து நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். 2026 தேர்தல் கைக்கொடுக்காத நிலையில், கட்சியை ஆக்டிவ்வாக வைத்திருக்க நடிக்க வேண்டிய சூழல் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.