news

News December 13, 2024

இந்தியாவின் வளர்ச்சி விகித கணிப்பு.. குறைத்தது ADB

image

2025 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7%ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி முன்பு கணித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த வளர்ச்சி விகித கணிப்பை 6.5%ஆக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. இதேபோல், 2026 நிதியாண்டுக்கான கணிப்பையும் 7.2%இல் இருந்து 7%ஆக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. தனியார் முதலீடு குறைந்தது உள்ளிட்டவையே காரணமாகக் கூறப்படுகிறது.

News December 13, 2024

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாண்டேவாடா, நாராயண்பூர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இங்கு 38 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

News December 13, 2024

BREAKING: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

4 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக மாணவர்கள் நலன்கருதி நேற்று பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதையடுத்து, விழுப்புரம், தூத்துக்குடி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

News December 13, 2024

சவுதி அரேபிய அமைச்சகத்தில் டாக்டர்களுக்கு வேலைவாய்ப்பு

image

சவுதி அரேபிய அமைச்சகத்தில் டாக்டர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ முதுகலை பட்டம் பெற்ற, 55 வயதுக்கு மிகாத, 3 வருட அனுபவம் கொண்டோரிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தங்குமிடம், விமான டிக்கெட், உணவுப்படியை வேலையளிப்போர் அளிப்பார்கள். வேலைக்கு <>https://omcmanpower.tn.gov.in/ <<>>இல் பதிவிடலாம்.

News December 13, 2024

அல்லு அர்ஜூனுடன் பிரச்னையா? சித்தார்த் பதில்

image

பாட்னாவில் நடந்த அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த சித்தார்த், கட்டிட வேலைக்கு ஜேசிபியை நிறுத்தினாலும் கூட்டம் கூடும் எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அல்லு அர்ஜூனுடன் பிரச்னையா என கேட்கப்பட்டது. இதற்கு அவர், அல்லுவுடன் எந்த பிரச்சினையும் இல்லை. ‘புஷ்பா 2’ பெரிய வெற்றி படம். அவருக்கு வாழ்த்துகள் என்றார்.

News December 13, 2024

விமான நிலையங்களில் விரைவில் 5ஜி சேவை

image

விமான நிலையங்களில் 5ஜி சேவையை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 5ஜி பயன்பாட்டால் விமான இயக்கம் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டதால் அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. இந்நிலையில், பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் விரைவில் விமான நிலையங்களில் 5ஜி அறிமுகமாகும். இதன்மூலம் விமான பயணிகள் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

News December 13, 2024

இந்தியாவின் ஒரே இலவச ரயில்.. எந்த ரயில் தெரியுமா?

image

ரயில் பயணத்திற்கு கட்டணம் செலுத்துவது அவசியமாகும். ஆனால் ஒரேயொரு ரயிலில் மட்டும் இலவசமாக செல்ல முடியும். அது எந்த ரயில்? அந்த ரயில் எங்கு இயக்கப்படுகிறது? எனத் தெரிய வேண்டுமா? இமாச்சலப் பிரதேச மாநிலம் பக்ரா-பஞ்சாப்பின் நங்கல் இடையே இயக்கப்படும் ரயில்தான் அந்த ரயிலாகும். 1963இல் அணை கட்ட பொருள் கொண்டு செல்ல அந்த ரயில் முதன்முதலில் விடப்பட்டது. தற்போதும் 3 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படுகிறது.

News December 13, 2024

GMAIL பயனர்கள்: USA-வை விஞ்சியது இந்தியா

image

உலக வல்லரசான அமெரிக்காவை ஒருதுறையில் இந்தியா விஞ்சியுள்ளது. எதில் எனத் தெரிய வேண்டுமா? மாதாந்திர GMAIL பயனர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா விஞ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் ஜிமெயில் மின்னஞ்சலை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அதில் 1 கோடி பேர், கட்டண திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் என்ன மின்னஞ்சல் பயன்படுத்துகிறீர்கள்? கீழே பதிவிடுங்கள்.

News December 13, 2024

காலை 7 மணி வரை 16 மாவட்டங்களில் கன மழை

image

காலை 7 மணி வரை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என MET தெரிவித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News December 13, 2024

ஆடுகளம் நாயகியின் அசத்தல் கிளிக்ஸ்

image

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்சி. இதையடுத்து, முனி, வந்தான் வென்றான் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தார். தற்போது அவர் ஹிந்தி படங்களிலும், விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுபோல பரபரப்பான சூழலுக்கு இடையே தன்னை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து அவர் வெளியிட்டுள்ளார். மாடல் உடையில் கலக்கலாக அதில் டாப்சி காட்சியளிக்கிறார். அந்த படங்களை மேலே கிளிக் செய்து பாருங்கள்.

error: Content is protected !!