India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரத்தன் டாடாவிற்கு காதலி இருந்ததும், இந்தியா – சீனா இடையிலான போரால் அவர்கள் திருமணம் நின்றதும், அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகமான Ratan Tata: A Life மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் படித்த போது, கரோலின் என்ற பெண்ணை டாடா காதலித்தார். பாட்டிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் 1962-ல் அவர் இந்தியா வந்துள்ளார். கரோலின் இந்தியா கிளம்ப நினைக்கையில் சீனப் போர் தொடங்கியுள்ளது.
சென்னையில் நேற்று பேட்டியளித்த H.ராஜா கூறியதாவது: *விஜய் கட்சியின் தீர்மானங்களை பார்க்கும் போது, பேசாமல் அவர் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என தோன்றுகிறது. *அஜித் கிடைக்கமாட்டாரா என திமுக முயற்சி செய்து வருகிறது. *Dravidian Stock இருக்கும் இடங்கள் எல்லாம் வடிகட்டிய முட்டாள்கள் இருக்கும் இடம். *ஈவேரா ஒரு காட்டுமிராண்டி. *திராவிட கட்சிகள் வளர்ந்ததே சினிமாவால் தான்.
‘ஜெய் பீம்’ படத்தை OTT-யில் வெளியிட்டது தவறான முடிவு என சூர்யா தெரிவித்துள்ளார். ‘அண்ணாத்த’ படம் பார்க்க தியேட்டருக்கு போனபோது, ‘ஜெய்பீம்’ படத்திற்கான டிக்கெட் குறித்து ஒரு முதியவர் விசாரித்துக் கொண்டிருந்ததாகவும், அவரிடம் OTT-யில் படம் ரிலீசானதாக கூறியபோது அப்படியென்றால் என்ன என கேட்டதாகவும் சூர்யா கூறியுள்ளார். அப்போதுதான் தான் தவறாக முடிவு எடுத்துவிட்டதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
டிக்கெட் முன்பதிவு, உணவு ஆர்டர், புகாரளிக்க என ரயில் சேவைகளை பெற பயணிகள் பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இதையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரே செயலியில் சேவைகளை கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ₹100 கோடி செலவில் ‘சூப்பர் ஆப்’ என்ற செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*1917 – விளாதிமிர் லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். *1945 – சுபாஸ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டெல்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. *2007 – ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியிடப்பட்டது. *2013 – இந்தியா மங்கள்யான் திட்டத்தைத் தொடங்கியது. *உலக சுனாமி விழிப்புணர்வு நாள்.
அரசு பணிக்கு ஹிந்தி கட்டாயம் என தமிழக அரசு அறிவித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அறிவிப்பு வெளியிட்ட அதிகாரி உடனே சஸ்பென்ட் செய்யப்பட்டதாகவும், ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதை பார்த்தால் பரிதாபமாக இருப்பதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் குறித்து தங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ₹60 கோடிக்கு நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம், SK-வின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.
நாய் திருடர்கள் 4 பேரை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 19 நாய்களை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், தெரு மற்றும் வீட்டு நாய்களை கடத்தி விற்கும் Organized Network-ஐ சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அண்டை மாநிலமான நாகாலாந்தில் நாய் கறிக்கு அதிக டிமான்ட் இருப்பதால், இந்த கடத்தல் நடைபெறுகிறது.
*கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது. *சிலரின் வன்முறைகள் அல்ல, பலரின் மெளனங்களே என்னைப் பயமுறுத்துகின்றன. *நீங்கள் முழு படிக்கட்டுகளையும் பார்க்க வேண்டியதில்லை, வெறுமனே முதல் அடியை எடுத்துவையுங்கள். *ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே. *நான் அன்போடு ஒட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வெறுப்பு என்பது தாங்க முடியாத ஒரு சுமை.
கனடாவில் இந்துக்கள் மீது ஏவப்பட்ட வன்முறை இதயத்தை தாக்குவதாக பவன் கல்யாண் வேதனை தெரிவித்துள்ளார். உலகின் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதாகவும், உலக தலைவர்கள் இன்னும் ஏன் அமைதிகாக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்துக்களின் துன்பங்களை உலகம் ஒப்புக்கொள்ளவும், நிவர்த்தி செய்யவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.