news

News December 12, 2024

இந்து மதம் மீது திமுகவுக்கு தீராத வன்மம்: வானதி

image

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறை கூறியுள்ளார். தமிழகத்தில் 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களை தமிழக அரசால் நியமிக்க முடியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், இந்து மதம் மீது தீராத வன்மம் கொண்ட அரசாக திமுக அரசு உள்ளதாகவும், சட்டமன்ற தேர்தலில் மக்கள், அதற்கு சரியான பதிலடி தருவார்கள் என்றும் சாடியுள்ளார்.

News December 12, 2024

ஷூட்டிங்கில் காயமடைந்த அக்‌ஷய் குமார்

image

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் HOUSEFULL 5 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று நடந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News December 12, 2024

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தீமைகள் என்ன?

image

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்திய ஜனநாயகத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என மாநில & பிராந்திய கட்சிகள் கருத்துகளை முன்வைக்கின்றன. அவை ▶சட்டப்பேரவையை விட மக்களவைக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். ▶நாட்டின் பன்முகத்தன்மை பின்னுக்கு தள்ளப்படும். ▶பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை இல்லாத அளவில் பல கட்டங்களாக தேர்தலை நடத்தவேண்டி வரும். ▶மக்கள்தொகை & சமூக அடிப்படையில் நிர்வாக குளறுபடிகள் ஏற்படும்.

News December 12, 2024

BREAKING: உலக சாம்பியன் ஆனார் குகேஷ்

image

உலக செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இந்திய வீரர் குகேஷ். சிங்கப்பூரில் நடந்த போட்டியில், 14ஆவது சுற்றில் 58ஆவது காய் நகர்த்தலில், நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரேனை குகேஷ் வீழ்த்தினார். 13 சுற்றுகள் முடிவில் இருவரும் 6.5 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், இறுதிச்சுற்றில் அபாரமாக விளையாடி குகேஷ் வென்றார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

News December 12, 2024

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நன்மை என்ன?

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்குமென பாஜக & NDA கூட்டணி கருத்துகளை முன்வைக்கின்றனர். அவை ▶பிரசாரங்களால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும், நேரம் மிச்சமாகும். ▶மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறையும். ▶நிர்வாக சிரமங்கள் குறையும். ▶பிராந்தியவாதம் ஒழிந்து தேசிய உணர்வு அதிகரிக்கும். ▶நலத்திட்டங்கள் இடையூறின்றி தொடரும். ▶வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

News December 12, 2024

‘சாலை விபத்து’ முகத்தை காட்ட முடியவில்லை: கட்கரி

image

சாலை விபத்துகளை குறைக்க முடியாதது, வருத்தத்தை தருவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், சாலை விபத்துகள் தொடர்பாக வெளிநாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்கும்போது, தனது முகத்தை மறைத்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், விதிகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.

News December 12, 2024

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் மறைந்தார்

image

அம்பேத்கரிய இயக்க முன்னோடியும், சமூக செயற்பாட்டாளருமான ஜெய்பீம் சிவராஜ் (75) உடல் நலக்குறைவால் காலமானார். கர்நாடகா வாழ் தமிழரான சிவராஜ், திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் சேவை செய்து வந்தவர். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ததுடன், அவர்கள் அரசு வேலைக்கு செல்வதற்கும் வழிகாட்டியாக இருந்தார்.

News December 12, 2024

போனில் ரீல்ஸ் பார்க்கிறவரா நீங்க? உடனே இத கவனிங்க

image

அதிக ரீல்ஸ் தொடர்ந்து பார்ப்பதால் Brain rot என்ற பாதிப்பு ஏற்படலாம். போன் திரையில் விரலால் தள்ளி தள்ளி ரீல் பார்க்கின்றனர். மூளைக்கு வேலை இல்லாமல், ஏதோ ஒன்றை பார்த்து மகிழ்வதால், மூளைக்கு உடனடி நிறைவு கொடுத்து, அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கிறது. இது அறிவாற்றலை குறைத்து, வேலையில் கவனச் சிதறலை ஏற்படுத்துவதுடன், மனித உணர்ச்சிகளையும் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ரீல்ஸ் பாக்குறத குறைங்க பாஸ்.

News December 12, 2024

கூட்டாட்சியை சிதைக்கும் ‘ONOE’ : ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

image

“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என விமர்சித்த அவர், இந்த தேர்தல் முறை மாநிலத்தின் குரலையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் அழித்துவிடும். மாநில ஆளுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொடுமையான இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

News December 12, 2024

நீதிமன்றத்திலும் அவமானம்: புதிய குற்றச்சாட்டு

image

மனைவி கொடுமையால் <<14842776>>தற்கொலை<<>> செய்த சுபாஷ் விஷயத்தில், நீதிமன்றமும் பொறுப்புடன் செயல்படவில்லை என, அவரது சகோதரர் பிகாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜீவனாம்ச விசாரணையின் போது, மாதம் ரூ.40,000 கேட்ட சுபாஷின் மனைவி, உடனே ரூ.1 லட்சம் கேட்டுள்ளார். முடியாது என அவர் மறுக்க, ‘முடியலனா சாவு’ என்று மனைவி கூறியுள்ளார். இதை கேட்டு நீதிபதியும் சிரித்ததாக கூறும் பிகாஸ், நீதிபதி மீதும் நடவடிக்கை வேண்டும் என்கிறார்.

error: Content is protected !!