news

News November 3, 2024

IPL: RCB கேப்டன் கோலி இல்லையா?

image

RCB கேப்டனாக கோலி பொறுப்பேற்பார் என கூறப்பட்ட நிலையில், ​​அந்த அணியின் நிர்வாக இயக்குநர் கேப்டன் பொறுப்பு குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். ‘கேப்டன் பதவி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு இன்னும் சில தேர்வுகள் உள்ளது. கடந்த ஆண்டு டூப்ளசிஸ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ஏலத்தில் நல்ல முடிவுகளை எடுப்போம்’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News November 3, 2024

விஜய்யுடன் கூட்டணி.. சூசகமாக சொன்னாரா ராமதாஸ்?

image

பாமக நிறுவனர் ராமதாஸ், தன் X பக்கத்தில், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” எனப் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து பலரும் இது கூட்டணி கணக்கு என்றே கூறுகின்றனர். பழைய கூட்டணியை விடுத்து புதிய கூட்டணியில், அதாவது விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் கணக்கு என்றே கமெண்ட் செய்கின்றனர். ஆனால், ராமதாஸ் விளக்கம் ஏதும் தரவில்லை. ராமதாஸ் எதைப் பற்றி சொல்லி இருப்பார்? உங்கள் யூகம் என்ன?

News November 3, 2024

விஜய்யின் புதிய டிவி சேனலின் பெயர் இதுதானா..

image

தவெக தலைவர் விஜய், புதிய தொலைக்காட்சி சேனலை கொண்டு வரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக கட்சியினருடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், தனது சேனலில் பணிபுரிவதற்காக பெரிய தொலைக்காட்சிகளில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களிடமும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சேனலுக்கு ‘தமிழ் ஒளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News November 3, 2024

ஆங்கிலம் அறிவோம்: Nightmare என்றால் என்ன?

image

Nightmare என்பது மிகுந்த அச்சத்தையும் திகிலையும் அடையச் செய்கின்ற கனவைக் குறிக்கும். Nightmare-லிருந்து விழித்துக்கொண்ட சிறிது நேரத்துக்காவது நமக்கு படபடப்பு குறையாது, பதற்றம் அகலாது. ஆசை நிறைவேறாமல் உயிரிழந்த பெண்ணின் தீய ஆவியே Nightmare-ஐ ஏற்படுத்துவதாக கிரேக்க இலக்கியங்கள் சொல்கின்றன. இதற்கு சமமான சொற்களாக Bad Dream, Torment (கோரக்கனவு, கொடுங்கனவு) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

News November 3, 2024

இந்தியாவின் கச்சா எண்ணை இறக்குமதி குறைவு

image

ரஷ்யா, சவுதி, UAE, USA போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் அளவு குறைந்துள்ளது. இது தொடர்பாக நிபுணர்கள் கூறும்போது, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதால் இறக்குமதி குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், வரும் நாள்களில் கச்சா எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News November 3, 2024

தமிழ் அறிவோம்: திருக்குறள் குறித்து அரிய தகவல்

image

➤திருக்குறளில் தமிழ், கடவுள் என்னும் சொற்கள் பயன்படுத்தப்படவில்லை. ➤ஒரே திருக்குறளில் ஆறுமுறை வந்துள்ள சொல் – பற்று. ➤இரு மரங்கள் (பனை, மூங்கில்), இரு மலர்கள் (அனிச்சம், குவளை), ஒரே விதை (குன்றிமணி) இடம்பெற்றுள்ளன. ➤247 தமிழ் எழுத்துகளில் 37 எழுத்துகள் இடம்பெறவில்லை. ➤சீனம் உள்ளிட்ட 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ➤திருக்குறளில் மொத்த 14,000 சொற்களும், 42,194 எழுத்துகளும் உள்ளன.

News November 3, 2024

புத்தகம் பேசுகிறது: மணிப்பூர் கலவரமும் பின்னணியும்

image

மணிப்பூர் கலவரத்தின் பின்னணியை அம்மாநிலத்தின் கடந்த கால வரலாற்றோடு இணைத்து இந்நூல் பதிவு செய்துள்ளது. இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை நூலின் ஆசிரியர் விதூஷ் முழுமையாக ஆராய்ந்துள்ளார். மெய்தி & கூகி பழங்குடிகளிடையே நடந்த ஆயுத மோதல், வன்முறைகள், இந்திய அரசின் பங்கு, பொருளாதார இழப்புகள் என கலவரச் சூழலை நிரல்பட விளக்குகிறது. மணிப்பூரின் கள நிலவரத்தை ஆழமாகவும் விரிவாகவும் பேசுகிறது.

News November 3, 2024

டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை: ரோஹித்

image

NZ-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தான் சிறப்பாக செயல்படவில்லை என்று ரோஹித் ஷர்மா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விடவும் ரிஷப் பண்ட், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்ததாகக் கூறிய அவர், இலக்கை சேஸ் செய்யும்போது, விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டுமென நினைத்ததை IND அணியால் சரியாக செயல்படுத்த முடியவில்லை என்றார்.

News November 3, 2024

வாரிசு அரசியலுக்கு 2026இல் முற்றுப்புள்ளி: EPS

image

2026 சட்டமன்றத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என இபிஎஸ் கூறியுள்ளார். சேலத்தில் அதிமுகவினருடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே, 2.5 ஆண்டுகள் கழித்து மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கியதாகவும் அவர் விமர்சித்தார்.

News November 3, 2024

தொடர் தோல்வி…இது தான் கம்பீர் Era’வா?

image

நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்த நிலையில், கடும் விமர்சனத்தை பெற்று வருகிறார் அணியின் பயிற்சியாளர் கம்பீர். அவர் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் (2-0) என்ற கணக்கிலும், தற்போது நியூசிலாந்து (3-0) எதிராகவும் தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவில் டெஸ்ட் தொடரை இழந்த கேப்டன்களாக சச்சின் (vs SA ,2000) தற்போது ரோகித் (vs NZ, 2024) ஆகியோர் இருக்கிறார்கள்.

error: Content is protected !!