news

News November 5, 2024

New York வாக்குச்சீட்டில் இடம்பெற்ற ஒரே இந்திய மொழி

image

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில், நியூயார்க் மாகாண வாக்குச்சீட்டுகளில் பெங்காலி மொழி இடம்பெற்றுள்ளது. அம்மாகாண வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்ற ஒரே இந்திய மொழியும் பெங்காலி தான். அம்மொழி பேசும் வாக்காளர்களுக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலம் தவிர்த்து மொத்தம் 4 மாற்று மொழிகள் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

News November 5, 2024

ஃபேமிலி சீக்ரெட்டை பகிர்ந்த VJS மகன்

image

தங்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவது அம்மா மற்றும் தங்கை என்ற இரு பெண்களே என விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தெரிவித்துள்ளார். அந்த இருவர்தான் குடும்பம் உற்சாகமாக இருக்க காரணம் எனவும் கூறியுள்ளார். மேலும், அப்பா தன்னுடைய ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் தன்னுடன் நிறைய நேரம் விவாதிப்பார் எனவும் அதன் காரணமாகவே தனக்கு சினிமா ஆசை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 91 ▶குறள் : இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். ▶ விளக்க உரை: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

News November 5, 2024

டிரம்ப் vs கமலா: இன்று தொடங்கும் யுத்தம்!

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். மொத்தம் 538 எலக்ட்ரால் காலேஜ் ஓட்டுகள் உள்ளன. இதில் 270க்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்திய நேரப்படி இன்று மாலை 5.30க்கு வாக்குப்பதிவு தொடங்கும்.

News November 5, 2024

ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி இழப்பு

image

அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் உலக நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்தது. அதன் காரணமாக ₹6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 941.88 புள்ளிகள் குறைந்து 78,782.24 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 23,995.35 புள்ளிகளுடன் முடிவுற்றது.

News November 5, 2024

இந்தியர்களுக்கு Offer அறிவித்த தாய்லாந்து

image

இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கான காலக்கெடுவை அந்நாட்டு அரசு காலவரையின்றி நீட்டித்துள்ளது. வரும் 11ஆம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 60 நாள்கள் தாய்லாந்தில் தங்கலாம். தேவைப்பட்டால் அங்குள்ள Immigration அலுவலகம் சென்று மேலும் 30 நாள்களுக்கு தங்கள் இருப்பை நீட்டித்து கொள்ளலாம்.

News November 5, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவ. 5 (ஐப்பசி 19) ▶செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM, 04:30 PM – 05:00 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM, 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:30 PM – 04:30 PM ▶ எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM ▶திதி: சதுர்த்தி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு ▶ பரிகாரம்: பால் ▶ நட்சத்திரம்: கேட்டை ▶சந்திராஷ்டமம்: கார்த்திகை.

News November 5, 2024

‘KING’ கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

image

தனது கிரிக்கெட் கெரியரின் மோசமான தருணத்தில் கோலி உள்ளார். நியூஸி.,க்கு எதிரான 3 டெஸ்ட்களிலும் சொற்ப ரன்களில் வெளியேறி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். அதற்காக அவர் செய்த உலக சாதனைகளை, இந்தியாவிற்காக வென்று கொடுத்த கோப்பைகளை நாம் மறந்து விட முடியுமா? தோனி மூலம் இந்தியாவின் நிதானத்தை உலகம் எப்படி வியந்து பார்த்ததோ, அதேபோல் இந்தியாவின் Aggerssive திமிரை கோலி காட்டினார். Happy Birthday Kohli

News November 5, 2024

இந்த Mindset-தான் தோல்விக்கு காரணம்: கவாஸ்கர்

image

இந்திய அணியினரின் Attacking Mindset தான் நியூஸி., உடனான தோல்விக்கு காரணம் என சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ஒருநாள் போட்டிக்குத்தான் Attacking Mindset தேவை. டெஸ்ட் போட்டிக்கு பொறுமை அவசியம். 3 பால்கள் டாட் வைத்துவிட்டு அடுத்த பாலை அடிக்க பாய்வதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பொறுமையுடன் ஆடுவதால் தான் புஜாரா, ரஹானேவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

‘தளபதி 69’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

image

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 69’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு தவெக மாநாட்டிற்கு சென்றுவிட்டார் விஜய். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!