news

News November 4, 2024

Breakup செய்த காதலனுக்கு விஷம் வைத்த சிறுமி

image

நைஜீரியாவில் Breakup செய்த காதலனுக்கு, 16 வயது சிறுமி விஷம் வைத்த சம்பவம் நடந்துள்ளது. காதலனை பழிவாங்க சூப்பில் சிறுமி விஷம் வைத்துள்ளார். இது தெரியாத காதலன், அதை தனது நண்பர்கள் 4 பேருக்கு பகிர்ந்துள்ளார். சூப் குடித்த 5 பேரும் உயிரிழந்தனர். பலியான ஒருவரின் பெற்றோர், மகனை காண வீட்டிற்கு சென்றபோது இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த சிறுமியை போலீசார் கைது செய்தனர்.

News November 4, 2024

கோடி கோடியாக கொட்டும் பணமழை

image

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அந்நிறுவனத்தின் ₹300 கோடி மதிப்பிலான பங்குகளை தற்போது விற்றுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் ₹1,300 கோடி மதிப்பிலான பங்குகளை அவர் விற்றுள்ளார். மேலும், அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை, இந்த வாரம் 7% வளர்ச்சியை கண்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் பங்குகளின் விலையால், பெசோஸின் சொத்து மதிப்பு ஆண்டுக்கு $42.8 பில்லியன் என்ற அளவில் உயர்ந்து வருகிறது.

News November 4, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: விருந்தோம்பல் ▶குறள் எண்: 90 ▶குறள் : மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. ▶ விளக்க உரை: அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர். SHARE IT.

News November 4, 2024

காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்

image

ஜம்மு & காஷ்மீரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கவலை அளிப்பதாகவும், பொதுமக்களை குறிவைப்பதை நியாயப்படுத்த முடியாது எனவும் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.

News November 4, 2024

UCC-யில் பழங்குடிகள் இல்லை: அமித்ஷா

image

பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை (UCC) ஜார்கண்டில் அமல்படுத்துவோம் எனவும், ஆனால் பழங்குடியினர் அதன் வரம்புகளுக்கு வெளியே வைக்கப்படுவர் என்றும் அமித்ஷா அறிவித்துள்ளார். UCC-ஆல் பழங்குடிகளுக்கு ஆபத்து என எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், 2.87 லட்சம் அரசு வேலைகளை உருவாக்குவோம் எனவும் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்துள்ளார்.

News November 4, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவ. 4 (ஐப்பசி 18) ▶திங்கள் ▶நல்ல நேரம்: 06:15 AM – 07:15 AM, 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 09:15 AM – 10:15 AM, 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 PM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM ▶திதி: த்ரிதியை ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ நட்சத்திரம்: அனுஷம் ▶சந்திராஷ்டமம்: பரணி.

News November 4, 2024

‘லியோ 2’ வருமா..? லோகேஷ் பதில்..!

image

2023-ல் வெளியான ‘லியோ’ படத்தில், அடுத்த பாகத்திற்கான சில Hint-கள் இருக்கும். ஆனால், இது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை. லோகேஷ் மற்ற படங்களில் பிஸியாக, விஜய்யோ கடைசி படத்தை அறிவித்துவிட்டார். இந்நிலையில், ‘லியோ 2’ வருமா என லோகேஷிடம் கேட்கப்பட்டதற்கு, அதை விஜய் தான் முடிவு செய்ய முடியும் எனவும், அவர் ok சொன்னால் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 4, 2024

முதல் மனைவியை 50 முறை குத்திய 2ஆவது மனைவி

image

ம.பியில் கோர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ராம்பாபு வர்மா என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். தீபாவளி அன்று மனைவிகளுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2ஆவது மனைவி மானசி (22), முதல் மனைவியான ஜெயாவை (26) 50 முறை கத்தியால் குத்தி கிழித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாஸ்பிடலில் ஜெயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் மானசியை கைது செய்தனர்.

News November 4, 2024

அமேசானுக்கு அடித்த ஜாக்பாட்..!

image

Amazon நிறுவனம் இந்த ஒரு மாத பண்டிகை காலத்தில், இந்தியாவில் 140 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதில் 70% பேர் 2,3ஆம் நிலை நகரங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் Amazon கூறியுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டைவிட 70% விற்பனை அதிகரித்துள்ளது. சிறு வணிகர்களின் பொருட்கள் 1 நிமிடத்திற்கு 1000 என்ற அளவில் விற்பனையாகியுள்ளது. 4,500 விற்பனையாளர்கள் 10 மடங்கு அதிக விற்பனையை கண்டதாக தெரிவித்துள்ளது.

News November 4, 2024

உலகின் மிக உயர காந்தி சிலை

image

தெலங்கானாவின் முஷி ஆற்றின் கரையில் உலகின் மிக உயரமான மகாத்மா காந்தி சிலை நிறுவப்படும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிறுவப்பட்டிருக்கும் காந்தி சிலைகளின் அளவுகள் மற்றும் வடிவங்கள் குறித்து ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது பிஹார் மாநிலம் பாட்னாவில் உலகின் மிக உயரமான காந்தி சிலை உள்ளது.

error: Content is protected !!