India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அன்னதானம் செய்வதால், கல்வி, வேலை, அரசியல், பதவி, திருமணம், வழக்கு, குடும்பப் பிரச்னைகள் போன்றவை நீங்கி மேன்மையும், சுபமும் உண்டாகும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. அதேபோல, தொழிலில் சுணக்கம், வயிறு, தோல் நோயால் வாடுவோர், அன்ன வேஷத்தால் சரியாக சாப்பிட முடியாதவர்கள் நிவர்த்தி பெற தி.மலையில் அன்னதானம் செய்வது வழக்கமாக உள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற குகேஷுக்கு நடிகர்கள் தனுஷ் மற்றும் SK வாழ்த்து தெரிவித்தனர். தனுஷ், ” குகேஷ் இளம் வயது உலக செஸ் சாம்பியனானது இந்தியாவிற்கும், சென்னைக்கும் நம்பமுடியாத பெருமையான தருணம். வாழ்த்துகள், இந்த சாதனையின் மூலம் எங்கள் அனைவருக்கும் ஊக்கம் அளித்து பெருமை சேர்த்துள்ளீர்கள்” என்றார். அதைப்போல SKவும், ”வாழ்த்துகள் குகேஷ். நீங்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு inspiration” என்றார்.
கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலை மகா தீபத்துக்கே முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் அர்த்தநாரீஸ்வரர்களாக ஆனந்த தாண்டவம் ஆடி 6 மணிக்கு காட்சி தருவார்கள். அதன்பின் 6.05 மணிக்குள் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். அதன்பின் வீட்டில் விளக்கு ஏற்றி அண்ணாமலையாரை வழிபடலாம்.
தொல்காப்பியர் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் கார்த்திகை கொண்டாட்டம் நீடித்து வருகிறது. சங்க காலத்தில் இருந்தே கார்த்திகை நாளில் தீபமேற்றுவது தமிழர்களின் மரபாக உள்ளது. அகநானூறு, நற்றிணையில் கார்த்திகை தீபம் தொடர்பான குறிப்பு இருக்கிறது. திருஞானசம்பந்தர் பூம்பாவைப் பதிகத்தில் கார்த்திகை தீபத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். பழமொழி நானூறில் வரும் குன்றின் மேலிட்ட விளக்கு என்பதும் இதையே குறிக்கிறது.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதில் தனக்கு தொடர்பில்லை என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் சட்டமும், போலீசும் அதன் கடமையை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டியின் பெயர் நினைவில்லாமல், வெறும் CM என அல்லு அர்ஜுன் கூறியதால் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நாம்பள்ளி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அல்லு அர்ஜூன், கடந்த 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியை காண சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை நிராகரித்த கோர்ட், சஞ்சலக்குடா சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் நிவாரணம் பல இடங்களில் பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாகச் செய்யாததால் டெல்டாவில் பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு அரசு, தங்குமிடம், உணவு வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை ₹1000 நாளை மறுநாள் (டிச.15) தகுதியான அனைத்து பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. கடந்த மாதம் வரை 1.15 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 1.14 கோடி பேருக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. அதிக வருமானம், அரசு பணிகள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 1.27 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடப்பதாக, ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுக்கு 100 நாள்கள் மேல் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டிய அவர், இந்த வாக்குறுதியில் கூட திமுக இரட்டை வேடம் போடுவது அலங்கோலத்தின் உச்சகட்டம் என கடுமையாக சாடியுள்ளார்.
<<13419595>>ரசிகரின் கொலை வழக்கில்<<>> நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவருடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது தோழி பவித்ரா கவுடா மற்றும் 5 முக்கிய குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரேணுகா சுவாமியின் கொலை வழக்கில் தர்ஷன் மற்றும் 6 பேர் கடந்த ஜூன் 11ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.