news

News November 3, 2024

கிச்சனில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

image

செல்போனை கழிவறை, கிச்சன் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவர் கிச்சனில் செல்போன் பயன்படுத்தியுள்ளார். அப்போது, அது எதிர்பாராதவிதமாக கொதிக்கும் எண்ணெய்யில் விழுந்ததில் பேட்டரி வெடித்து சிதறியது. இதில் சந்திர பிரகாஷ் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 3, 2024

‘கங்குவா’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி

image

‘கங்குவா’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சி திரையிடப்படும் என ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அதிகாலை காட்சி திரையிட அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 3, 2024

தீபாவளி வின்னர் யாரு?

image

தீபாவளிக்கு வெளியான ‘அமரன்’ திரைப்படம் சொல்லி அடித்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ‘ப்ளடி பெக்கர்’ படத்தை பொறுத்தவரையில் பலருக்கு இப்படம் கனெக்ட் ஆகவில்லை என்கிறார்கள். ஆனால், கவினின் நடிப்பு பாராட்டப்படுகிறது. ‘அமரன்’ படத்தின் ஓவர் ஃப்ளோ ரசிகர்களை ‘பிரதர்’ கவர் செய்வதால் இப்படம் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக, ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு நல்ல ரிவ்யூ கிடைத்துள்ளது.

News November 3, 2024

சஷ்டி: துன்பம் தீர்ப்பான் சோலைமலை முருகன்

image

தமிழ்க்கடவுள் முருகனின் திருவிளையாடல் நடந்த திருத்தலங்களுள் ஒன்று சோலைமலை முருகன் கோயிலாகும். சாதாரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி – ஆவணியில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்தில் உள்ள நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். கொற்றவை மைந்தனுக்கு விரதமிருந்து, இக்கோயிலுக்கு சென்று வணங்கினால் துன்பங்கள் யாவும் தீரும் என்பது ஆன்றோர் வாக்கு.

News November 3, 2024

வங்கதேசத்தை எச்சரித்த அதானி..!

image

வரும் 7ஆம் தேதிக்குள் ₹7,200 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என வங்கதேச அரசுக்கு அதானி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, கடந்த அக்.31-க்குள் நிலுவைத் தொகையை செலுத்த, அந்நாட்டு மின் மேம்பாட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் வங்கதேச அரசு தொகையை செலுத்த தவறியதால், அதானி நிறுவனம் கரன்ட் சப்ளையை பாதியாக குறைத்தது.

News November 3, 2024

நெல்லிக்காயில் இத்தனை பலன்களா?

image

உடலில் உள்ள கழிவுகளை நீக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நெல்லிக்காய் உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காலையில் நெல்லிக்காய் சாறு பருகும்போது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, சருமத்தை பளபளப்பாக்கும். அதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தலைமுடி ஆரோக்கியம் மேம்படும், மன அழுத்தம் குறையும், செரிமானம் அதிகரிக்கும் என்கிறார்கள்.

News November 3, 2024

விஜய்க்கு பாஜக ஆதரவு?

image

திமுகவுக்கு எதிராக அரசியல் செய்வதால் தவெகவை ஆதரிக்க வேண்டும் என பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுகவை ஒழிக்கும் அதேநேரத்தில் அதிமுகவையும் கலைத்துவிட வேண்டும். அதனால், விஜய் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தாலும், பாஜக மூத்தத் தலைவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது எனவும் டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News November 3, 2024

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

image

அருந்ததியர்களுக்கான 3% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி, வரும் 7ஆம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடத்தப் போவதாக கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். பட்டியல் பிரிவில் 15%-க்கும் மேல் தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிட சமூக மக்கள் இருப்பதாகவும், 3%-க்கும் குறைவாக உள்ள அருந்ததியர்களுக்கு ஒட்டுமொத்த 18% தாரைவார்ப்பதா எனவும் கேள்வி அவர் எழுப்பியுள்ளார்.

News November 3, 2024

Tesla-வை ஓரம் கட்டிய BYD.. டாப் கியரில் சீன கம்பெனி

image

எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் சீன நிறுவனமான BYD, அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவை விட அதிக வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த July – Sept மாதங்களில் டெஸ்லா $25.2 பில்லியன் வருவாய் ஈட்டிய நிலையில், BYD $28.2 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இருப்பினும், உலகளவில் அதிக EV விற்பனையில் டெஸ்லாவே முன்னிலையில் உள்ளது. சீன அரசின் மானியக் கொள்கைகளால் BYD அசுர வளர்ச்சியடைந்துள்ளது.

News November 3, 2024

10 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!