news

News November 3, 2024

வரும் 25-ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிச.20 வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றிட மத்திய அரசு தீவிரம் காட்டும் என கூறப்படுகிறது. அதேபோல், தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு, சிறப்பு கூட்டுக்குழு கூட்டமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 3, 2024

Wow: இந்த T-shirt போட்டா கொசு கடிக்காது..!

image

திருப்பூரில் உடல் வெப்பநிலை மாற்றத்தை காட்டும் T-shirt-ஐ சொக்கலிங்கம் என்பவர் அறிமுகம் செய்துள்ளார். செம்பருத்தி, வெங்காய சருகு பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இயற்கையான சாயத்தில் இந்த T-shirt பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை 99°F அடையும் போது டீ-சர்ட்டின் நிறம் மாறும். காய்ச்சல் பாதிப்பை எளிதாக இதனால் கண்டறியலாம். மேலும், கொசு விரட்டியும் பயன்படுத்துவதால், கொசுக்கடியில் இருந்தும் தப்பலாம்.

News November 3, 2024

‘சுழல் 2’ எப்போது ரிலீஸ்?

image

கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்த ‘சுழல்’ வெப்சீரிஸ், அமேசான் பிரைமில் கடந்த 2022ல் வெளியானது. ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் அதிரடி டிவிஸ்ட்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் 2ஆம் பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் அல்லது 2025 ஜனவரியில் ‘சுழல் 2’ வெளியாகும் என கூறப்படுகிறது.

News November 3, 2024

சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருந்து சிக்னல்

image

கடந்த 1 வாரமாக ‘வாயேஜர் 1’ விண்கலத்துடன்
தகவல் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடர்பு புதுப்பிக்கப் பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1977ஆம் ஆண்டு ஏவப்பட்ட இந்த விண்கலம், முதல்முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே சென்றது. அதில் இருந்த 2 ரேடியோக்களில் ஒன்று பழுதான நிலையில், 42 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத மற்றோரு ரேடியோ மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News November 3, 2024

விஜய்யின் ஆணவம்: பொன் ராதாகிருஷ்ணன்

image

ஆட்சியில் பங்கு கொடுப்போம் என விஜய் கூறியது வரவேற்கத்தக்கது என பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். ஆனால் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் களப்பணியாற்ற வேண்டும் எனவும், அதற்கு முன்பாக விஜய் இப்படி கூறுவது ஆணவத்தை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், விஜய் புரிந்து கொள்ள முடியாத வகையில் மாநாடு நடத்தி முடித்திருப்பதாகவும், அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 3, 2024

நவம்பர் 3: வரலாற்றில் இன்று

image

*1618 – முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பிறந்த நாள். *1911 – தமிழ் பயண இலக்கியத்தின் முன்னோடி ஏ.கே.செட்டியார் பிறந்த நாள். *1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். *1988 – மாலத்தீவு அரசைக் கவிழ்க்க தமிழீழ மக்கள் விடுதலைக் கழகப் போராளிகளினால் எடுக்கப்பட்ட முயற்சி, இந்திய ராணுவத்தால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

News November 3, 2024

ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு

image

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக ₹5 லட்சம் காப்பீடு திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் நேர்ந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு தேவசம்போர்டு சார்பில் இந்த காப்பீடு தொகை வழங்கப்படும். பூஜைக்காக வரும் 15ஆம் தேதி 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 20 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News November 3, 2024

சனாதன தர்மத்தை காக்க தனி Wing..!

image

சனாதன தர்மத்தை காக்க ஜனசேனா கட்சியில் ‘நரசிம்ம வராகி பிரிகேட்’ என்ற தனி பிரிவை அக்கட்சி தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திரா, தெலங்கானாவில் சனாதனத்தை பாதுகாக்கும் பணிகளை இந்த பிரிவு செய்யும் என அவர் கூறியுள்ளார். திருப்பதி லட்டு விவகாரத்திற்கு பிறகு இந்து தர்மத்தை பற்றி பவன் தொடர்ந்து பேசிவருகிறார். சனாதனத்தை விமர்சித்த உதயநிதியையும் அவர் விமர்சித்திருந்தார்.

News November 3, 2024

LCU-வில் இணையும் மம்முட்டி?

image

லோகேஷின் LCU-விற்காக எப்போதும் தனது கதவுகள் திறந்தே இருக்கும் என மம்முட்டி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், ‘கூலி’ படத்தில் நடிக்கிறீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு, தன்னை இன்னும் படக்குழு அணுகவில்லை எனவும், எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் எனவும் கூறினார். கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ், பகத் பாசில் LCU-வில் உள்ளனர்.

News November 3, 2024

ஆடம் ஸ்மித் பொன்மொழிகள்

image

*முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உங்களைத்தான். தன்னை அறிந்த ஒரு மனிதன் தன்னை விட்டு வெளியில் வந்து, ஒரு பார்வையாளனைப் போல தனது சொந்த எதிர்வினைகளைப் பார்க்க முடியும். *தனிப்பட்ட இலட்சியம் பொது நன்மைக்கும் உதவுகிறது. *எங்கெல்லாம் அதிக சொத்து இருக்குமோ அங்கெல்லாம் அதிக ஏற்றத்தாழ்வு இருக்கும். *குற்றவாளிகளுக்குக் கருணை காட்டுவது அப்பாவிகளுக்குக் கொடுமைபண்ணுவதாகும்.

error: Content is protected !!