news

News November 2, 2024

புதிய TV சேனலை தொடங்குகிறார் விஜய்?

image

புதிதாக நியூஸ் சேனலை, விஜய் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவுக்கு கலைஞர் டிவி, அதிமுகவுக்கு NewsJ இருக்கிறது. இதைப்போல, தனது கொள்கை மற்றும் கட்சியின் பயணம் குறித்து செய்திகளை வெளியிட, தனியாக ஒரு சேனலை தொடங்க உள்ளாராம். இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்துள்ளார். இதை அக்கட்சியினர் ட்ரெண்டிங் செய்கின்றனர். அந்த TV யின் பெயர் என்னவாக இருக்கும்?

News November 2, 2024

39,481 பணியிடங்கள்.. வெளியான UPDATE

image

BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF, NCBல் காலியாக உள்ள 39,481 GD கான்ஸ்டபிள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கடந்த மாதமே முடிந்தது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை திருத்திக்கொள்ள பணியாளர் தேர்வாணையம் அவகாசம் அளித்துள்ளது. அதன்படி நவ. 5 நள்ளிரவு 12 மணி முதல் நவ.7இரவு 11 மணி வரை திருத்தம் மேற்கொள்ளலாம். அதன்பின் காலக்கெடு நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

அமைச்சர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

image

பாஜக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் ஐந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதால், மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் 70க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி திமுகவினர் வரவேற்றனர்.

News November 2, 2024

சுட்டு கொல்லாமல் விசாரிக்க வேண்டும்

image

ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா அரசை கவிழ்க்க சதி நடப்பதாக Ex CM ஃபரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை சுட்டு கொல்லாமல், அவர்களை பிடித்து பயங்கரவாத செயல்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். புதிய அரசு ஆட்சி அமைத்து சில நாட்களிலேயே தாக்குதல்கள் நடப்பது, அரசை சீர்குலைக்க நடக்கும் சதியா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றார்.

News November 2, 2024

ஐஸ்கிரீம் சுவைகொண்ட நீல நிற வாழைப்பழம்

image

மஞ்சள், பச்சை மற்றும் செவ்வாழை பழங்கள்தான் நாம் அதிகம் விரும்பி உண்ணும் வாழைப்பழமாக இருக்கிறது. ஆனால் வாழைப்பழமும் நீல நிறத்தில் இருக்கும் என்பது பலருக்குத் தெரியாது. புளூஜாவா என அழைக்கப்படும் இந்த வகை வாழைப்பழம், வெண்ணிலா ஐஸ்கிரீம் சுவை கொண்டது. தென்கிழக்கு ஆசியாவில் வளரும் இவை அமெரிக்காவின் ஹவாய் தீவில் பிரபலமாக இருக்கிறது. இந்த வாழைப்பழத்தை நீங்கள் எப்போதாவது சுவைத்தது உண்டா?

News November 2, 2024

ஏழை தமிழக மக்கள் சொத்து வாங்கக் கூடாதா?

image

முத்திரைத்தாள் உயர்வுக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில், 20 வகை பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை குறைந்தபட்சம் ₹20லிருந்து ₹100, ₹200 மற்றும் ₹500 ஆக உயர்த்தியுள்ளீர்களே, இது சாமானிய மக்களின் சொத்து வாங்கும் கனவை சிதைக்கும் வழியல்லவா?. மக்கள் தங்கள் சொந்தக் காசில் தங்களுக்கென்று ஒரு சொத்து வாங்கக் கூடாதா? இதுதான் உங்கள் சமூகநீதியா? என கேள்வி எழுப்பியுள்ளது.

News November 2, 2024

மும்பையில் அஸ்வின்தான் மாஸ்

image

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் (41) வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அஸ்வின். நியூசி.,க்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். அனில் கும்ப்ளே (38), கபில் தேவ் (28), ஹர்பஜன் (24) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 536 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

News November 2, 2024

பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

image

குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை, சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து, கட்டணம் இன்றி பதிவு செய்யலாம். தாமதமானால், ₹200 செலுத்த வேண்டும்.

News November 2, 2024

SHOCKING: குழந்தைகளை கொல்லும் கொடூரர்கள்

image

நேற்று நடந்துள்ள இரண்டு கொடுமையான மரணங்கள் இந்த நாடு எதை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. திருப்பதி வடமலைபேட்டையில் 3 வயது பெண் குழந்தையை பாலியன் வன்கொடுமை செய்து, கொன்று புதைத்திருக்கிறான் 22 வயது இளைஞன். டெல்லியில் பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காத 7 வயது சிறுவனை செங்கல்லால் அடித்துக் கொன்றிருக்கிறான் இன்னொருவன். குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லையா.. என்ன செய்வது?

News November 2, 2024

கால்பந்தில் கலக்கும் தமிழன்

image

இங்கிலாந்து கால்பந்து உலகில் நம்பிக்கை நாயகனாக 18 வயது விமல் யோகநாதன் புகழப்படுகிறார். ஈழத்தமிழர் வாரிசான விமல், தற்போது ‘Barnsley’ கிளப்புக்காக விளையாடுகிறார். அண்மையில் பிரீமியர் லீக்கின் முன்னணி கிளப்பான Manchestor United-க்கு எதிராக இவர் வெளிப்படுத்திய திறமை கவனம் ஈர்த்துள்ளது. ஏற்கெனவே ஆஸி., தேசிய அணியில் நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!