news

News November 4, 2024

ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

image

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸி., 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பாக்., 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய ஆஸி., 204/8 ரன்கள் எடுத்து வென்றது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கம்மின்ஸ் (32*) அணியை வெற்றி பெறச் செய்தார்.

News November 4, 2024

விஜய்யின் முதல் போராட்ட அறிவிப்பு.. மாஸ்

image

தவெக மாநாட்டுக்கு பின்னர் விஜய் பல அதிரடியில் இறங்க திட்டமிட்டுள்ளார். இதன் முதல்கட்டமாக, போராட்டத்தில் குதிக்க விஜய் முடிவு செய்துள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கோரி, விஜய் தலைமையில் தவெக மாபெரும் போராட்டத்தில் விரைவில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவ மக்கள் மத்தியில் விஜய்க்கு அதிக செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 4, 2024

முட்டை சாப்பிட்டு உயிரிழந்த நபர்..உஷாரா இருங்க

image

ஆந்திராவில் ஒருவர் முட்டை சாப்பிட்டு மரணம் அடைந்துள்ளார். கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த திருப்பதியையா என்பவர், பேருந்து நிலையத்தில் இருந்த போது பசியெடுக்க முட்டையை வாங்கி உண்டுள்ளார். அது அவரின் தொண்டையில் சிக்கி கொள்ள, நிலை தடுமாறி விழுந்து இறந்துள்ளார். மருத்துவர்கள் பலரும் சாப்பிடும் போது, உணவில் கவனத்தை வைத்து சாப்பிடும் படி அறிவுறுத்தி வருகிறார்கள். சாப்பிடும் போது கவனமா இருந்துக்கோங்க…

News November 4, 2024

ஒருபக்கம் அழிக்க ஆயுதம்; இன்னொரு பக்கம் சமாதானம்

image

‘நான் அமெரிக்க அதிபரானால் பாலஸ்தீனத்தில் அமைதியை கொண்டு வருவேன்’ என ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ், தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்துள்ளார். ஒட்டுமொத்த உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் பேரழிவுக்கு ஆயுத உதவி, நிதியுதவி & ராஜதந்திர ஆதரவை தந்து வருவதே கமலா ஹாரிஸின் அரசு தான். இவர் அமைதியை கொண்டு வருவாரா என எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

News November 4, 2024

திமுகவை விமர்சிக்கவே விஜய் கட்சி: முத்தரசன்

image

திமுகவை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் தான், அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் பேட்டியளித்த அவர், விஜய் அறிவித்துள்ள கொள்கைகளை பார்க்கும்போது, அரைத்த மாவையே திரும்ப அரைப்பது போன்று உள்ளதாகவும், தொடர்ந்து இப்படியே செய்தால் மாவு வீணாகிவிடும் என்றும் விமர்சித்தார்.

News November 4, 2024

கிளம்பிய எதிர்ப்பு.. இந்தியை நீக்கியது தமிழக அரசு!

image

மகளிர் உதவி கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் சேர, தமிழ், ஆங்கிலம், இந்தி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு விளம்பரம் வெளியிட்டது. இதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், இந்தி கட்டாயம் என்பதை தற்போது தமிழக அரசு நீக்கியுள்ளது. மேலும், தவறுதலாக விளம்பரம் செய்த இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கீதாஜீவன் விளக்கமளித்துள்ளார்.

News November 4, 2024

Diabetes இருக்கிறவர்களுக்கு சூப்பர் நியூஸ்…

image

இங்கிலாந்து, டென்மார்க் விஞ்ஞானிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ‘NNC 2215’ என்ற Smart Insulin-ஐ உருவாக்கியுள்ளனர். இது உடலில் மாறும் சர்க்கரை அளவுகளுக்கு ஏற்ப செயல்படும் எனப்படுகிறது. அதாவது, ஊசி போட்ட பிறகு, இன்சுலின் தேவைக்கேற்ப வேலை செய்கிறது. சோதனைகளை முடிந்த, இது சந்தையை அடைய நீண்ட காலம் எடுக்கலாம் எனப்படுகிறது. உலகில் சர்க்கரை நோயாளிகளில் 17% பேர் நம் நாட்டில் உள்ளனர்.

News November 4, 2024

நாடு முழுவதும் இடைத்தேர்தல் தேதி மாற்றம்

image

நாடு முழுவதும் 14 தொகுதிகளுக்கு நடைபெற இருந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 14 தொகுதிகளுக்கு நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதியில் சில மாநிலங்களில் திருவிழாக்கள் நடைபெற இருந்ததால், தேர்தல் தேதியை நவ.20க்கு தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது.

News November 4, 2024

நிர்வாகி கொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

image

சிவகங்கை மாவட்ட அதிமுக கிளை செயலாளர் கொலை செய்யப்பட்டதற்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். ADMK நிர்வாகி முன்பகையால் தாக்கப்படுவதற்கான அபாயம் இருந்தும், எதிரிகளை முன்னெச்சரிக்கையாக கையாளவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், இதுபோன்ற கொலைக்கு மாவட்ட காவல் துறையே பொறுப்பு என்றும் கூறினார். இதுபோன்ற முன்விரோத தாக்குதல் நடைபெறாமல் தடுக்க அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

News November 4, 2024

யாராவது கட்சி ஆரம்பிச்சாலே பாஜக பி டீம்மா? எச்.ராஜா

image

மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூறும் விஜய், எப்படி பாஜகவின் பி டீம் ஆவார்? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சீமானை பாஜகவின் ‘பி டீம்’ என இதுவரை கூறி வந்தார்கள், தற்போது விஜயை பி டீம் என்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு கட்சிக்கு இத்தனை பி டீம் இருந்தால் அந்த கட்சி தாங்காது எனத் கிண்டலாகத் தெரிவித்தார். திராவிட அரசியல் பேசும் யாரையும் பாஜக ஏற்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!