news

News November 3, 2024

Health Tips: இதயநோயாளிகள் வேகமாக நடக்கலாமா?

image

இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளவர்கள் வேகமாக வாக்கிங், டிரெட்மில்லில் நடப்பது போன்றவற்றை செய்யலாமா? என பலருக்கு கேள்வி எழலாம். மிதமான வேகத்தில் தவறில்லை. ஆனால், உடலை வருத்திக்கொண்டு நடக்கக் கூடாது. இதயம் பலவீனமான நோயாளிகள் வேகமாக நடக்கும்போது ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும். ரத்த ஓட்டம் வேகமெடுக்கும்போது, பம்பிங் செயல்பாடுகளில் பிரச்னை ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

News November 3, 2024

பயப்படுறியா குமாரு.. விஜய்யை சுற்றும் ஒற்றை கேள்வி

image

தவெக மாநாட்டில் திமுகவின் பெயரை குறிப்பிடாமல் ஊழல் கட்சி, குடும்பக் கட்சி என விஜய் விமர்சித்திருந்தார். இந்நிலையில், இன்றைய செயற்குழுக் கூட்டத்தில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக ஏமாற்றுவதாக தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாஜக என்ற பெயர் எந்தவொரு தீர்மானத்திலும் இடம்பெறவில்லை. திமுகவை எதிர்க்க துணிந்த விஜய்யால், பாஜக பெயரை கூட சொல்ல தயங்குவது ஏன் என பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

News November 3, 2024

ஒரே டெஸ்ட்..நியூசிலாந்தின் பல சாதனைகள்

image

* 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய முதல் அணி * 1998 முதல் இந்தியாவில் 19 டெஸ்டில் விளையாடி பெறாத வெற்றியை 18 நாட்களில் பெற்றுள்ளது * 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய அணி (முன்னர் இங்கிலாந்து 2012’இல்) * இந்தியாவில் இந்தியாவை ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு குறைவாக சுருட்டிய முதல் அணி(பெங்களூருவில் 46 ஆல் அவுட்)

News November 3, 2024

சிகரெட் பழக்கத்தை கைவிட்ட ஷாருக்கான்!

image

இந்திய நடிகர்களிலேயே பலருக்கு சிகரெட் பழக்கம் இருந்தாலும், Chain Smokers சிலர் மட்டுமே. அவர்களில் ஒருவர்தான் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான். நாளொன்றுக்கு 100 சிகரெட்டுகளை அடிப்பதாக அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். இந்நிலையில், நேற்று (நவ.2) தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடிய ஷாருக்கான், சிகரெட் பழக்கத்தை கைவிட்டுவிட்டதாக அதிரடியாக அறிவித்தார். அவரு விட்டுட்டுாரு.. நீங்க எப்படி ரசிகாஸ்..

News November 3, 2024

Apply Now: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

image

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நவ.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: PhD, UGC NET தேர்ச்சி. சம்பளம்: 7ஆவது ஊதிய கமிஷன் விதிப்படி. விண்ணப்பக் கட்டணம்: ₹750. தேர்வு முறை: நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு. கூடுதல் தகவலுக்கு இந்த <>CUTN<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News November 3, 2024

கனடாவுக்கு கட்டம் சரியில்லை

image

இந்திய அரசை ‘சைபர் எதிரி’யாக அறிவித்துள்ளது கனடா அரசு. காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரடியாக தொடர்புபடுத்திய கனடா, இப்போது தன் நெட்வொர்க்குகளுக்குள் ஊடுருவி உளவு பார்க்கும் சைபர் எதிரிகள் வரிசையில், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகியவற்றுடன் 5-வதாக இந்தியாவையும் சேர்த்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகளை கனடாவும் அமெரிக்காவும் ஆதரிப்பது ஏன்?

News November 3, 2024

தினசரி செலவு ரூ.10 மட்டுமே: ஜியோவின் புதிய பிளான்

image

அண்மைக்காலமாக அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் BSNL-ஐ சமாளிக்க 2 புதிய பிளான்களை JIO அறிமுகம் செய்துள்ளது. 1) Plan ₹899: தினசரி 2GB ஹைஸ்பீட் data + 5G unlimited + தினசரி 100 free SMS + 90 நாள் வேலிடிட்டி 2) . 2) Plan ₹999: தினசரி 2GB high-speed data + 5G unlimited + தினசரி 100 free SMS + 98 நாள் வேலிடிட்டி. இரண்டிலும் free national roaming, JioTV, JioCinema & JioCloud சேவைகள் உண்டு.

News November 3, 2024

அலைமோதும் கூட்டம்.. தெறிக்கவிடுமா டிராஃபிக்?

image

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், சென்னைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதுகிறது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளன. இது ஒருபுறமிருக்க டிராஃபிக் குறித்த அச்சமும் வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டுங்கோ. இந்த தகவலை ஷேர் பண்ணுங்கோ.

News November 3, 2024

பிறந்த மண்ணில் அசத்திய அஜாஸ் படேல்!

image

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மும்பையில் பிறந்து நியூசிலாந்தில் குடியேறியவராவார். தான் பிறந்த மண்ணிலேயே சிறப்பாக விளையாடி மேன் ஆப் தி மேட்ச் விருதும் வாங்கியுள்ளார். பிறந்த மண்ணில் சிறப்பாக ஆடியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

News November 3, 2024

அதிகம் குளிர்பானம் அருந்துபவர்கள் கவனத்திற்கு

image

குளிர்பானங்களை அதிகம் குடித்தால், எலும்புகள் பலவீனம் அடைந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையை பெண்கள் அதிகமாக எதிர்கொள்வதாக தெரிகிறது. குளிர்பானங்களில் உள்ள காஃபின், உடலில் கால்சியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் காரணமாக எலும்புகளில் முறிவு ஏற்படுகிறது. எனவே குளிர்பானங்களை அதிகமாக குடிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!