news

News December 12, 2024

மழைக்காலத்தில் பயணமா?

image

மழைக்காலத்தில் வெளியூர் பயணம் செல்லும் போது உடைகள் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை. கனமான ஆடைகளைவிட மெல்லிய ஆடைகளே பொருத்தமானவை. மழையில் நனைந்தாலோ, துவைத்தாலோ விரைவாக உலர்ந்துவிடும். ஜீன்ஸ் ஆடைகளை மழையில் தவிர்த்தல் நலம். அதன் அசவுகரியம், துவைத்து காய வைப்பதில் சிரமம், ஈரப்பதத்தால் ஏற்படும் துர்நாற்றம் உங்களை சிரமத்துக்கு உள்ளாக்கும். முடிந்தவரை குறைவான எண்ணிக்கையில் உடைகளை எடுத்துச் செல்லுங்கள்.

News December 12, 2024

இந்திய தேர்வு குழுவில் மாற்றம் தேவை: கிரெக் சேப்பல்

image

இந்திய தேர்வு குழுவில் மாற்றம் தேவை என ஆஸி., முன்னாள் வீரர் கிரெக் சேப்பல் தெரிவித்துள்ளார். அவர், ‘சீனியர் வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றாலும் அணியில் விளையாட வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் அணிக்காக அவர்களை நீக்கும் நிலை வந்தால், அவர்களை அணியில் இருந்து நீக்கும் கடினமான முடிவுகளை எடுக்க இந்தியாவுக்கு நல்ல, வலுவான தேர்வுக் கொள்கைகள் மற்றும் தேர்வு குழுக்கள் இருக்க வேண்டும்’ என்றார்.

News December 12, 2024

இன்றைய ஹாட் டாபிக் இவரே: யார் என தெரியுதா?

image

இந்த ‘செல்ஃபி’ தான் இன்று இந்தியாவின் ட்ரெண்டிங். மலையாள தேசத்தில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கில் ரசிகர்களின் ஃபேவரிட் இவரே. பெயரிலேயே புகழை வைத்திருக்கும் இவர், தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டில் தடம் பதிக்க கிளம்பிவிட்டார். ஒரே படத்தில் தன் மகாநடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் வாங்கி வென்று விட்டார். விரைவில் ரிவால்வர் ரீட்டாவாக கலக்கவுள்ள இவரை இன்னுமா தெரியல. கமெண்ட்டில் பாருங்க

News December 12, 2024

BREAKING: மாநிலத்தில் ரெட் அலர்ட்

image

மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 21 செ.மீக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முதலில், 12 முதல் 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டதால், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

News December 12, 2024

இன்னைக்கு ‘லீவு’ எப்படி?

image

மழையின் தீவிரத்தால் மக்கள் அவதிப்படக் கூடாது, உயிர்ச்சேதம் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் தான் வானிலை அறிக்கையின் அடிப்படையில் அரசு விடுமுறை அறிவிக்கிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஆனால், பல நேரங்களில் இந்த லீவு நாள்களில் மழை பெய்வதில்லை. லீவு வேஸ்ட் என்று மக்கள் நினைக்க தொடங்கிவிடுவர். ஆனால், இந்த முறை தான் லீவு விட்டதற்கு ஏற்ப சரியான மழை என்கின்றனர். உங்களுக்கு எப்படி?

News December 12, 2024

பெருமதிப்பிற்குரிய ஐயாவுக்கு வாழ்த்து: சீமான்

image

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி NTK தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில், “திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்து, தகர்த்து தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்தி, திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம், பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினி அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

News December 12, 2024

கனமழையால் வீடு இடிந்து பள்ளி மாணவன் பலி

image

நாகை மாவட்டம் செம்பியன்மாதேவிவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 8ஆம் வகுப்பு மாணவன் கவிழகன்(13) பரிதாபமாக உயிரிழந்தார். வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த, அக்கம் பக்கத்தினர் சிறுவனின் தந்தை, தங்கையை காயங்களுடன் மீட்டனர். அவர்களுக்கு நாகை GHஇல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக நாகையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

தனுஷ் – நயன்தாரா வழக்கில் HC முக்கிய உத்தரவு!

image

₹10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, வரும் 8ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ டாக்குமெண்டரியில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தனுஷ் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக நயன்தாரா சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2024

145 பேரின் உயிரை காத்த விமானி!

image

சென்னையில் இருந்து 145 பேருடன் சிங்கப்பூர் புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் டேங்க்கில் கசிவு ஏற்படுவதை கவனித்த விமானி, விமானத்தை நிறுத்தினார். பின்னர் கசிவு சரி செய்யப்பட்டு மீண்டும் புறப்பட்டது. இந்நிலையில், தக்க நேரத்தில் எரிபொருள் கசிவைக் கண்டுபிடித்து எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

News December 12, 2024

அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட்.. பெண்களே உஷார்!

image

சமீப காலமாக பெண்களை குறிவைத்து ‘<<14856611>>digital arrest<<>>’ அதிகரித்து வருகின்றன. போலீஸ் எனக் கூறி வீடியோ காலில் வரும் கும்பல், சைபர் மோசடியில் உங்களுக்கு தொடர்புள்ளதாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து பணத்தை சுருட்டிவிடும். டெல்லியில், கடந்த வாரம் இன்ஸ்டா பிரபலத்திடம் இதுபோன்று ₹1 லட்சம் திருடப்பட்டது. நேற்று, நொய்டாவில் பெண் ஒருவரிடம் ₹1.40 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு இப்படி நடந்திருக்கா?

error: Content is protected !!