news

News November 6, 2024

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணி வெற்றி

image

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 33-30 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணி வென்றது. 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

News November 6, 2024

ராசி பலன்கள் (6-11-2024)

image

➤மேஷம் – சுகம்
➤ரிஷபம் – பக்தி
➤மிதுனம் – ஓய்வு
➤கடகம் – பரிசு
➤சிம்மம் – பாசம்
➤கன்னி – நட்பு
➤துலாம் – நன்மை
➤விருச்சிகம் – செலவு
➤தனுசு – ஆதரவு ➤மகரம்- வெற்றி
➤கும்பம் – போட்டி ➤மீனம் – பொறாமை

News November 5, 2024

ஐபிஎல் ஏலம்: 1,574 வீரர்கள் பங்கேற்பு

image

ஐபிஎல் ஏலம் சவுதியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 1,574 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதிகபட்சமாக தென்னாப்ரிக்கா 91, ஆஸ்திரேலியா 76, இங்கிலாந்து 52 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவை சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளை சேர்ந்த 409 வீரர்களும் இந்த ஆண்டுக்கான ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News November 5, 2024

33 ஆண்டுகளை நிறைவு செய்த குணா, தளபதி

image

கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான ‘தளபதி’ படங்கள் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. கடந்த 1991ஆம் ஆண்டு நவ.5 ஆம் தேதி இவ்விரு படங்களும் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தன. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளன. இந்த படங்களில் உங்களுக்கு பிடித்த காட்சி (அ) பாடல் எது? கமெண்ட் பண்ணுங்க.

News November 5, 2024

45 பைசாவுக்கு ₹10 லட்சம் காப்பீடு

image

ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக IRCTC புதிய பயணக் காப்பீட்டுக் கொள்கையில் மாற்றங்களை செய்துள்ளது. ரயில் பயணிகளுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் 45 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த காப்பீடு கிடையாது. இ-டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இது கட்டாயம். டிக்கெட்டை முன்பதிவு செய்த பிறகு காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் நாமினி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

News November 5, 2024

டீ வாங்கி கொடுத்து 4 ஆத்து ஆத்துங்க: விஜய பாஸ்கர்

image

2026இல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், திமுக ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 10 பேருக்கு டீ வாங்கி கொடுத்து, திமுக அரசின் மக்கள் விரோத ஆட்சியை பற்றி 4 ஆத்து ஆத்துங்க எனவும் அவர் கிண்டலாக கூறினார்.

News November 5, 2024

மாணவர்களுக்கு மாதம் ₹25,000.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்

image

பழங்குடியினர் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்காக ‘தொல்குடியியல் புத்தாய்வு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தேர்வுபெறும் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு மாதம் ₹10,000 (6 மாதத்திற்கு), முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு மாதம் ₹25,000 (3 ஆண்டுகளுக்கு) வழங்கப்படும். இதற்கு இன்று (நவ.5) முதல் நவ.30 வரை <>ஆன்லைனில்<<>> விண்ணப்பிக்கலாம்.

News November 5, 2024

மீண்டும் இணைந்து விளையாடும் IND – PAK வீரர்கள்?

image

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. Afro – Asia கோப்பை கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2005, 2007ல் இத்தொடர் நடைபெற்றது. அதில் ஆசிய அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

News November 5, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய பாஜக

image

தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் முதல்வர் ஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்டதாக பாஜக புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறுதலாக ஒரு வரியை விட்டுவிட்டதற்கு திமுக – கூட்டணி கட்சியினர் ஒரு வாரத்திற்கு கூச்சல் எழுப்பி கொக்கரித்தனர். ஆனால், கோவையில் இன்று முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடப்படவில்லை” என BJP கூறியுள்ளது.

News November 5, 2024

தனுஷுடன் இணையும் ‘அமரன்’ இயக்குநர்?

image

‘ரங்கூன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை முடித்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!