news

News December 13, 2024

நண்பனுக்கு தோள் கொடுத்த சச்சின்!

image

ஓய்வூதியம் ரூ.30,000த்தில் தான் காலத்தை கடத்தி வருவதாக வினோத் காம்ப்ளி கூறியுள்ளார். பேட்டி ஒன்றில், “ சிறுநீரக கோளாறால் அவதியடைந்து வரும் என்னை, என் குடும்பம் தான் பார்த்துக் கொள்கிறது. சச்சினும் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு அறுவை சிகிச்சைகளில் உதவியிருக்கிறார் என்ற அவர், கபில்தேவ் கூறியபடி மறுவாழ்வு மையத்திற்கு செல்ல தயாராக உள்ளேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம்

image

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருக்கிறார் CM ஸ்டாலின். மேலும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவோருக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ₹50 ஆயிரமும் வழங்க ஆணையிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

News December 13, 2024

கீர்த்தி சுரேஷ் திருமணத்தின் கமகமக்கும் விருந்து பட்டியல்

image

கீர்த்தி சுரேஷ் நேற்று அவரது நீண்ட நாள் காதலர் ஆன்டனியை கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இதில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, ஜெகதீஷ் பழனிசாமி போன்றோர் கலந்து கொண்டார். விருந்தினர்களுக்கு கேரள முறைப்படி விருந்து பரிமாறப்பட்டுள்ளது. அதில், லெமன் சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புளிசாதம், கூட்டு – பொரியல், கத்திரிக்காய், நேந்திரம் சிப்ஸ், சுவீட், பாயசம், ஒரு வாழைப்பழம் பரிமாறப்பட்டுள்ளது.

News December 13, 2024

மீண்டும் மிரட்ட வரும் ‘காற்றழுத்த தாழ்வுப் பகுதி’

image

நாளை வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. 10 நாள்களுக்கு முன் ஃபெஞ்சல் புயல் டெல்டாவையும் வட மாவட்டங்களையும் புரட்டிப் போட்டு சென்றது. நேற்று பெய்த கனமழையால் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன. இந்நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்ற செய்தி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

News December 13, 2024

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று காலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. இதன் தாக்கத்தால் நேற்று தமிழகத்தின் தென் பகுதிகள் மிக கனமழையை எதிர்கொண்டன. தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.

News December 13, 2024

தங்கள் ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி

image

பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, தனக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

News December 13, 2024

பெண் குழந்தைகள் நலத்திட்டம்: வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

image

பெண் குழந்தைகள், பெண்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

News December 13, 2024

IND-AUS 3 TEST: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

image

இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் 3வது போட்டிக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ஹேசில்வுட் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி: கவாஜா, மெக்ஸ்வீனி, லாபுசாக்னே, ஸ்மித், ஹெட், மார்ஷ், கேரி, கம்மின்ஸ் (C), ஸ்டார்க், லியோன், ஹேசல்வுட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

News December 13, 2024

மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,000ஆக உயர்வு

image

கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும், கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும். இதற்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால், அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,000ஆக விற்பனையாகிறது. இதேபோல், சாமந்தி, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

News December 13, 2024

‘கூலி’ படத்தில் சந்தீப் கிஷன்

image

‘கூலி’ படத்தில் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் வகையில், ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சந்தீப் கிஷன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். லோகேஷின் முதல் படமான ‘மாநகரம்’ படத்தில் அவர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில், நட்பு ரீதியில் ‘கூலி’ படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!