India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா இன்று அறிவிப்பார் என எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். அண்மையில், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த பிரேமலதா கூட்டணி தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தார். கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் நிலையில், இரவு 7 மணி அளவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மகளிர் பிரீமியர் லீக் டி20 போட்டி இன்று முதல் பிப்.5 வரை நடைபெறுகிறது. நவி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் MI-யுடன் RCB அணி மோதுகிறது. முன்னதாக மாலை 6:45 மணிக்கு துவங்கும் கலை நிகழ்ச்சியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், யோயோ ஹனிசிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். WPL தொடரின் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா ஆப் மற்றும் அதன் இணையதளத்திலும் லைவ்வாக பார்க்கலாம்.

விஜய்யின் ‘<<18806253>>ஜனநாயகன்’ படத்திற்கு U/A<<>> தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தணிக்கை வாரியம் சார்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காணொலி வாயிலாக ஆஜராகி வாதாடவுள்ளார். வழக்கின் விசாரணை, பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.

சென்னையில் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் தொடர்மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னைக்கு நாளை கனமழை அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் விவகாரத்தில் பாஜகவுக்கு தொடர்பில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தணிக்கை வாரியம் என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு. அவர்கள் என்ன நினைக்கிறார்கள், படத்தில் என்ன பிரச்னை என்று உங்களுக்கும், எனக்கும் தெரியாது என்றார். மேலும், தவெக கூட்டணிக்காக ஜனநாயகனுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

‘உங்க கனவ சொல்லுங்க’ நிகழ்ச்சியில் பேசிய <<18807425>>CM ஸ்டாலின்<<>>, அதிமுக ஆட்சியில் தொழில் நிறுவனங்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட்டு தலைதெறிக்க ஓடியதாக விமர்சித்தார். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் ₹10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆட்சியில் இருக்கும்போது ‘ஆமா சாமி’ என TN-ஐ அடகு வைத்த அதிமுக, எதிர்க்கட்சியான பிறகு உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் சாடினார்.

தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், அரியலூர், சென்னை, செங்கை, கடலூர், காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?

NDA கூட்டணியில் பாமக (அன்புமணி) இணைந்துவிட்ட நிலையில், ஸ்டாலினின் ஆட்சி நன்றாக உள்ளது என திமுக கூட்டணிக்கு அச்சாரமிடும் வகையில் <<18806660>>ராமதாஸ்<<>> பேசியுள்ளது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஒருவேளை ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால், வட தமிழகத்தில் பாமக வாக்குகள் பிரிந்து இரு கூட்டணிகளையும் திக்குமுக்காட வைக்க அதிக வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை விஜய் அறிவித்துள்ளார். இந்த குழுவில் சமீபத்தில் கட்சியில் இணைந்த JCD பிரபாகர் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில் செங்கோட்டையன் பெயர் இல்லை. மேலும் அருண்ராஜ், ராஜ்மோகன், மயூரி உள்ளிட்ட 12 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு TN முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையினை தயார் செய்யவுள்ளது. TVK தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இடம்பெற வேண்டியது என்ன?

ஆஸ்கர் ‘பொது நுழைவு பட்டியலில்’ டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா: சாப்டர் 1 உள்ளிட்ட 5 இந்திய படங்கள் தகுதி பெற்றுள்ளன. பொது நுழைவு என்பது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனுப்பப்படுவது. இது பரிந்துரை அல்ல என்றாலும், முக்கிய பிரிவுகளில் போட்டியிட கிடைத்த முதல் அங்கீகாரம்! RRR-ம் பொதுப்பட்டியலில் இருந்து தேர்வாகியே விருதை வென்றது. ஜன.22-ல் இறுதிப்பட்டியல் வெளியாகும். இந்திய படங்கள் எதுவென அறிய SWIPE!
Sorry, no posts matched your criteria.