news

News November 4, 2024

இந்த ஜூஸ் குடித்தால் BP குறையும்

image

தினசரி 250 மிலி அளவில், ஒருமாதம் தொடர்ந்து பீட்ரூட் ஜுஸ் வந்தால் உயர் ரத்த அழுத்தம் (BP) குறையும் என லண்டன் ராணி மேரி பல்கலை., ஆய்வில் தெரிய வந்துள்ளது. பீட்ரூட் மற்றும் இலைக் காய்கறிகளில் உள்ள அதிக நைட்ரேட் சத்துதான் BP குறைய காரணமாகிறது. ஆனால், தினசரி பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை நிறுத்தினால், அடுத்த 2 வாரங்களில் மீண்டும் BP பழைய நிலைக்கு வந்துவிடும். இதை ட்ரை செய்யும்முன், மருத்துவரை ஆலோசிக்கவும்.

News November 4, 2024

புனேரி பால்டன் அணி அபார வெற்றி

image

ப்ரோ கபடி லீக் தொடரில், புனே அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியை புனேரி பால்டன் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 49-30 என்ற புள்ளி கணக்கில் புனேரி அணி வெற்றி பெற்றது. இதேபோல, மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறுமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 4, 2024

அதிகமாக செல்போன் பார்ப்பவரா நீங்கள்..?

image

செல்போனை நீண்டநேரம் பார்ப்போருக்கு நாளடைவில் கண் நீர் அழுத்த நோய் வரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாததுதான் இதில் கொடுமையான விஷயம். இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. நாளடைவில் கண் பார்வை மொத்தமாக பறிபோய்விடும். மின்விளக்கை பார்த்தால் சுற்றி வளையங்கள் தெரிவது, தலை வலி, ஒரு பொருளை பார்த்தால் நடுப்பகுதி மட்டும் தெரிவது ஆகியவையே இதன் ஆரம்ப அறிகுறிகள். Share It.

News November 4, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் mudhalvarmarunthagam.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்று மக்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. B.Pharm, D.Pharm சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

News November 4, 2024

சொந்தமாக தீவு வாங்கிய நடிகை

image

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டிலேயே 3.5 கோடிக்கு சொந்தமாக இலங்கையில் ஒரு தீவை வாங்கியுள்ளார். நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவில், ரிலாக்ஸ் செய்ய வசதியாக ஒரு ஆடம்பர வில்லா கட்ட திட்டமிட்டுள்ளாராம். இவருக்கு மும்பையில் ஜூஹுவில் ரூ.7 கோடி மதிப்பில் ஃப்ளாட் உள்ளது. மோசடி வழக்கில் சிறையில் உள்ள சுகேஷின் கேர்ள்பிரண்ட் இவர் என்றும் சொல்லப்பட்டது.

News November 4, 2024

அதிகார மிக்க தலைவர்கள் பட்டியலில் ஸ்டாலின்

image

இந்தியாவில் அதிகார வலிமை மிக்க 20 அரசியல் தலைவர் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 8ஆவது இடத்தில் உள்ளார். இந்தியா டுடே வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அமித்ஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர், ராகுல் காந்தி (4) மற்றும் சந்திரபாபு நாயுடு 5ஆவது இடத்திலும் உள்ளனர். நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் முறையே 6 மற்றும் 7ஆவது இடங்களில் உள்ளனர்.

News November 4, 2024

தடுப்பூசிக்கு தடை விதிப்பாரா டிரம்ப்?

image

அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டால், தடுப்பூசிகளுக்கு தடை விதிப்பார் என்று கூறப்படுகிறது. தடுப்பூசிகளை எதிர்க்கும் ராபர்ட் எப்.கென்னடி ஜூனியர், தற்போது டிரம்புக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார். அவரது கருத்துகளை ஆதரித்துள்ள டிரம்ப், மருத்துவ விஷயங்கள் பற்றி கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளதால் தடுப்பூசிகளுக்கு தடை, குடிநீரில் இருந்து ஃப்ளூரைடை நீக்குவது போன்ற முடிவுகள் எடுக்கக்கூடும்.

News November 4, 2024

வெறுப்பை இவர்கள் தான் பரப்புகிறார்கள்: பிரியங்கா

image

அதிகாரத்தில் இருக்க விரும்புவோர் தான் வெறுப்பு, கோபத்தை பரப்புவதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். வயநாடு பிரசாரத்தில் பேசிய அவர், கனமழையால் இங்கு ஏற்பட்ட பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்கியதாக விமர்சித்தார். மேலும், வயநாட்டில் உள்ள பிரச்னைகளை நன்கு புரிந்து கொள்ளவும், நீடித்த தீர்வுக்கான வலுவான திட்டத்தை உருவாக்கவும் தன்னிடம் இலக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

News November 4, 2024

குருவின் பார்வை: 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

image

ரிஷப ராசியில் இருந்து அடுத்த ஆண்டு மிதுன ராசியில் குரு பகவான் நுழைகிறார். பலனடையும் ராசிகள். 1) மேஷம்: கல்வியில் முன்னேற்றம். நிதிநிலை வலுவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். 2) மிதுனம்: திருமண வாழ்க்கை அற்புதமாகும். செல்வம் சேரும். புதிய தொழில் தொடங்கலாம். 3) சிம்மம். வருமானம் கூடும். பணம் – குடும்ப கஷ்டம் தீரும். 4) துலாம். நீண்டகால வழக்கு சாதகமாக முடியும். சிக்கலில் இருந்த பணம் வரும்.

News November 4, 2024

விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறும் சிராஜ்

image

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் சமீப காலமாக டெஸ்டில் தடுமாறி வருகிறார். 2023 முதல் அவர் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். வெளிநாட்டில் 5 டெஸ்ட்டில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், சொந்த மண்ணில் 11 டெஸ்டில் 13 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான BGT தொடரில் அவரது பவுலிங் எடுபடுமா?

error: Content is protected !!