news

News November 5, 2024

அம்மனாக நடிக்கும் ஓவியா?

image

நடிகை ஓவியா அம்மன் வேடத்தில் இருக்கும் அவரது புதிய படத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ‘Savior’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், VTV கணேஷ், GP முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜான் பால் ராஜ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். ஹர்பஜன் சிங் நடிக்கும் 3வது தமிழ் படம் இதுவாகும். முன்னதாக டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

News November 5, 2024

பிரதமர் என் வீட்டிற்கு வந்ததில் தவறில்லை: CJI

image

விநாயகர் சதுர்த்தியின்போது PM மோடி என் வீட்டிற்கு வந்ததில் தவறில்லை என உச்சநீதிமன்ற CJI சந்திரசூட் தெரிவித்துள்ளார். நீதி மற்றும் நிர்வாகத் துறைகளுக்கு இடையே அரசமைப்பு சமரசம் ஏற்பட்டதாக எதிர்கட்சிகள் விமர்சித்ததை சுட்டிக்காட்டிய அவர், நிர்வாக துறையை சேர்ந்தவர்களுடன் இதுபோன்ற சந்திப்பு அவ்வப்போது நடப்பதாகக் கூறினார். மேலும், இந்த உரையாடல்கள் வழக்குகள் பற்றியதல்ல, வாழ்க்கை சமூகம் குறித்தது என்றார்.

News November 5, 2024

சிறுமியிடம் அத்துமீறிய போது ஹார்ட் அட்டாக்!

image

குஜராத்தில் செயல்படும் வைர தொழிற்சாலையில் 41 வயது நபர் ஒருவர் மேனேஜராக உள்ளார். இந்நிலையில், அங்கு ஊழியராக பணிபுரியும் 14 வயது சிறுமியுடன் மும்பைக்கு சென்ற அவர், அங்கு 5 ஸ்டார் ஓட்டலில் தங்கியுள்ளார். அப்போது வயாகரா மாத்திரைகளை உட்கொண்ட அவர், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

News November 5, 2024

மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு

image

காவல்துறை அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமாரசாமி மீதான சுரங்க முறைகேடு வழக்கை போலீஸ் ஐ.ஜி.சந்திரசேகர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.ஜி அளித்த புகாரின் பேரில் தற்போது பெங்களூரு சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் குமாரசாமி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News November 5, 2024

முடி கொட்டும் பிரச்னைக்கு தீர்வு தரும் ஹெர்பல் ஆயில்!

image

அடி கனமான பாத்திரத்தில் பாதாம் எண்ணெய்யை ஊற்றி, கொதித்ததும் துளசி, கறிவேப்பிலை, வெற்றிலை, ரோஸ்மேரி, மருதாணி தழைகளைப் போடுங்கள். எண்ணெய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து, கலவையை நன்கு குளிர விடவும். பின்னர், அதை வடிகட்டாமல் கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றவும். இதை 3 நாள்கள் வெயிலில் வைத்த பிறகு பயன்படுத்துங்கள். முடி உதிரும் பிரச்னையை சரிசெய்ய இந்த மூலிகை எண்ணெய் உதவும்.

News November 5, 2024

கஸ்தூரிக்கு எதிராக திரும்பிய பாஜக.. ட்விஸ்ட்

image

தெலுங்கர்களை குறிப்பிட்டு கஸ்தூரி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, தான் அப்படி எதுவுமே கூறவில்லை என அவர் மறுத்தார். இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரிவினைவாத அரசியலை கையிலெடுத்து, தெலுங்கு தமிழர்களின் மனதை புண்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News November 5, 2024

மன்னிப்புக் கேட்டார் நடிகை கஸ்தூரி

image

தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என கூறியதால், கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், “நான் கூறிய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. நான் கூறிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்” என மன்னிப்புக் கேட்டுள்ளார்.

News November 5, 2024

புத்தகம் பேசுகிறது: பெயரிடாத நட்சத்திரங்கள்

image

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்த நிலத்திற்கு படைப்பாளிகள் எழுதிய கவிதைகளையே படித்தவர்களுக்கு, களத்தில் நின்றவர்களின் எழுத்துகள் புதிய வாசிப்பு அனுபவத்தை அளிக்கலாம். இந்த கவிதைகளில் கவித்துவம் & அழகியலை காண முடியாது. மாறாக ஆயுதவெளிக்கு வந்த பெண்களின் மனதில் பொதிந்து கிடந்த வெளியே சொல்லாத வலியை பார்க்க முடியும்.

News November 5, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறு

image

உலக வல்லரசான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க 18 கோடி பேர் வாக்களித்து வருகின்றனர். ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸுக்கும், குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கமலா முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. கமலா ஹாரிஸ் இமெயில் மூலமாக வாக்கை செலுத்தினார்.

News November 5, 2024

ஆஸி. (4-0) வீழ்த்துவது முடியாத காரியம்: கவாஸ்கர்

image

ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கடினம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்தியா அப்படி வெற்றி பெற்றால், தான் நிலவுக்கு சென்றதை போல் உணர்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றாலும் IND கண்டிப்பாக தொடரை கைப்பற்ற வேண்டும் எனவும், அப்போதுதான் ரசிகர்கள் மகிழ்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!