news

News December 13, 2024

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்: OPS

image

தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடப்பதாக, ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுக்கு 100 நாள்கள் மேல் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டிய அவர், இந்த வாக்குறுதியில் கூட திமுக இரட்டை வேடம் போடுவது அலங்கோலத்தின் உச்சகட்டம் என கடுமையாக சாடியுள்ளார்.

News December 13, 2024

ரசிகர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்

image

<<13419595>>ரசிகரின் கொலை வழக்கில்<<>> நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவருடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது தோழி பவித்ரா கவுடா மற்றும் 5 முக்கிய குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரேணுகா சுவாமியின் கொலை வழக்கில் தர்ஷன் மற்றும் 6 பேர் கடந்த ஜூன் 11ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 13, 2024

LIVE VIDEO: கார்த்திகை மகா தீபம்

image

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தை காண வரும் மக்களை பாதுகாக்க காவல்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, தீபத்தை காண வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க அவர்கள் கையில், பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டுள்ளது. தீபத்தை காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 13, 2024

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை

image

26 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ( மாலை 4) மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News December 13, 2024

சீயானை இயக்கும் ‘மண்டேலா’ இயக்குநர்

image

நடிகர் சீயான் விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. மண்டேலா, மாவீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மடோன் அஸ்வினுடன் அவர் இணைய உள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. போஸ்டரில் செம ஸ்டைலில் இருக்கிறார் விக்ரம். மேலும் படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

₹1 கோடியை சிம்புவுக்கு தர வேண்டும்: உயர்நீதிமன்றம்

image

நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ₹1 கோடியை வட்டியுடன் ₹1.04 கோடியாக திரும்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘கொரோனா குமார்’ படம் தொடர்பாக சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்தது. வழக்கை திரும்ப பெற்றதால் டெபாசிட் செய்த தொகையை திரும்பி தருமாறு சிம்பு தரப்பில் விடுத்த கோரிக்கையை அடுத்து ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

செல்வராகவன் பட போஸ்டரை வெளியிடும் தனுஷ்

image

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ திரைப்படங்களுக்கு பிறகு, செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுவார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வண்ணத்துப்பூச்சி, கண்ணாடி உடன் கூடிய போஸ்டர் நேற்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது.

News December 13, 2024

மக்களவையில் பிரியங்கா கன்னிப் பேச்சு

image

அரசியலமைப்பு மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார். மக்களவையில் தனது கன்னிப் பேச்சை தொடங்கிய அவர், உ.பி.யின் சம்பால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை குறிப்பிட்டு பேசினார். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தையல் தொழிலாளியின் குழந்தைகள் தன்னை சந்தித்ததாகவும், அதில் 17 வயதான சிறுவன் தந்தையின் கனவுபடி டாக்டர் ஆவேன் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.

News December 13, 2024

16ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை

image

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை குறைந்திருக்கும் என்றும் 16ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை தொடங்கும் என்றும் MET தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 17ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் மேல்முறையீடு

image

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்புலட்சுமியின் பேரன் மேல்முறையீடு செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!