India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்த எந்த ஒரு விஷயத்திலும் தலையிட ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என நேற்று நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலில் திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர். அடுத்து தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சர்ச்சையைக் கிளப்பியதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மலையாள சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் (38), நடிகர் கிரிஸை (49) 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். பணத்திற்காக முதியவரை திருமணம் செய்ததாக பலர் கமெண்ட் செய்த நிலையில், தான் யாரை கல்யாணம் செய்தால் உங்களுக்கு என்ன என திவ்யா கேள்வி எழுப்பியுள்ளார். செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையா எனவும், தனது 2 மகள்களிடம் சம்மதம் பெற்ற பின்பே திருமணம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று (நவ.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (நவ.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம், 3 நாளில் ₹100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த ராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது அமரன் படம். இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களை வெகுவாக கவர்ந்ததுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. தீபாவளி ரேஸில் ரிலீஸான படங்களில் உங்களை கவர்ந்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
மின்சாரம், பால் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என பல்வேறு சுமைகளை மக்கள் மீது செலுத்துவதாக, திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதேபோல, அமைதிப் பூங்காவான தமிழகத்தில், நாள்தோறும் பட்டப்பகலில் குற்றச்சம்பவங்கள் அரங்கேறுவதாகவும், இதனை தடுக்காமல் அதிகாரத்தில் இருக்கும் சிலருக்காக திமுக அரசு செயல்படுவதை கண்டிப்பதாகவும் தவெக தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.
➤மேஷம் – ஆர்வம் அதிகரிக்கும்
➤ரிஷபம் – பணிவு கூடும்
➤மிதுனம் – பாசம் கூடும்
➤கடகம் – செலவு உண்டு
➤சிம்மம் – அனுகூலம்
➤கன்னி – நலம் பெருகும்
➤துலாம் – பெருமை
➤விருச்சிகம் – வரவு
➤தனுசு – கோபம் ➤மகரம்- சிந்தனை
➤கும்பம் – சாந்தம் ➤மீனம் – அமைதி
ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தவெக வலியுறுத்தியுள்ளது. கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவும் மத்திய பாஜக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தவெக, தென் தமிழகத்திற்கு ஆபத்து தரும் சுரங்க திட்டங்களை கைவிடவும் கோரிக்கை வைத்துள்ளது.
பிக் பாஸ் 8வது சீசன் கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை ரவீந்தர், ஆரவ், தர்ஷா குப்தா வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் சிவகுமார், ரியா தியாகராஜன், ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி நாராயணன் ஆகிய 5 பேர் இன்று Bigg Boss வீட்டிற்குள் நுழைந்துள்ளார். போட்டி இனி மேலும் பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது.
காலை எழுந்தவுடன் முதல் வேலையாக மொபைல் பார்ப்பவரா நீங்கள்? அப்ப இது உங்களுக்குதான். காலை எழுந்ததும் மொபைல் பார்க்கும் பழக்கம் நமது மன அழுத்தத்தை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவில் வரும் மெசேஜ்கள், தவறவிட்ட செய்திகள் ஆகிவற்றை ஒட்டுமொத்தமாக காலையில் படிக்கும்போது அது தேவையற்ற மனப்பதற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் அன்றைய நாள் முழுவதும் நாம் ஒருவித அழுத்தத்திலேயே இருக்க நேரிடுகிறது.
Sorry, no posts matched your criteria.