news

News November 3, 2024

இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்

image

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்யவேண்டியது கட்டாயம் என இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார். டெஸ்ட் தொடரில் 0-3 என தோற்றது ஏற்றுக்கொள்ள முடியாதுதான். அதே நேரம், போதிய பயிற்சி இல்லையா? சரியாக ஆடவில்லையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், கில், பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

பிச்சைக்காரருக்கு காண்டம்ஸ் கொடுத்த டாக்டர்

image

தீபாவளி நாளில் பிச்சைக்கார பெண்ணுக்கு ஆணுறை அளித்த டாக்டரின் செயல் விவாதமாக மாறியுள்ளது. பண்டிகை நாளில் பொதுவாக பிச்சைக்காரர்களுக்கு நல்ல உணவோ, பணமோ அல்லது புத்தாடையோ கொடுப்பதுண்டு. ஆனால், இந்த டாக்டர் ஆணுறையை கொடுத்தது மட்டுமல்லாமல், ‘சாலையோர பிச்சைக்காரர்களுக்கு உதவும் சரியான வழி’ என்று குறிப்பிட்டு வீடியோவாகவும் பதிவிட்டார். எதிர்ப்பு எழவே, இப்போது நீக்கப்பட்டுள்ளது. உங்க கருத்து?

News November 3, 2024

ஒரு மதுக்கடை கூட இருக்கக் கூடாது: கர்ஜித்த விஜய்

image

மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என ஒருபுறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மதுக்கடைகள் மூலம் வருவாய் பெருக்குவது ஏற்புடையதல்ல என தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுக்கடை மூலம் பெறும் வருவாயைவிட, கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுத் திட்டத்தை செயல்படுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News November 3, 2024

இந்த பொருட்களின் விலை சர்ர்னு உயரப் போகுது..!

image

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு, உணவு பணவீக்கத்தின் காரணமாக பாக்கெட்டுகளில் தினசரி பொருட்களை விற்கும் நிறுவனங்கள் (FMCG) கடும் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன. இதனால் சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஷாம்பு, டீ தூள், காபி தூள், பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரப் போகிறது.

News November 3, 2024

திருமணத்தை மீறிய உறவு… முக்கிய காரணங்கள்

image

திருமண உறவை மீறி, இன்னொருவருடன் உறவு ஏற்பட இவையே முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்: *இளம்வயதில் திருமணம் *விருப்பமில்லாத திருமணங்கள் *உடல்ரீதியான திருப்தியின்மை (60%) *உணர்வுரீதியாக தம்பதியினர் ஒன்றாதது *வாழ்க்கையில் எது முக்கியம் என்பதில் மாறுபாடு *பொதுவான ஆர்வங்கள் இல்லாதது *த்ரில் விரும்பும் மனநிலை *புறக்கணிப்பு(அ) அங்கீகரிக்கப்படாத உணர்வு *குழந்தை வளர்ப்பின் சிரமம். வேறு காரணங்கள்?

News November 3, 2024

இரவில் என்ன சாப்பிடலாம்?

image

குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். *இரவில் தயிர் சாப்பிடுவதை தவிருங்கள். பதிலாக மோர் குடிக்கலாம். *அளவோடு சாப்பிடுங்கள். அதிக உணவு வேண்டாம். *பருப்பு, பச்சை காய்கறிகள் போன்ற புரத உணவு சாப்பிடலாம். *இஞ்சி சேர்த்த பாலை குடிக்கலாம். *அதிக உப்பு உணவை எடுக்க வேண்டாம்.

News November 3, 2024

நிதியுதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

image

கேரளாவில் பாலக்காடு அருகே நேற்று எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராமல் மோதி ஏற்பட்ட விபத்தில், ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News November 3, 2024

தொகுதியை முடிவு செய்த விஜய்?

image

சென்னை பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் போது, தங்கள் தொகுதியில் தான் விஜய் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. விஜய் போட்டியிடும் தொகுதி நிச்சயமாக கவனத்தை பெறும் . விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம்..நீங்க சொல்லுங்க?

News November 3, 2024

மகளிருக்கு மாதம் ₹2,100; ₹500க்கு சிலிண்டர்

image

ஜார்க்கண்டில் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதம் ₹2,100 வழங்கப்படும் என BJP தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. இங்கு சட்டமன்ற தேர்தல் நவ.13, 20 தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கவுள்ளது. ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர், ₹500க்கு சிலிண்டர், 5 லட்சம் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு உள்பட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது. எந்த கட்சிக்கும் இப்போது இலவசம் ஒரு பிரச்சனையே இல்லை. சரி தானே?

News November 3, 2024

CSK பயிற்சியாளராகிறாரா ஸ்டெய்ன்?

image

CSK அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக SA ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்வில் எப்போதுமே தோனியின் ரசிகராக இருந்ததை நினைவுகூர்ந்த அவர், CSK அணியின் பெஞ்சில் அமர்ந்து, அணியை தோனி எப்படி வழிநடத்துகிறார், அவரது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். CSK அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஸ்டெய்ன் பொருத்தமானவரா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!