India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது தனது மகனை வைத்து ‘சுள்ளான் சேது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், அந்த படத்தின் இயக்குநர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்ப் வெற்றி பெற வேண்டி, டெல்லியில் இந்து பூசாரிகள் பூஜை செய்து பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். டிரம்ப்பால் தான் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் எனவும், அமெரிக்கா மற்றும் உலகில் உள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் பூசாரி வேத்முர்ஸ்தினானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட், நிலுவை தொகை ₹2 கோடியை தராமல் அடுத்தடுத்து படம் தயாரிப்பதாக, இரண்டாம் குத்து படத்தை தயாரித்த ஃபிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. அந்த வழக்கில், ‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடையும், 18ஆம் தேதிக்குள் பதில் தரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ம.பியைச் சேர்ந்த ரோஹித், மனைவிக்கு சேலை எடுக்க கடைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டே இருக்கவே, எந்த விலையில் சேலை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர் விஷால் கேட்டதற்கு அவர் கடுப்பாகியுள்ளார். மேலும், மனைவி முன் Uncle என கூறவே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்றவர், நண்பர்களுடன் வந்து விஷாலை அடி உதைத்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
LIC-யின் ஜீவன் ஆனந்த் பாலிசியில், ஒரு நாளைக்கு ₹45 வீதம் மாதம் ₹1,358 செலுத்தினால், 35 ஆண்டுகளுக்கு பிறகு ₹25 லட்சம் பெறலாம். அடிப்படை காப்பீட்டுத் தொகை ₹5 லட்சம், முதிர்வுக்குப் பிறகு மறுசீரமைப்பு போனஸ் ₹8.60 லட்சம் மற்றும் இறுதி போனஸ் ₹11.50 கிடைக்கும். பாலிசிதாரர் இறந்தால், நாமினிக்கு இறப்பு பலனில் 125%, பாலிசி முதிர்வுக்கு முன் பாலிசிதாரர் இறந்துவிட்டால், நாமினி காப்பீட்டுத் தொகையை பெறுவார்.
தனக்கு நடந்த வழிப்பறி சம்பவத்தை நிவேதா பெத்துராஜ் பகிர்ந்துள்ளார். அடையார் சிக்னலில் நின்றபோது, சிறுவன் பிச்சை எடுக்க வந்துள்ளான். சும்மா எதுவும் தரமாட்டேன் என கூறவே, ஒரு Book-ஐ நீட்டி ₹50 என்றான். பர்ஸில் இருந்து ₹100 எடுத்ததும், ₹500 கொடுங்க என்று கேட்டுள்ளான். Book வேண்டாம் என பணத்தை வைக்க போனபோது, காருக்குள் Book-ஐ எறிந்துவிட்டு பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராக பேசியிருப்பது வியப்பாக உள்ளதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் பேச்சுக்கு, மக்களிடம் உடனடி வரவேற்பு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் DMK இல்லை. ஆனால் BJP அதை நடைமுறைப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் மணப்பெண் தேடித் தராத Dilmil Matrimony-க்கு நுகர்வோர் நீதிமன்றம் ₹60,000 அபராதம் விதித்துள்ளது. 45 நாள்களில் தனது மகனுக்கு மணப்பெண் பார்த்து தருவதாக கூறியதால், அந்த மேட்ரிமோனியில் விஜயகுமார் என்பவர் ₹30,000 செலுத்தியுள்ளார். ஆனால் நாள்கள் கடந்தும் பெண் பார்த்து தராததாலும், கேட்டால் முறையாக பதிலளிக்காமலும் இருந்ததால் விஜயகுமார் நீதிமன்றத்தை நாடவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
*பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் வலிமையானவர்களின் பண்பு. *நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களைக் கொன்றுள்ளது. *நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள். *நாளைக்காக சிந்தியுங்கள் ஆனால் இன்றைக்காக செயல்படுங்கள். *உங்கள் அனுமதியின்றி உங்களை புண்படுத்த முடியாது. *கூட்டத்தில் நிற்பது எளிதானது ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.
‘கோரிப்பாளையம்’, ‘சாட்டை’, ‘அப்புச்சி கிராமம்’ படங்களில் நடித்தவர் சிவாசிகா. ‘லப்பர் பந்து’ படத்தில் ‘கெத்து’ மனைவியாக அவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், மாலத்தீவுக்கு தனது கணவருடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட, லைக்குகள் குவிந்து வருகின்றன. பாவம் கெத்து என ரசிகர்கள் ‘உச்’ கொட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.