news

News November 4, 2024

22 ஆண்டுகளை நிறைவு செய்த ‘வில்லன்’

image

அஜித் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘வில்லன்’ படம் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அன்றைய தினம் வில்லன், பகவதி, ரமணா, படை வீட்டு அம்மன், சொல்ல மறந்த கதை, கேம், காதல் அழிவதில்லை, ஆண்டிப்பட்டி அரசம்பட்டி ஆகிய 8 படங்கள் வெளியானது. அதில் வில்லன், ரமணா ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட் பண்ணுங்க.

News November 4, 2024

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் பயன்கள்…

image

பின்னோக்கி நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆய்வில் சொல்லப்பட்டவை தெரியுமா? * முழங்கால் வலி, வீக்கம் குறையும் * கால் காயம், கீழ்வாதம் உள்ளவர்கள் பின்னோக்கி நடப்பது நல்லது * முதுகு வலிக்கு தீர்வு கிடைக்கும் * கால்கள் வலுவாகும் * உடலின் பின் பகுதியில் சேரும் கொழுப்பு குறையும் * பின்னோக்கி நடக்கும்போது மனம் அதிக கவனம் செல்லுவதால், மூளைக்கும் நல்ல பயிற்சி. நீங்களும் இனி இத Follow பண்ணுங்க..

News November 4, 2024

₹150 கோடி.. வசூலில் அசத்தும் அமரன்

image

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம், 4 நாளில் ₹150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த ராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்ததுடன், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தீபாவளியன்று ரிலீஸான படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 4, 2024

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-பெங்களூரு மோதல்

image

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ்-பெங்களூருடன் இன்று மோதவுள்ளன. தலைவாஸ் அணி 3 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரு புல்ஸ் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 7 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஐதராபாத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாடவுள்ளன.

News November 4, 2024

நான் உள்துறை அமைச்சராக வேண்டுமா? பொங்கிய பவன்

image

ஆந்திராவில் பாலியல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ள துணை முதல்வர் பவன் கல்யாண், தான் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் எனத் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அனிதா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய பவன், நிலைமை இப்படியே சென்றால், தானே உள்துறை அமைச்சருக்கான பொறுப்பை கையிலெடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.

News November 4, 2024

ஓலாவுக்கு ரூ.1.7 லட்சம் அபராதம்

image

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரிகள் தரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சுனில் என்பவர் இதுகுறித்து ஓலாவுக்கு பலமுறை புகார் அளித்தும், நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். விசாரித்த நீதிமன்றம் ஓலாவுக்கு ரூ.1.73 லட்சம், நுகர்வோரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கேள்வி கேளுங்கள்!

News November 4, 2024

நாளை பணம் அனுப்ப முடியாது: வங்கி அறிவிப்பு

image

HDFC வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளையும் (நவ.5), நவ.23-ம் தேதியும் HDFC வங்கியின் UPI சேவை 2 மணிநேரத்திற்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே. மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் பிற்பகல் 12 முதல் 2 மணி வரை G Pay, Mobile Banking, Paytm, Whatsapp pay, Mobikwik உள்ளிட்டவற்றில் பணம் அனுப்ப முடியாது.

News November 4, 2024

சட்டப்பிரிவு 370: பாஜக கடும் எதிர்ப்பு

image

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய அரசு அமைந்த பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது பிடிபி எம்எல்ஏ வஹீத் பாரா சட்டப்பிரிவு 370 தீர்மானத்தை முன்மொழிந்தார். இதற்கு பாஜக MLA-க்கள் 28 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீர்மானத்தை அங்கீகரிக்கவில்லை என சபாநாயகர் அறிவித்தார்.

News November 4, 2024

பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழப்பு

image

உத்தராகண்ட் மாநிலம் மார்ச்சுலா என்ற இடத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பேருந்தில் 50 பேர் பயணித்த நிலையில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். NDRF, SDRF மற்றும் உள்ளூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில CM தலா ₹4 லட்சம் நிதி அறிவித்துள்ளார்.

News November 4, 2024

விஜய் study பண்ண வேண்டும்: வானதி சீனிவாசன்

image

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை விஜய் எதிர்ப்பது ஆச்சரியமாக உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். விஜய் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதால் விஜய்யும் அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு விஷயத்தையும் விஜய் study பண்ணி பேச வேண்டும் என்றார்.

error: Content is protected !!